ஹேப்பி பர்த்டே சென்னை!

புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடம் கிழக்கிந்திய கம்பெனியால் 1639 ஆகஸ்ட் 22-ல் வாங்கப்பட்டது. சில வருடங்களுக்கு பிறகு சிறு கிராமங்கள் விரிவடைந்து சென்னை என்ற மாநகரம் உருவானது. அந்த நாளை மெட்ராஸ் டே என்று கொண்டாடுகிறோம்.
 | 

ஹேப்பி பர்த்டே சென்னை!

சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடம் முன்னொரு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் 1639 ஆகஸ்ட் 22-ல் வாங்கப்பட்டது. அந்தக் கோட்டையைச் சுற்றிச் சிறு சிறு கிராமங்கள் உருவாயின. சில வருடங்களுக்கு பிறகு அவை விரிவடைந்து ஒன்றாக இணைந்து சென்னை என்ற மாநகரம் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

அந்த நாள்தான் சென்னை உருவான நாளாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை என்ற நகரம் உருவாகி 379 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நாள் மெட்ராஸ் டே என்று சென்னைவாசிகள் கொண்டாடி வருகிறோம். ஆங்கிலேயர் காலம் முதல் இன்று வரை பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த பெருமை நம் மெட்ராஸுக்கு உண்டு. 379 வருடங்களுக்கு முன்பு கிரமாமாக இருந்த மெட்ராஸ் இன்று தொழில் நுட்ப வளர்சிகளால் சென்னை என்ற அந்தஸ்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் அவ்வளவாக 'மெட்ராஸ் டே' என்ற கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையின் பிறந்த நாளாக முதல் முறையாக அதிகாரபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேயரும், குறிப்பிட்ட சில உயர் அந்தஸ்து பிரிவினரும் மட்டுமே மெட்ராஸ் டே கொண்டாடினர். சுதந்திரத்திற்குப் பிறகு 1989ம் ஆண்டு 350ம் ஆண்டு மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டது.

சென்னை தினம் கொண்டாடும் ஐடியா மக்களிடம் 2004ம் ஆண்டுதான் ஆரம்பித்தது. 2007ம் ஆண்டு நடந்த சென்னை தினத்தில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையின் பிறந்ததினமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு தினமாக இருந்த கொண்டாட்டம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து தற்போது அதிகபட்சமாக 15 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது.

சென்னையின் முக்கிய அடையாளம் மெரீனா பீச், இது உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்று என்பது குப்பிப்பிடதக்கது.புனித ஜார்ஜ் கோட்டை, நேப்பியர் பாலம், எல்ஐசி கட்டிடம், ஸ்பென்சர் பிளாசா,எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஃபீனிக்ஸ் மால் எனச் சென்னையின் அடையாளங்கள் மாறிக்கொண்டேவரும் நிலையில் மெட்ராஸ் என்ற பெயரை யாராலும் மறந்துவிட முடியாது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP