சுய மரியாதை இழக்கும் காவலர்கள்

காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கையை விட அவர்கள் மீது இருக்கும் பயம் தான் சமுதாயத்தில் ஒழுங்கு முறையை பாதுகாக்கிறது. அடிப்பார்களோ, பணம் பறித்து விடுவார்களோ, பொய் கேஸ் போட்டு உள்ளே வைத்து விடுவார்களோ என்ற எந்த விதமான பயமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
 | 

சுய மரியாதை இழக்கும் காவலர்கள்

காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கையை விட அவர்கள் மீது இருக்கும் பயம் தான் சமுதாயத்தில் ஒழுங்கு முறையை பாதுகாக்கிறது. அடிப்பார்களோ, பணம் பறித்து விடுவார்களோ, பொய் கேஸ் போட்டு உள்ளே வைத்து விடுவார்களோ என்ற எந்த விதமான பயமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சமுதாயத்தில் இந்த பயம் போய்விடக் கூடாது என்பதால் தான் ஏட்டையா மார்க்கெட்டில் பைக் சீட்டில் தட்டுவதும், இளிச்சவாயன் என்று தெரிந்ததும் ஓங்கி அறைவதும்.

இவ்வாறு அவர்கள் சீன் போடாவிட்டால் மக்களின் ஆட்டம் தாங்க முடியாது. அதிலும் போக்குவரத்து விதியை மீறுவதை பிறப்பு உரிமையாக வைத்திருக்கும் சமுதாயம் இது.

வீதியில் இறங்கி பார்த்தால் எந்த வாகனங்களின் நம்பர் பிளேட் விதிமுறைப்படி இருக்கிறது என்று பாருங்கள். இன்னும் சிலர் ஹெல்மெட் கண்ணாடி கம்பியில் மாட்டிக் கொண்டு ஏட்டையாவை எட்டப்பார்த்த பின்னர் தான் தலையில் மாட்டுவார். ஹெல்மெட் போட்டவனை நம்பலாம், ஹெல்மெட் போடாதவனையும் நம்பலாம். கண்ணாடி கம்பியில் ஹெல்மெட் போடுபவனை மட்டும் நம்ப கூடாது. இவர்கள் வாய்ப்பு கிடைத்தால் எல்லா தவறையும் செய்வார்கள்.

போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷம் இடம் விஷயம் செல்போன் வந்த பின்னர் வெகுவாக குறைந்துவிட்டது. முன்பு நிருபர்கள் பத்திரிக்கை போட்டோ கிராப்பர்களிடம் பயந்த காலம் போய், இன்று செல்போன் வைத்திருப்பவர்களிடம் எல்லாம் பயப்பட வேண்டும் என்று சூழ்நிலை. இது காவல்துறை சுயமரியாதை குறையத் தொடங்கிய காலம். சாதாரணமாக போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் நின்று பாருங்கள். அவர்கள் லட்சம் வாங்குவதற்கு இணையாக லஞ்சம் திணிப்பதை வாகன ஓட்டிகள் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியும்.

குறிப்பாக லாரி போன்ற கனரகவாகனங்கள் இயக்குபவர்கள் அவற்றை நிறுத்த சொன்ன உடன் ஆணவங்களை எடுத்து வருவதை விட ரூபாயை எடுத்து வரும் டிரைவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். பெரும்பாலும் போலீசாருக்கும், டூவீலர் ஓட்டுபவர்களுக்கும் இடையில் தான் மோதல் அதிகம். இதற்கு காவல்துறையினரை விட டூவீலர் ஓட்டுபவர்கள் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றனர். எந்த ஆவணமும் எடுத்து செல்வதில்லை.

ஹெல்மெட் அணிவது என்பது ஏதோ சட்ட விரோதம் போன்ற நினைப்பு ஆகியவற்றுடன் தான் டூவீலர் ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள். எத்தனை பேர் வாகனத்தில் போக்குவரத்து விதிமுறைப்படி வாகன எண் எழுதி உள்ளார்கள். இதில் அந்த படத்திலேயே பிரபல அரசியல் தலைவர் படமும் இருக்கும். அதை ஒட்டுபவது அவர்கள் மீதுள்ள பற்றால் கிடையாது, மறைமுகமாக போலீசை மிரட்டுவதற்காகத்தான். இன்னும் சிலரின் வாகனங்களில் தாங்கள் செய்யும் தொழில் தொடர்பான குறியீடுகளை ஒட்டியிருப்பார்கள். அதுவும் கூட மறைமுக மிரட்டல்தான்.

வெளிநாடுகளைப் போல வருமானத்திற்கு ஏற்ப அபராதம் என்ற நிலை ஏற்பட்டால் கூலித் தொழிலாளி, வேலை வாய்ப்பு இல்லாதவர் என்பதற்கான குறியீடுகள் ஒட்டப்படுமே தவிர்த்து ஒரு வாகனத்தில் கூட டாக்டர், வக்கீல், என்று இருக்காது.

உதாரணமாக டாக்டர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 அபராதம், அதே தவறை கல்லுாரி மாணவர் செய்தால் முழங்காலில் 5 லத்தி அடி என்று தீர்ப்பை மாற்றினால் போதும், இரு தரப்பும் திருந்தும். இப்போது உள்ள நிலையில் மைனர் குஞ்சு கணக்காக அட்வான்ஸ் புக்கிங்கில் அபராதம் செலுத்தி விட்டு வாகனத்தில் பரக்கிறார்கள்.

இப்படி சட்டத்தை மதிக்காத சமுகத்தில் தான் லஞ்சம் பிறக்கிறது. லஞ்சம், முறைகேடு, போன்றவற்றை தடுக்க சமுகத்திற்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து காவலர்களின் மரியாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. இதற்கு தொழில்நுட்பமும் உதவி செய்கிறது. முதலில் பணம் பெறுவதற்கு பதிலாக கார்டு மூலம் அபராதம் விதிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. நம்மவர்கள் அபராதத்தை கார்டிலும், லஞ்சத்தை கையிலும் வாங்கி கொண்டார்கள்.

சமீபத்தில் போலீசார் கேமராவை உடலில் கட்டிக் கொண்டு பணியாற்றப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது வரும் என்றால் காவலர்களின் சுய மரியாதையை முற்றிலும் இழக்க செய்யும் செயலாக இருக்கும். இவ்வளவு இழிவாக போலீசாரை நடத்துவற்கு பதிலாக வாகன தணிக்கையையே  கைவிட்டு விடலாம். இது எதிர்பார்த்த பலன் கொடுப்பதை விட விபரீதமான பலன்களை தான் தரும்.

ஒழுக்கம், கட்டுப்பாடு, கீழ்படிதல் போன்றவற்றின் அடிப்படையில் காவல்துறை கட்டமைக்கப்பட்டுள்ள ஒரே காரணத்தால் இது போன்ற நடவடிக்கைகள் சாத்தியமாகிறது. இதை மீறி காவல்துறையினர் எதிர்த்து எழ தொடங்கினால் அது அந்த துறைக்கு ஏற்படும் இழப்பை விட சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்பு அதிகமாக இருக்கும். அது நல்லது அல்ல.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP