அவப்பெயர் நீக்கி இயற்பெயர் மீட்கும் தமிழக அரசு !

இனி தமிழகத்தில் ட்ரிப்ளிகேன் கிடையாது, பூனமல்லி கிடையாது, எக்மோர் கிடையாது, ட்ரிச்சி, டேஞ்சூர், கேப்பகோரின், டூட்டுகோரின்கள் கிடையாது. உண்மையான பெயர்களுடன் மீண்டும் அழைக்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
 | 

அவப்பெயர் நீக்கி இயற்பெயர் மீட்கும் தமிழக அரசு !

தனியொரு மனிதனின் வளர்ச்சிக்கு பூர்வீகம் என்பது மிக மிக முக்கியமானது. அதுவும் பெருமை மிக்க பூர்வீகம் என்றால் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

எ.கா : நம் முன்னோர்கள் வேத, உபநிடதங்கள் மூலம் சொல்லி வைத்திருக்கும் மெய்ஞான அறிவை முழுவதும் படித்து விட்டு, அதன் தொடர்ச்சியாக அடுத்த நிலைக்குச் சென்றிருக்க வேண்டிய தேசம் இது. இடையில் என்ன நடந்தது? அந்நியக் கலாச்சாரத்தின் தாக்கத்தால், விஞ்ஞானத்தின் பக்கம் நகர்ந்து விட்டோம். இயற்பியலில் பிஹெச்டி படித்த நபரை இலக்கியத்தில் எல்.கே.ஜி.க்கு அனுப்பினால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம், நாம் மாறியது. ஏன் மாறினோம்? நம் பூர்வீகப் பெருமை தெரியாததால் தான். குடும்பப் பாரம்பரியமோ, தன் தேச வரலாற்றுப் பெருமை தெரியாத சமூகம் தன் பலம் தெரியாமல் உழன்று கொண்டே திரிய வேண்டியது தான்.

எங்க கிளம்பிட்டீங்க? என்ற கேள்விக்கு  “பூனமல்லி”க்குய்யா என்று ஸ்டைலாக (அப்படினு நினைச்சுட்டு) சொல்லிட்டுப் போயிடுறோம். பின்னாடி நிற்கும் சிறுவர்கள், அந்த ஊருக்கு பெயர் விளக்கமாக, பூனைகள் அதிகம் திரியும் (கொத்த)மல்லிக் காடாக இருந்திருக்கும் போல என்றோ, பூனைக்கண்ணுடைய மல்லிகா டீச்சர் இருந்த ஊர் போல என்று புதிய வரலாற்றை எழுதிட்டுப் போகலாம். “பூவிருந்தவல்லி”(த் தாயார்) பூவில் வீற்றிருக்கும் வல்லித் தாயார் என்ற திருமகளின் உயர்வானப் பெயரைக் கொண்ட ஓர் ஊரை எத்தனைக் கீழ்த்தரமான பெயரைக் கொண்டு உச்சரிக்கிறோம்? ஏன் பூவிருந்தவல்லி என்ற பெயர் வந்தது என்று ஆய்ந்தால் எத்தனையோ பெருமை மிகு விஷயங்கள் வெளியே வரலாம். வரலாற்றுப் பெருமை நம் தாழ்வு மனப்பான்மையை உடைக்கும். உண்மையான உற்சாகம் கொடுத்து நம்மைத் துடிப்புடன் இயங்கச் செய்யும். மேலும் பல சாதனைகள் செய்ய அது வழிவகுக்கும்.
அவப்பெயர் நீக்கி இயற்பெயர் மீட்கும் தமிழக அரசு !
இனி தமிழகத்தில் ட்ரிப்ளிகேன் கிடையாது, பூனமல்லி கிடையாது, எக்மோர் கிடையாது, ட்ரிச்சி, டேஞ்சூர், கேப்பகோரின், டூட்டுகோரின்கள் கிடையாது. உண்மையான பெயர்களுடன் மீண்டும் அழைக்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அவப்பெயர் நீக்கி இயற்பெயர் மீட்கும் தமிழக அரசு !

இத்தனை வருடங்களாக தமிழ் வளர்க்கிறேன், தமிழர்களைப் பெருமை படுத்துகிறேன் என்று தமிழைச் சொல்லி அரசியல் செய்த முன்னாள் முதல்வர்கள் செய்யாமல் விட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்யத் தொடங்கியிருக்கும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழகமெங்கும் கிட்டத்தட்ட மூவாயிரம் இடங்களுக்கான பெயர்களை மாற்றும் முடிவை எடுத்திருப்பது நிச்சியம் நல்லதொரு தொடக்கமாக இருக்கும். நன்றி கலந்த வாழ்த்துகளைப் பகிர்வோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP