கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு நஷ்டம்

அதேபோல அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு மிக உயரிய அதிகாரங்களை கொடுத்து இருக்கும். அவரோ நடைமுறையில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போலதான் இருப்பார். அதே முறைதான் கவனருக்கும்.
 | 

கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு நஷ்டம்

முன்னாள் தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் பேட்டி ஒன்றில் கூறுகையில், " இந்தியா ஒரு வித்தியாசமான நாடு. அரசியல் சட்டத்தில் ஒரு விதமாகவும், நடைமுறையில் ஒரு முறையிலும் செயல்பாடு இருக்கும்" என்பார்.

அதேபோல அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு மிக உயரிய அதிகாரங்களை கொடுத்து இருக்கும். அவரோ நடைமுறையில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போலதான் இருப்பார். அதே முறைதான் கவனருக்கும். 

அரசியல் சாசனத்தில் அவருக்கு அதிகாரம் அதிகம். யாதார்த்தம் அவ்வாறு இல்லை. இதனால் தான் திமுக, கவர்னர் பதவி ஆட்டுக்கு தாடியைப் போலதான்; அந்த பதவியே தேவையே இல்லை என்பார்கள். ஆனால், கவனர் அதிகாரத்தை காட்ட தொடங்கினால் மத்திய அரசு பழிவாங்குகிறது. கவர்னர் அதிகாரதுஷ்பிரயோகம் செய்கிறார் என்று அலறுவார்கள். 

இவர்களுக்கு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ரோசையா போன்றவர்கள் தான் வேண்டும். சென்னாரெட்டி, சண்முகநாதன் போன்றவர்கள் கர்வனராக இருந்தால் எந்த உச்சத்திற்கும் செல்வார்கள் என்பது கடந்த கால வரலாறு. 

கவர்னர், ஆட்சியாளர்கள் போட்டியின் சமீபத்திய உதாரணம் புதுச்சேரி. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னர், முதல்வர் பதவிக்கு ஆள் இல்லாமல் தேடி கண்டுபிடித்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாத 15 நாள் நாராயணசாமியை முதல்வராக்கினர். 

அதே நேரத்தில் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி வந்து அமர்ந்தார். காவல் துறையில் பலருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த அவர், துணை நிலை ஆளுநராக வந்து அமர்ந்ததும் தன் அதிரடியை தொடங்கினார். 

கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு நஷ்டம்

புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கே அலுவலகம் வர வேண்டும். அலுவலக நேரம் முடியும் வரை இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் தவிர்த்து இதர வாகனங்களில் சுழல் விளக்கு அனுமதியை ரத்து செய்தார். முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்காக போக்குவரத்தை தடை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். இதுபோன்ற அதிரடிகள் மக்களுக்கு ஆறுதல் மட்டுமே கூறி ஆட்சி நடத்திய நாராயணசாமிக்கு பலத்த அடியாக இருந்தது. 

புதுச்சேரியில் தொழில் தொடங்குபவர்களுக்கு ஓற்றை சாரள முறையில் அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் தொழில் தொடங்க விருப்புவோர்,  கொடுக்க வேண்டிய லஞ்சம் கணிசமாக குறைந்தது. ஆட்சியாளர்களுக்கு வருமானம் முடங்கியது. அப்புறம் என்ன போர்..போர்... தான். 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூடி ஆலோசனை செய்து; அதன் அடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர்  ஆகியோரை சந்தித்து கிரண்பேடியை மாற்ற வலியுறுத்தினார். ஆனால், தான் ரப்பர் ஸ்டாம்பாக செயல்படவிரும்பும் அரசியல்வாதிகள் தான் தன்னை எதிர்க்கின்றனர் என கூறி கிரண்பேடி அதிரடித்தார். 

பாஜகவினர் 3 பேரை, புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களாக கிரண்பேடி நியமனம் செய்தார். அரசியல்ரீதியாக வலுவாக கட்டமைப்பு இல்லாத பாஜகவில் இருந்து 3 பேருக்கு எம்எல்ஏ பதவி என்பதை யாரும் ஏற்கவில்லை. பின்னர் கோர்ட் வரை சென்று இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

மருத்துக் கல்லுாரியில் மாணவர்கள் நியமனத்திலும் கிரண்பேடி தலையிட்டு ஒழுங்கு முறையை ஏற்படுத்தினார். இரட்.டை ஆட்சி முறைக்கு இணையான ஆட்சி புதுச்சேரியில் நடந்ததால், யார் கூறுவதை கேட்டு நடப்பது என அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். அதே நேரத்தில் மக்களோ நெருக்கடி நிலைக்கு எதிரான நிலையைப் போல நன்மைகளை பெற்றனர். 

இதனால் மக்கள் அவரை வரவேற்றாலும், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். முதல்வரே கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். 

கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு நஷ்டம்
இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், கடந்த 2017ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுகிறார், இதனால் ஆட்சியில் சிக்கல் ஏற்படுகிறது என்று சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. 2017 -ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார். 

கோர்ட் தீர்ப்பு கிரண்பேடியின் கையை தற்காலிகமாக கட்டிப் போடவில்லை; அவரது நடவடிக்கையால் பலன் பெற்ற மாநில மக்களின் கைகளையும் கட்டிப் போட்டுள்ளது. இதற்கு மக்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது தான் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தானே இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் காரணம். 

கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் யாவும், கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

 newstm.in
 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP