பிச்சாவரத்துக்கு போகலாமா?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ளது பிச்சாவரம். வங்க கடலை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இங்கே சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அலையாத்தி காடே உலகின் 2வது மிகப்பெரிய அலையாத்தி காடு என குறிப்பிடப்படுகிறது.
 | 

பிச்சாவரத்துக்கு போகலாமா?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ளது பிச்சாவரம்.   வங்க கடலை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் பித்தர்புரம் என்றிருந்த  பெயரே  பின்னர் பிச்சாவரம் என்று மருவியது. இங்கே சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அலையாத்தி காடே உலகின் 2வது மிகப்பெரிய அலையாத்தி காடு என குறிப்பிடப்படுகிறது . இது  தமிழ்நாட்டிற்கே பெருமைதரக்கூடிய ஒன்று. இப்பகுதி சிறு சிறு தீவுகள் நிறைந்து காணப்படிகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன.

பிச்சாவரத்துக்கு போகலாமா?

இந்தியாவில் இரு இடங்களில் தான் தில்லைவனக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. ஒன்று கொல்கத்தாவை ஒட்டிய கடலோர சதுப்பு நிலப் பகுதியில், இவ்வகையான மாங்குரோவ் காடுகள் அதிகப் பரப்பில் உள்ளன. அதற்கு அடுத்த படியாக   தமிழகத்தில் பிச்சாவரத்தில்தான் தில்லைவனக் காடுகள் உள்ளன. இந்தப் பகுதி  வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.

பிச்சாவரத்துக்கு போகலாமா?

பிச்சாவரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் :

பிச்சாவரம் சிறந்த சுற்றுலாத் தலம், கடலோரத்துக்கு அருகே அமைந்த வனப் பகுதியில் உள்ள எழில் மிகு மாங்குரோவ் காடுகளின் உள்ளே செல்லும் சிறு சிறு,  நீர்வழிப்பாதைகள் மூலம்  படகில் சுற்றிப் பார்த்து மகிழும்  போது பல நினைவுகள் நம்முல் தோன்றும் அளவிற்கு இந்த சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. 
இங்கு சதுப்பு நிலம்,  கடலோடு இணைந்த நூற்றுக்கணக்கான மைல் தூரம் கொண்ட ஆழமற்ற நீர்க் கால்வாய்கள் படகுப் பயணத்துக்குப் பாதை வகுத்துத் தருகின்றன. பிச்சாவரம் உப்பங்கழிப் பகுதியில் சுமார் 1100 நீர்வழிப் பாதைகள் உள்ளன. அவற்றின் ஓரம் பச்சைப்பசேலென்று காணப்படும் சுரபுன்னைக் காடுகள் பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கும்.

பிச்சாவரத்துக்கு போகலாமா?

பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. இந்த மாங்குரோவ்  காடுகளை  சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு,ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் மல்லாமல் கண்ணைக்கவரும் தென்னை மரச் சோலைகள் பார்ப்போரை சொன்ன வைக்கும் அளவிற்க்கு உள்ளது.

பிச்சாவரத்துக்கு போகலாமா?

எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் வர காரணம் எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டதாம். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில், படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பிச்சாவரத்தில் மீன்களை பிடிக்கும் முறையே வித்தியாசமாக இருக்கும் . பிச்சாவரத்தில் காணப்படும் ரம்மியமான சூழலை குடும்பத்தோடு படகுச் சவாரி செய்து ரசிப்பது சொர்கலோக இன்பத்துக்குச் சமானமானது என மக்களால் உணரப்படுகிறது.

பிச்சாவரத்துக்கு போகலாமா?

சுரபுன்னை மரங்கள் :
இங்கு இருக்கும் சுரபுன்னை மரங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும். இவை அற்ப்புதமாக காட்சியளிக்கும்.   சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மையச் சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பிச்சாவரத்துக்கு போகலாமா?

சுற்றுல்லா பயணிகளுக்கான உணவு மற்றும் விடியல்விழா :
இங்கு தங்கி கடல் உணவுகளை சுவைக்கலாம், மேலும் இங்கு கிடைக்கக்கூடிய நண்டு வகைகள், இரால், மீன் வகைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். சிறுவர்களுக்கான சிறந்த பொழுது போக்கு அம்சம் கொண்ட இடமாக பிச்சாவரம் திகழ்கிறது. 

பிச்சாவரத்துக்கு போகலாமா?

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க விடியல் விழா நடத்தப்படுகிறது, இதில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆட்டம், பாட்டத்துடன் கலைவிழா, நீர் விளையாட்டுக்கள், பிற விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவைகளுடன் வெகு விமரிசையாக விடியல் விழா கொண்டாடப்படுகிறது. குடும்பத்தினருடன் வந்து  ரசித்து பார்க்கக்கூடிய மிக சிறந்த இடம்  பிச்சாவரம் ஆகும்.  இந்த அற்புதக் காடுகளின் தன்மையும் அழகும் கெடாவண்ணம் பிச்சாவரத்திற்க்கு வரும்  சுற்றுலா பயணிகளுக்கு மேலும் பல வசதிகளையும் போதிய பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால்  தலைசிறந்த சுற்றுலா மையங்கள் பட்டியலில் இதுவும் இடம்பிடிக்கும் என்பதில் ஐய்யமில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP