உலக்கை அருவி...! அது எங்க இருக்கு...?

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ளதால் இந்த பகுதி முழுவதும் இயற்கை அழகு மிக்கதாகும். கன்னியாகுமரியில் பல்வேறு அருவிகள் இருந்தாலும் மிகவும் மிக்கியமான அருவியாக இருப்பது உலக்கை அருவி தான்.
 | 

உலக்கை அருவி...! அது எங்க இருக்கு...?

உலக்கை அருவி...! அப்படின்னு ஒன்னு இருக்கான்னு கேக்குறீங்களா? நம்ம கன்னியாகுமரி மாவட்டத்துல தாங்க இருக்கு.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ளதால் இந்த பகுதி முழுவதும் இயற்கை அழகு மிக்கதாகும். கன்னியாகுமரியில் பல்வேறு அருவிகள் இருந்தாலும் மிகவும் மிக்கியமான அருவியாக இருப்பது உலக்கை அருவி தான். 
உலக்கை அருவி...! அது எங்க இருக்கு...?
இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டுதான் இருக்கும். காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும். அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன. 
உலக்கை அருவி...! அது எங்க இருக்கு...?
முதலில் நம்மில் பலருக்கு அருவி எங்கே தோன்றுகிறது, எப்படி உருவாகுகிறது என்பது தெரிவதில்லை.  அருவி என்பது, ஆறு போன்ற நீரோட்டம், சடுதியான நிலமட்ட வேறுபாட்டைக் கொண்ட, அரிப்புக்கு உட்படாத பாறை அமைப்புக்களில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் நிலவியல் அமைப்பு ஆகும். நீர்வீழ்ச்சி எனும் சொல் காலப்போக்கில் வாட்டர் ஃபால்ஸ்  எனும் ஆங்கிலத்தில் செயற்கையாக உண்டாக்கிய சொல்லாகும். எனவே வாட்டர்ஃபால்ஸ் என்ற சொல்லுக்கு பதில் அருவி என்று சொல்வதே சரி. 
உலக்கை அருவி...! அது எங்க இருக்கு...?
சில அருவிகள் அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உருவாகின்றன. இதனால், ஆற்றின் நீரோட்டப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுச் சடுதியான, கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும்  ஏற்படுகிறது. அருவிகள் செயற்கையாகவும் உருவாக்கப்படக் கூடும். பொதுவாக இவை பூங்காக்கள், நிலத்தோற்ற வடிவமைப்பு ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுவது உண்டு. இப்படி உருவாகும் நீர்வீழ்ச்சிகள் மட்டுமே அருவி என்கின்றனர். 
உலக்கை அருவி...! அது எங்க இருக்கு...?
இதே போன்று உருவான இந்நீர்வீழ்ச்சி தான் உலக்கை அருவி, இந்த நீர்வீழ்ச்சி  மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும். பூதப்பாண்டியையொட்டியுள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உள்ள இந்த அருவி, மலை உச்சியில், சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக பாய்கிறது. சற்று தொலைவில் இருந்து இதனைப் பார்க்கும்போது ஒரு பெரிய உலக்கைபோல் காட்சிதருவதாகவும், அருவியில் இருந்து கொட்டும் மூலிகை  தண்ணீர் பார்ப்பதற்கு உலக்கை போல் இருப்பதாலும், இந்த அருவி உலக்கை அருவி என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.  
உலக்கை அருவி...! அது எங்க இருக்கு...?
இதனைக் கண்டுகளிக்கவும், ஏராளமான மூலிகைகளுடன் கலந்துவரும் தண்ணீரில் குளித்து மகிழவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டும், அருவியில் நீராடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதியை ஏப்படுத்தி தரவேண்டும் என்பதே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP