விலாங்கு மீனாக வாழும் கனிமொழி!

இவர்களின் தமிழ்வாழ்க கோஷமும் இதற்கு இணையானது தான். வெற்று கோஷத்தால் தமிழ் என்றுமே வாழாது. இந்தி எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஆங்கிலத்தை பாலுாட்டி வளர்த்தவர்கள் இவர்கள். இவர்களால் தான் எனக்கு தமிழ் எழுத, பேச தெரியாது என்று கூறும் நாகரீக சமுதாயம் உருவானது. இவர்கள் ஆட்சியில் அறிவியல் தமிழ் வளர்க்கவோ, அன்றாட தமிழ் வளர்க்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்காக கமிட்டி அமைத்ததுடன் சரி. அதன் முடிவுகள் வரவே இல்லை.
 | 

விலாங்கு மீனாக வாழும் கனிமொழி!


லோக்சபா தேர்தலின் போது நமது வேட்பாளருக்கு இந்தி தெரியும், ஆங்கிலத்தில் பேசி அசத்துவார் என்று கூறி ஓட்டுக் கேட்டார்கள். திமுகவினர் இந்த பிரச்சாரத்தை அதிகம் மேற்கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்றதும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழ் வாழ்க என்று எதிரில் அமர்ந்து இருக்கும் யாருக்குமே முழுமையாக புரியாமல் உணர்வு பூர்வமாக கோஷம் எழுப்பி தங்களின் பற்றை வெளிப்படுத்தினர். இதில் கனிமொழி ஒருபடி மேலே சென்று ஈவே. ராமசாமி நாயகக்கருக்கும் வாழ்க கோஷம் எழுப்பி தங்களின் பற்றை வெளிப்படுத்தினார்.

கனிமொழி தன் பகுத்தறிவை, அதன் தலைவர் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தினார் என்பதை விட; நான் வெற்றி பெற்றுவிட்டேன் இனி உங்களால் என்ன செய்ய முடியும் என்ற அகந்தையை தான் வெளிப்படுத்தினார். எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு லோக்சபா 2019 தேர்தலில் தமிழகத்தில் இந்து ஓட்டு வங்கி தலையெடுத்தது. 

அது திமுகவிற்கு எதிராக இருந்ததால் ஸ்டாலின் தன் மனைவி கோயிலுக்கு செல்வார், நாங்கள் இந்து விரோதிகள் இல்லை என்று வெளிப்படையாக பேசினார். கனிமொழியோ தன் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் இருந்து ஈவேரா படத்தை நீக்கி விட்டு, தன் ஜாதியின் அடையாளம், துாத்துக்குடி தொகுதியின் பெரும்பான்மையான ஜாதி அடையாளம் தெரியும் வகையில் பனைமரத்தை வைத்தார்.

ஒரு கூட்டத்தில் தி.க., தலைவர் வீரமணி பேசியது சர்ச்சையாக, அவர் பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்கிற அளவிற்கு திமுகவினர் உச்சத்தை எட்டினார்கள். அப்போதெல்லாம் ராமசாமியின் புகழ் தேவையில்லாததா, ஓட்டை ஒழித்துக் கட்டுவதாக கருதியவர்கள் வெற்றி பெற்று பதவி ஏற்கும் தருணத்தில் பெரியார் வாழ்க என்று கோஷம் இடுகிறார்கள்.

திகவை சேர்ந்தவர்களை ஏற்கலாம், அவர்களுக்கு எதிரானவர்களையும் ஏற்கலாம். ஆனால் இது போன்ற சந்தர்ப்பவாதிகளை ஏற்பது கொள்ளிக்கட்டையை வைத்து தலையை சொறிந்து கொள்வது போல தான் இருக்கும்.

இவர்களின் தமிழ்வாழ்க கோஷமும் இதற்கு இணையானது தான். வெற்று கோஷத்தால் தமிழ் என்றுமே வாழாது. இந்தி எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஆங்கிலத்தை பாலுாட்டி வளர்த்தவர்கள் இவர்கள். இவர்களால் தான் எனக்கு தமிழ் எழுத, பேச தெரியாது என்று கூறும் நாகரீக சமுதாயம் உருவானது. இவர்கள் ஆட்சியில் அறிவியல் தமிழ் வளர்க்கவோ, அன்றாட தமிழ் வளர்க்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்காக கமிட்டி அமைத்ததுடன் சரி. அதன் முடிவுகள் வரவே இல்லை.

இரண்டாம் மொழி போராட்ட காலத்தில் வீதிகள் தோறும் படிப்பகம் தொடங்கிய திமுக, அதன் பின்னர் அதற்கு மூடுவிழா நடத்தி விட்டு, தற்போது சிபிஎஸ்சி பள்ளிகள் நடத்தி வருகிறார்கள். அதில் பணக்கார்கள் இந்தி படிக்க  பாய் விரிக்கிறார்கள். இவர்களின் தமிழ் வளர்ச்சி உண்மை என்றால் இவர்கள் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் தமிழை கட்டாயமாக்கி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அரியானா பிரிந்த போது 3வது மொழியாக தமிழ் ஏற்கப்பட்டது. அங்கு பள்ளிகளில் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள். அம்மாநில முதல்வர் தமிழிலேயே பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் தமிழ் வாழ்க, இந்தி வளர்க என்று கோஷம் இடுவதில்லை. இங்கே கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தில் எத்தனைபேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களின் ஆய்வு கட்டுரைகள் நுாலாக வெளிவந்தது எத்தனை என்று கணக்கு பார்த்தால் இவர்களின் தமிழ் வளர்ச்சிப் பணியை கண்டறியலாம்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தார்கள். அதன் பிறகு மொழி எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது.

இப்படி இரட்டை வாழ்க்கை நடத்தியவர்கள் தான் தற்போது தமிழ்வாழ்க என்று கோஷம் போட்டவர்கள். அதிலும் பலர், ‛தமில் வாள்க’ என்று தான் கூறினர்.  நாம் எதிர்பார்ப்பது இது போன்ற கோஷங்கள் அல்ல. தமிழகம் வாழ தேவையான திட்டங்கள் தான். அதை புத்திசாலிதனமாக பெற்றுவர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP