பறை இசை...கடந்து வந்த பாதை..!

மேற்கத்திய இசைகளின் ஆதிக்கத்தால், இக்கலை ஆட்டம் கண்டுள்ளது. இது போன்ற பாரம்பரிய கலைகளை காப்பாற்றி பேணிப் பாதுகாப்பது, அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 | 

பறை இசை...கடந்து வந்த பாதை..!

கிராமப்புறங்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பறை என்ற இசை கருவியை மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி அடியென வைத்திருக்கின்றார்கள். 

இதில், பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, , மாரடித்தல், வாழ்த்து அடி போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாற்றப்படுகின்றன. இப்படி பல அடி தாளங்களை கொண்ட பறை காலத்திற்க்கு ஏற்றார் போல் அதன் பெயர்கள் மாறிகொண்டே இருகின்றன. 

அந்த வகையில் பறை என்று நம் முன்னோர்கள் சொன்னது காலப்போக்கில் பறைதல், பறையான் என்று கூறப்பட்டு வருகிறது.  பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது விலங்கினங்களின் தோலில் இருந்து செய்யப்படுகிறது.  இவை ஒருவகை மேளமாகும். நம் தமிழர்களின் பேச்சு வாக்கில் அறை என்ற சொல்லில் இருந்து, தாளக்கருவியில் இசைக்கப்படுவதால் ‘பறை‘ என்ற சொல் வந்ததாக கூறப்படுகிறது. 

பறை இசை...கடந்து வந்த பாதை..!

கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம் எது என்றால் அவை பறை தான். பண்டைய கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள பறை தமிழினத்தின் தொன்மையான அடையாளமாக விளங்குகிறது. இவை  ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்தாக விளங்குகிறது. உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்மாகவும், பழங்காலத்தில் பறையடித்து தகவல் சொல்லுதல் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையரின் தொழிலாகவும் இருந்துள்ளது.

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் பறை என்ற இசைகருவியை பயன்படுத்தி தான் அப்பகுதி மக்களுக்கு தெரிவித்தார்கள். உரத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார். ஆகையால் ஊர் ஊராகச் சென்று சொல்பவர் பறையர் என்ற பெயர் வந்ததாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.  

பறை இசை...கடந்து வந்த பாதை..!

காலப்போக்கில் “பறை” எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பும் கருவி, தமிழர்களின் பாரப்பரிய கருவிகளில் ஒன்றாக நிலைத்துவிட்டது. பண்டைய காலத்தில் அனைத்து மக்களுக் பாகுபாட்டின்றி ‘பறை’ பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு.  குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந்திணைகளிலும் பறை பற்றிய செய்திகள் கொட்டி கிடக்கின்றன.  ‘பறை’ என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கத்திய இசைகளின் ஆதிக்கத்தால், இக்கலை ஆட்டம் கண்டுள்ளது. இது போன்ற பாரம்பரிய கலைகளை காப்பாற்றி பேணிப் பாதுகாப்பது, அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP