திராவிட இயக்க சிந்தனை சிற்பி - அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள்!

காஞ்சி, பட்டுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமையான அறிஞர் அண்ணாவை ஈன்றெடுத்த பெருமைக்கும் உரியது. நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா மக்கள் மனதை தனது பேச்சால் நெய்தவர்.
 | 

திராவிட இயக்க சிந்தனை சிற்பி - அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள்!

காஞ்சி, பட்டுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமையான அறிஞர் அண்ணாவை ஈன்றெடுத்த பெருமைக்கும் உரியது. நெசவுக்குப் பெயர்போன காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா மக்கள் மனதை தனது பேச்சால் நெய்தவர். 

பேச்சும், எழுத்தும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என கண் முன்னே நிகழ்த்திக் காட்டியவர். கவிஞர் பாரதி தாசன் புகழ்ந்த அறிஞர். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் புகுந்து விளையாடியவர். பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களை எழுதி, அவற்றுள் சிலவற்றை இயக்கி, அதில் சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். திராவிட சீர்திருத்த கருத்துகளை திரைப்பட வசனங்களில் எழுதியதில், கலைஞருக்கு முன்னோடியும் இவரே!

திராவிட இயக்க சிந்தனை சிற்பி - அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள்!

பள்ளி ஆசிரியர், பத்திரிக்கையாளர், பத்திரிக்கை ஆசிரியர், அரசியல்வாதி, முதலமைச்சர் என தான் முன்னேற முன்னேற இந்த சமூகத்தையும் முன்னோக்கி நகர்த்தினார். தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக்கட்சியில் சேர்ந்து, திராவிடர் கழகத்தில் இணைந்து, பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். 

1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் பெருமளாவு பெற்றன. 1967-ல் முதன் முதலில் தி.மு.க வெற்றி பெற்றதும், தமிழக முதல்வரானார் அண்ணா. அப்போது தான் முதன் முதலில் திராவிட ஆட்சி, தமிழகத்துக்கு அறிமுகமானது. ஆட்சிக்கு வந்ததும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார். தமிழ், ஆங்கிலம், இந்தி என இருந்த மும்மொழித் திட்டத்தினை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழித் திட்டமாக மாற்றினார். 

திராவிட இயக்க சிந்தனை சிற்பி - அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள்!

மதராஸ் மாகாணம் என்றிருந்த நம் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்து, தமிழ் மேல் தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தினார். இந்தியாவிலேயே, நாடு என்ற பெயர் கொண்ட மாநிலம் நமது மாநிலம் மட்டுமே. அதுவும் நமது மொழியை மையப்படுத்தியே மாநிலத்துக்குப் பெயர் மாற்றினார். கன்னடநாடு, மலையாள நாடு, தெலுங்குநாடு என்றெல்லாம் இல்லாத போது, தமிழ்நாடு என்ற ஒன்றை சாத்தியப் படுத்தினார். 

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தால் உங்களுக்கு என்ன லாபம் என எதிர்க்கட்சி கேட்டதற்கு, "நாடாளுமன்றத்திற்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்தீர்களே, இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?" எனக் கேட்டதும் அமைதியாகி விட்டனர் எதிர்க்கட்சியினர். 

"இந்தியை ஏன் தேசிய மொழியாக அறிவித்தீர்கள்" என எதிர்க்கட்சியிடம் ஒருமுறை அண்ணா கேட்டார். "இந்தியாவில் அதிகம் இந்தி பேசுவோர் தான் இருக்கிறார்கள் அதான்" என்றவர்களிடம், "இந்தியாவில் காகம் தான் அதிகம் இருக்கிறது, அப்படியென்றால் காகத்தை தேசிய பறவையாக்காமல், ஏன் மயிலை அறிவித்தீர்கள்" என சாதூர்யமாகக் கேட்டார். 

திராவிட இயக்க சிந்தனை சிற்பி - அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள்!

இவரின் பேச்சைக் கேட்பதற்காகவே சிறியவர், பெரியவர், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றுக் கூடினர். 1934-லேயே பட்டதாரியாக இருந்தார், தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஆங்கிலத்திலும் புலமையானவரான இவரை பரிசோதிப்பதற்காக, லண்டன் மாணவர்கள் அவரிடம், "ஏனென்றால் (Because) என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா" என்று கேட்டனர்.

 "No sentence can end with because because, because is a conjunction" என்றார் அண்ணா. அதாவது, எந்தத் தொடரிலும் இறுதியில் வராத சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது ஒரு இணைப்புச்சொல். கேட்ட மாத்திரத்தில் இப்படி பதிலளிக்கும் வித்தையை அவர் நன்கு அறிந்திருந்தார். 

திராவிட இயக்க சிந்தனை சிற்பி - அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள்!

சமூகத்துக்காக இடைவிடாது உழைத்தவர் தன் உடலில் அக்கரை செலுத்த மறந்து விட்டார். ஆம் அவர் முதல்வரான இரண்டாண்டுகளில் புற்றுநோயால் இறந்து விட்டார் அண்ணா. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. அதாவது இவரது இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 லட்சம் பேர் கலந்துக் கொண்டனர். 

இவர் காஞ்சியில் வாழ்ந்த வீட்டை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என நினைவுச் சின்னமாக மாற்றியது கருணாநிதி அரசு. அதோடு இவர் புதைக்கப் பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம், அண்ணா சதுக்கம் எனவும், சென்னையின் முக்கிய சாலைக்கு அண்ணாசாலை என்றும், சென்னை மற்றும் மதுரையில் உள்ள முக்கிய இடங்களுக்கு அண்ணாநகர் எனவும், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பிரமாண்டமான அண்ணா நூற்றாண்டு நூலகம், பரவலாக அவரது சிலைகள் என அவரை பெருமைப் படுத்தவும் தவறவில்லை கருணாநிதி தலைமையிலான அரசு. 

இன்று அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள். தமிழ்நாடு என்ற பெயர் இருக்கும் வரை அண்ணாவின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்!

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP