மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதீர்கள் நண்பர்களே!

கட்சி ஆரம்பித்த கமல் பிக்பாஸ் நடத்த சென்று விட்டார். ரஜினி துணை வேலையாக தான் அரசியலை வைத்துக் கொண்டிருக்கிறார். திரை உலகின் ஜாம்பவான்கள் நிலையே இப்படி இருக்கும் போது, ரஞ்சித்திற்கு எந்த ஜாதிக்காரனாக இருந்தாலும் 5 படங்கள் புக் செய்துவிட்டால் அடுத்த 5 ஆண்டுகள் அரசியல் கப்சிப் ஆகிவிடும். ஆனால், ரஞ்சித் என்ற மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கியவன் கதி?
 | 

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதீர்கள் நண்பர்களே!

சென்னையில், ரூட்  தல விவகாரத்தில் மாணவர்கள் பாவம் கழிவறையில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டார்கள். திருச்சியில் ஏட்டை அரிவாளால் வெட்டிய கறிக்கடைக்கார் பலாத்தில் இருந்து விழுந்த போது, சென்னை வாசியைப் போலவே கையை உடைத்துக் கொண்டார். இத்தனையும் யாரோ சொன்னது அல்ல, பாதிக்கப்பட்டவர்களே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது.

நீதிபதி, காவல்துறையினர் தாக்கினார்களா என சம்பரதாயமாக கேள்வி எழுப்புவார். ஆம் என்றால் சம்பந்தப்பட்டவரை, தற்காலிக வேலை நீக்கம் செய்யலாம். ஆனால் கை உடைபட்டவன் எவனும் கழிப்பறையைத் தான் குறை கூறுவானே தவிர்த்து, காவல்துறையை பற்றி குற்றமே சொல்ல மாட்டான்.

மீண்டும் அவர்களிடம் தானே செல்ல வேண்டும் என்ற பயம் தான் காரணம். ஆனால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாமே என்றால், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் கண் அசைவில் தான், இந்த சம்பவமே நடக்கிறது. என்கவுன்டர்கள் கூட இப்படிதான். 

பிளாட்பாரத்தில் டிக்கெட் எடுக்காமல் சிக்கிய எவனும், தப்பி ஓடி போலீசை தாக்க முயன்று என்கவுன்டரில் சிக்க மாட்டான். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை குறைந்தது 2 கொலை வழக்காவது தாங்கி நிற்கும் குற்றவாளிதான், ரோசப்பட்டு காவலரை தாக்க முயன்று தனது உயிரை இழப்பான்.

காவல்துறை பல முறை அரங்கேற்றம் செய்ய, இந்த நாடகத்தின் உயிர் நாடி தன்னை காவல்துறை, அதில் இருக்கும் உயர் அதிகாரி காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கை தான் காரணம்.

இதற்கு இணையாக தமிழகத்தில் தவறான தலைவரை நம்பி, சமுதாய என்கவுன்டர் ஒன்று அரங்கேற்றி இருக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள், பட்டியலின மக்களிடையே எளிதில் தலைவராகிவிடலாம்.

திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், கிருஷ்ணபறையனார்,அதியமான்,  மற்றும் உள்ள உள்ளூர் தலைவர்கள், , மாவட்ட அளவிலான அமைப்பு தலைவர்கள் என்று, அவர்களின் முன்னேற்றாம் குறித்து குரல் எழுப்ப  ஒரு கவுன்சிலரை வெற்றி பெற வைக்கும் அளவிற்கு தேவையான எண்ணிக்கையில் பட்டியலினத்தவர்களின் தலைவர்கள் இருக்கிறார்கள். 

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதீர்கள் நண்பர்களே!

இவர்கள் சாதிக்க முடியாதை, அல்லது சாதிக்க நினைக்காததை செய்து முடிப்பதற்காக அட்டைக் கத்தி பா.ரஞ்சித் தற்போது களம் இறங்கி இருக்கிறார். தன் இனத்தை முன்னேற்ற செய்ய நினைத்து களம் இறங்குவது பாராட்டத் தக்க விஷயம் தான். 
அவர்களை கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற செய்ய தேவையான விஷயங்களை செய்ய வேண்டும்.

அதை விடுத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் வரலாற்றை தோண்டி எடுத்து அதற்கு பரிகாரம் தேட புறப்பட்டு இருக்கிறார். ஓரு பயலும் இந்த வரலாற்றை மறுக்வோ, ஏற்கவேகா முடியாது. 

காரணம் வரலாறு என்பதே அவர் அவர் கற்பனையில் தோன்றிய உண்மைதான். குருடர்கள் யானையை பார்த்தது போல என்று ஒரு பழமொழி கூறுவார்கள். காலை பார்த்தவன் அது தான் யானை என்பான், தும்பிக்கை பார்த்தவன் அதுதான் யானை என்பான் அதைத்துமே உண்மை என்றாலும் அது மட்டுமே யானை இல்லை. இதைப் போன்றது தான் வரலாறு.

இது போன்ற வரலாற்றை எடுத்துக் காட்டி, தன் சமுதாயத்தினரை நல் வழிப்படுத்த ரஞ்சித் முயல்வது தவறு இல்லை. ஆனால், அதன் பிறகு இவர் செய்த காரியங்கள் தான் இவர் தகுதியான தலைவரா என கேள்வி எழுப்புகிறது.

ராஜராஜசோழன் பற்றிய விமர்சனம் சர்ச்சையாகிறது. சிலர் வழக்கு போடுகிறர்கள் உண்மையான தலைவன் என்றால், அதை நேர்மையாக சந்தித்து இருக்க வேண்டும்.அதை விடுத்து, ஓடோடி முன்ஜாமின் கோருகிறார். அதிலும் நீதிபதியிடம் நான் இந்த நுாலை ஆதாரமாகக் கொண்டு தான் பேசினேன். என் பேச்சால் எந்த சமுதாயத்திலும் தகராறு ஏற்படவில்லை என்பது போன்ற காரணங்களை அடுக்குகிறார். 

நீதிமன்றமும் நிபந்தனை ஜாமீன் வழங்குகிறது. அதே போல காவல்துறையில் கையெழுத்து போட்டு;நிபந்தனை பூர்த்தி செய்து விட்டு, அதன் பின்னர் நான் எவனுக்கும் பயப்படமாட்டேன் என்று மீண்டும் தன் சமுதாயத்தவரை உசுப்பேற்றும் பணியை தொடங்கி விட்டார்.

இவர் பேச்சை நம்பி எவனாவது களம் இறங்கினால் அவனுக்கு என்ன கதி ஏற்படும் என்பது தான் அச்சமாக இருகிறது. ரஞ்சித் தலைவர் இல்லை என்பதை ராஜராஜசோழன் சம்பவத்திலேயே வெளிப்படுத்தி விட்டார். இப்போது அவர் பேசுவதெல்லாம் அவரை சார்ந்த ஒரு தியாகியை அடையாளம் காணத்தான். 

அப்படி  எவனாவது சிக்கினால், அவன் படத்திற்கு மாலை போட்டு 4 நாள் கடந்து சென்று தன் வேலை பார்க்க போய்விடுவார்கள். திமுகவில் இருந்து பிரபல தலைவர் கொலை பழி சுமத்தி வெளியேற்றப்பட்டதும் அவரை நம்பி உயிர் துறந்த தொண்டர்கள் எந்த அளவிற்கு இன்று நினைக்கப்படுகிறார்கள் என்பது ரஞ்சித் போன்ற தலைவர்களை நம்பி களம் இறங்கும் தொண்டர்கள் அறிய வேண்டிய பால பாடம். 

கட்சி ஆரம்பித்த கமல் பிக்பாஸ் நடத்த சென்று விட்டார். ரஜினி துணை வேலையாக தான் அரசியலை வைத்துக் கொண்டிருக்கிறார். திரை உலகின் ஜாம்பவான்கள் நிலையே இப்படி இருக்கும் போது, ரஞ்சித்திற்கு எந்த ஜாதிக்காரனாக இருந்தாலும் 5 படங்கள் புக் செய்துவிட்டால் அடுத்த 5 ஆண்டுகள் அரசியல் கப்சிப் ஆகிவிடும். ஆனால், ரஞ்சித் என்ற மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கியவன் கதி?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP