திருநங்கைகளை இந்த சமூகம் அங்கீகரிக்கிறதா !

எந்தவொரு மனிதருக்கும் உணவும் உறைவிடமும் அடிப்படைத் தேவைகளில் மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம்மில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடம் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.
 | 

திருநங்கைகளை இந்த சமூகம் அங்கீகரிக்கிறதா !

எந்தவொரு மனிதருக்கும் உணவும் உறைவிடமும் அடிப்படைத் தேவைகளில் மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம்மில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடம் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. 

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவு மட்டுமல்ல அவர்களுக்கான பொருளாதாரத்திலும் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக படித்த திருநங்கைகள் தனது கல்விச் சான்றிதழை வைத்துக் கொண்டு பல நிறுவனக்களின் வாசல்களில் காத்திருப்பார்கள். இறுதியாக அவர்களிடம் சொல்லகூடியது உங்களுக்கு வேலை இல்லை என்ற பதில் தான்.  ஆகையால் இப்படி தனக்கான கல்விதகுதி இருந்தும் இந்த சமூகம் தன்னை ஒதுக்குவதாக கருதுகின்றனர். 

திருநங்கைகளை இந்த சமூகம் அங்கீகரிக்கிறதா !

சாலைகளில் செல்லும்போது கூட மூன்றாம் பாலினத்தவர் என்றால் பெரும்பாலானவர்கள் அனிச்சைச் செயலாக அவர்களை இன்னொரு முறை பார்க்கிறார்கள். ஒருவேளை அது ஏளனப்பார்வையாக இருந்தால், அவர்களைமட்டும் ஏன் இப்படிபார்க்கிறோம் ? என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இதனால் ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிச்சை எடுப்பது போன்றும், தவறான பாதைக்கும் வழி வகுத்து விடுகிறது.  

போராட்டங்களையே வாழக்கையாக கொண்டு ஓடும் இவர்கள், வாழ்வில் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியுமே முட்பாதையாக அமைகிறது. சுதந்திரமான, கண்ணியமான வாழ்க்கை எனபது ஒவ்வொரு மனிதனின் உரிமை. அப்படியிருக்க  மூன்றாம் பாலினம் என்னும் ஒரே காரணத்திற்காக மனித உரிமைகள் சமூகத்தால் மறுக்கப்படுவதாக திருநங்கைகள் தனது வேதனையை வெளிப்படுத்துகின்றனர். 

திருநங்கைகளை இந்த சமூகம் அங்கீகரிக்கிறதா !

திருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது. இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளை திருநங்கையர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட தமிழக அரசு, மார்ச் 1, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது. அதற்குப் பிறகு பல்வேறு துறைகளில் பெரும்பாலான திருநங்கைகள் இன்று சாதனைகள் புரிந்தாலும், அவர்களில் பலர் இன்னமும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிகளைத் தேடி ஓடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். 

இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, சென்னை மாநகராட்சி, சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே திருநங்கைகளுக்கான காப்பாகத்தை அமைத்துள்ளது. இந்த காப்பகம் குறித்து திருநங்கைகளிடம் கேட்டபோது, சமூகத்தில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை கொடுத்து, அச்சுறுத்தும் சமூகத்தின் மத்தியில் தங்களை அரவணைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்குவதாக திருநங்கைகள் கூறுகின்றனர். மேலும் சுற்றிதிரியும் எங்களுக்கு ஒரு குடும்பம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்தனர். 

பாதுகாப்பான இருப்பிடமும், சுயமரியாதையுடன் கூடிய வாழ்வும் மனிதனை எந்த அளவிற்கு மனதளவில் வலிமையாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட பாதுகாப்பான வாழ்வும், சமூக அங்கீகாரமும் கிடைக்கின்ற பட்சத்தில், திருநங்கைகளும் வருங்கால சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP