கோவையில் ஒரு குற்றாலம் இருக்கு... தெரியுமா உங்களுக்கு...?

தமிழகத்தில் குற்றாலம் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி தான். ஆனால் தமிழகத்தில் மற்றொரு குற்றாலம் உள்ளது. அது தான் கோவை குற்றாலம். கோவை அருவி என்றும் அழைக்கப்படுகிறது
 | 

கோவையில் ஒரு குற்றாலம் இருக்கு... தெரியுமா உங்களுக்கு...?

தமிழகத்தில் குற்றாலம் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி தான். ஆனால் தமிழகத்தில் மற்றொரு குற்றாலம் உள்ளது. அது தான் கோவை குற்றாலம். கோவை குற்றாலத்தை கோவை அருவி என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. கோவை குற்றாலத்தின் சிறப்பினை பார்க்கலாம் வாங்க. 

கோவையில் ஒரு குற்றாலம் இருக்கு... தெரியுமா உங்களுக்கு...?

கோவையில் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று கோவை குற்றாலம் அருவி. சிறுவாணி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் இயற்க்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்க்கும் புகழ் பெற்ற அருவி தான் கோவை குற்றாலம். வெயில் காலங்களில் குற்றாலம் அருவி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்களுக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது.  இது கோயம்புத்தூரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில், எந்த வாகன இரைச்சலும் இல்லாமல், அதேசமயம் பறவைகளின் சப்தங்களும் மரங்களின் நிழல்களும் படர்ந்திருக்கும் இடமாகத் திகழ்கிறது கோவை குற்றாலம். 

கோவையில் ஒரு குற்றாலம் இருக்கு... தெரியுமா உங்களுக்கு...?

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களை விட கோவை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். கோயம்புத்தூரில் சூரியனை பார்க்க வெகு நேரம் ஆகும். அதே போன்று மறைவது மட்டும் சீக்கிரம் மறைந்து விடும். எப்போதும் குளுமையான  பகுதியில் உள்ள அருவியை காண்பதற்கே பிரமிப்பாக இருக்கும்.  கோவை குற்றால அருவி உயரமான இடத்தில் இருந்து விழுவதால் அங்கு குளிக்கும் இடம் கொஞ்சம் கரடுமுரடாகத் தான் இருக்கும். ஆனால் அதில் குளித்தால் என்றும் ஆனந்தமாக இருக்கும். 

கோவையில் ஒரு குற்றாலம் இருக்கு... தெரியுமா உங்களுக்கு...?

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமையான காடுகளும், பலவகை பறவைகளையும், விலங்குகளையும் இங்கு காணமுடிகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான அரிய வகை மூலிகைகளும் நிரம்பிய காணப்படுகிறது. அகத்திய முனிவர் வாழ்ந்த இந்த மேற்குத் தொடர்ச்சி மலையானது ஏழைகளின் சொர்க்கபுரி  என்று அழைக்கப்படுகிறது.  அதனால் தான், மூலிகைக் காடுகளின் வழியாக ஓடிவந்து அருவியாக கொட்டும் நீரில் குளிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் சுற்றுலாப் பயணிகள். 

கோவையில் ஒரு குற்றாலம் இருக்கு... தெரியுமா உங்களுக்கு...?

மலையில் தகுந்த சீதோஷ்ணநிலை காரணமாக அரிய வகை மூலிகைகள் இந்தப்பகுதியில் மட்டுமே வளர்கின்றன. மூலிகைக் குளியலான அருவிகளைக் கொண்ட குற்றாலத்தை தென்னகத்தின் 'ஸ்பா' என வர்ணிக்கிறார்கள். இந்த மலைப்பகுதியில்,   உலகின் வேறு எங்குமே காணக்கிடைக்காத அரிய வகை பட்டாம் பூச்சிகளும், குரங்குகளும் நிறைந்த பகுதியாக கூறப்படுகிறது.  தென் மேற்குப் பருவக் காற்று வீசத் தொடங்கியதும் குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கிவிடும். அதுவும் ஜூன் மாதம் முதல்  ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலம் களைகட்டும். இந்த குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

கோவையில் ஒரு குற்றாலம் இருக்கு... தெரியுமா உங்களுக்கு...?

குற்றால வனபகுதியில் காலையில் உள்ளே நுழைந்துவிட்டு, அருவியில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு, அப்படியே  சென்றால் பக்கத்தில் உள்ள பரம்பிக்குளம், ஆழியாறு, சோலையாறு, பாலாறு, ஆனமலை போன்ற ஒன்பது அருவிகளைக் காணலாம். இவை அனைத்துமே சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியவை.  கோவை குற்றாலம் முழுக்க முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  உற்சாக குளியலுக்கு உகந்த இடம் கோவை குற்றால அருவி. ஆனா இப்போ உடனே கிளம்பிடாதீங்க... ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் போனா சொர்கத்தையே அனுபவிச்சுட்டு வரலாம்...!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP