நாம் நவீன காலத்தில் தான் வாழ்கிறோமா?

பள்ளி முடிந்து நடந்து செல்ல கூட கூச்சப்பட்டுக் கொண்டே முழங்காலிலேயே 2 கிலோமீட்டர் நடந்து வீட்டை அடைந்தாள் அந்த மாணவி.........
 | 

நாம் நவீன காலத்தில் தான் வாழ்கிறோமா?

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் மாதவிலக்கு ஏற்படுகிறது. அப்போது நாப்கின் இல்லாத காலம். தலைமை ஆசிரியையிடம் கேட்டால் வெள்ளைத்துணி கொடுப்பார். ஆனால் அதை கேட்க வெட்கம். அதனால் பள்ளி முடிந்து நடந்து செல்ல கூட கூச்சப்பட்டுக் கொண்டே முழங்காலிலேயே 2 கிலோமீட்டர் நடந்து வீட்டை அடைந்தாள் அந்த மாணவி.

அதற்கு முன்பு மாதவிடாய் காலத்தில் பெண் வீட்டை விட்டே வெளியே செல்ல அனுமதி இல்லை. ஓய்வு மட்டும்தான். அந்த காலத்தில் தீட்டு துணிதான் பிரபலம். அந்த காலம் முடிந்த பின்னர் அது சுற்றப்பட்டு வீட்டில் கூரைக்குள் சென்று பதுங்கிவிடும்.

நாம் நவீன காலத்தில் தான் வாழ்கிறோமா?

பின்னர் நாப்கின்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அது வரப்பிரதாசமாக அமைந்தது. இது போன்ற பெண்களின் கைப்பையில் நாப்கின்களுக்கு நிரந்தர இடம் உண்டு.

ஆனால் பெண் போலீசாருக்கு இந்த காலம் கூடம் சிரமமாக தான் இருக்கும். நாப்கின் அணிந்து அதன் மீது சீருடை அணிந்து அவர்கள் அந்த நாட்களில் பணி செய்வதை விட கொடுமை வேறு இல்லை .

பெண்களிடம் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்ததுவம், அதை பற்றிய கூச்சத்தை போக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் சுகாதார நாள் மே மாதம் 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
...
ஜெர்மன் நாட்டின் அரசு சாராத அமைப்பான வாஷ் கடந்த 2014ம் ஆண்டு மே 28ம் .தேதி அன்று மாதவிடாய் சுகாதார நாளை தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

நாம் நவீன காலத்தில் தான் வாழ்கிறோமா?

இந்த நாளை தேர்வு செய்ததிலும் ஒருசிறப்பு உள்ளது. ஆரோக்கியான பெண்ணின் மாதவிடாய் காலம் அதிக பட்சம் 5 நாள்கள், மாதவிடாய் கால சுற்று 28 நாட்கள்.  இதன் காரணமாக ஆண்டு தோறும் 5வது மாதம் 28 ம் நாள் மாதவிடாய் சுகாதார நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் 2014ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 42 சதவீத பெண்களுக்கு நாப்கின் என்றால் என்ன வென்றே .தெரியவில்லை.

இந்த காரணங்களாலும், பணியிடங்களில் பெண்களுக்கு நாப்கின் மாற்றும் வசதிகள் கொண்ட கழிவறை இல்லாதது, போதுமான தண்ணீ்ர் சோப்பு கிடைக்காதது போன்ற காரணங்களால் பெண்களின் இனப் பெருக்க பாதையில் கிருமித் தொற்று ஏற்படுகிறது.  சில பெண்கள் சரியாக சாப்பிடுவதோ, குளிப்பதோ கிடையாது. வேறு சிலர் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் தான் நாப்கின் பயன்படுத்துகி்ன்றனர். மேற்கு வங்கத்தில்  நாப்கின் வாங்க வழியில்லாததால் தரைவிரிப்புகளின் கிழிசல்களை பயன்படுத்துகி்ன்றனர். மத்திய பிரதேச மாநிலம் சாபஆ மாவட்ட பெண்களுக்கு மாதவிடாய் ஒரு நோய். அவர்களுக்கு சமையல் அறையில் நுழையவும், மற்றவர்களை தொடவும், படுக்கையில் படுக்கனுவும் அனுமதியில்லை.

நாம் நவீன காலத்தில் தான் வாழ்கிறோமா?

இது வரையில் ஆப்பிரிகாவில் புறநகர் பகுதிகளில் நாப்கின் வாங்க இயலாததாலும், கிடைக்காததாலும் மதவிடாய் காலமான 5 நாட்களும் பள்ளிக்கு செல்வதில்லை. இந்தியாவிலும் இது போன்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்ற தகவல் சமீபத்தில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சத்தீஸ்கர் மாநிலம் பித்தோரோகர் தாலுகாவிற்கு உடபட ராகுகார்வா (rautgara) மாதவிடா் காலங்களில் பள்ளிக்கு அனுப்புவதில்லை. இதற்கு பள்ளிக்கு செல்லும் வழியில் ஊர்காவல், தெய்வம், கோயில் இருப்பது தான் காரணம். ஆசிரியைகள் எவ்வளவு தான் வற்புறுத்தினாலும் பெற்றோர் சாமி குத்தத்திற்கு  பயந்து பெண்களை அனுப்புவதில்லை. இதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மீறுவதற்கு தயாராக இல்லை என்கிறார் அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஒருவர். இந்த நிலை தெலுங்கானாவில் உள்ள அரசு சார்பற்ற நிறுவனத்தின் முயற்சியால் வெளிவந்துள்ளது.

நாம் நவீன காலத்தில் தான் வாழ்கிறோமா?

அதே நேரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலும், அதன் கிளைக் கோயில்களிலும் மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP