Logo

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் நண்பர்களே

உண்மையில் இவர்களை விடுதலை செய்தால், எந்த விதமான சட்டப் பிரச்னையும் இல்லாமல், அரசியல் லாபம் மட்டும் கிடைக்கும் என்றால், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்த காங்கிரஸ் மத்தியிலும், உலக தமிழர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்த கருணாநிதி மாநில முதல்வராகவும் இருந்த போதே விடுதலை செய்து இருப்பார்கள்.
 | 

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் நண்பர்களே

தமிழக அரசியல்வாதிகள், ஊடகங்கள் வேலை இல்லாத போது உணர்ச்சி பொங்க விவாதிப்பது, 7 பேரின் விடுதலை. இதில், ஊடகங்கள் பங்கு மிகமிக அதிகம். இவர்கள் தான், அரசியல்வாதிகளிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி; பின்னர் அதையே விவாதமாக மாற்றுவார்கள்.

இவர்களின் சமீபத்திய நடவடிக்கையில், நடிகர் சஞ்சை தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது போல, பேரறிவாளன் உட்பட 7 பேரை ஏன் விடுதலை செய்யகூடாது என்று விவாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

பேரறிவாளவன் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்பவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், நடிகர் சஞ்சை தத் முன்கூடியே விடுதலை செய்தது பற்றிய தகவல்களை பெற்று, அதன் அடிப்படையில் ராஜீவ் கொலையில் தொடர்புடைய, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். இதை ஊடகங்கள் விவாதப் பொருளாக்கி உள்ளன.

சாதாரணமாக பார்க்கும் போது நடிகர் சஞ்சை தத் செய்த தவறும், 7 பேர் செய்த தவறும் ஒன்று போல தோன்றினாலும், வழக்கின் போக்கின் அடிப்படையில் இரண்டும் வேறு வேறானவை.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், நடிகர் சஞ்சய் தத் ஏகே 56 வகை துப்பாக்கி, மற்றும் ஒரு பிஸ்டல் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு நேரடியாக இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, அனுமதியில்லாமல் ஆயுதத்தை வைத்திருந்தது, கடத்தி வந்தது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில், நடிகர் சஞ்சை தத் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அதிலும், தாவுத் இப்ராஹிம் கும்பலால் நான் மிரட்டப்பட்டேன். உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் ஆயுதம் வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் நண்பர்களே

ராஜீவ் கொலையில் தொடர்புடையவர்கள், கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரவில்லை. மேலும், தண்டனையை குறைப்பு பற்றிதான் பேசினார்களே தவிர, மன்னிப்பு கோரவில்லை. இதைத் தாண்டி, அந்த 7 பேர் விடுதலை, அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எவ்விதமான பலனும் தரப்போவதில்லை. 

ராஜீவ் கொலை குற்றவாளிகளை, காங்கிரஸ் கட்சியினர் மன்னித்து விட்டாலும், அப்போது இறந்த மற்றவர்களின் குடும்பத்தினர் 7 பேரின் விடுதலைக்கு எதிராகவே உள்ளனர். குற்றவாளிகள் தரப்பில் நாங்கள் ஜனாதிபதியிடம் மனு செய்துள்ளோம், கவர்னிடம் மனுச் செய்யதுள்ளோம் என்றதும், சுப்ரீம் கோர்ட் அவர்களிடம் இந்த வழக்கை முடித்துக்கொள்ளுங்கள் என்று முடித்து வைத்தது. 

அதே நேரத்தில், கவர்னரின் முடிவுக்கு ஒரு காலக்கெடு விதிக்க முடியாது. இவர்கள் விடுதலை செய்யப்பட்ட அடுத்த நிமிடமே, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி மனு போடுவார்கள். 

இப்படியே தொடர்ந்து கொண்டு போனால், சாலை விபத்து குற்றவாளிகள், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் .சென்றவர்கள் தான் சிறையில் இருப்பார்கள். தமிழனாக இருப்பதால், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்றாகிவிடும்.

எனவே, முன்னாள் பிரதமர் கொலையில் தொடர்புடையவர்களை, நீதிமன்றம் மரண தண்டனை விதித்து, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, தற்போது அவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.

 உண்மையில் இவர்களை விடுதலை செய்தால், எந்த விதமான சட்டப் பிரச்னையும் இல்லாமல், அரசியல் லாபம் மட்டும் கிடைக்கும் என்றால், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்த காங்கிரஸ் மத்தியிலும், உலக தமிழர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்த கருணாநிதி மாநில முதல்வராகவும் இருந்த போதே விடுதலை செய்து இருப்பார்கள். 

ஆனால் அதை தாண்டி வேறு ஏதோ சிக்கல் இருப்பதால் தான், அவர்கள் அதை செய்யவில்லை. அதனால், இவர்கள் வற்புறுத்துவதெல்லாம் நாடகம் தான். நடிப்பு நீண்ட காலம் நீடிக்காது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP