அமிலங்கள் தாகம் தணிக்குமா?

இருக்கும் இடத்தை விட்டு மாறுவதற்கு முன்னர், திமுகவில் சேர்ந்தவர்கள் நிலையை உணர்ந்து பார்க்க வேண்டும். காசு கொடுத்து கறிவேப்பிலை வாங்கினாலும் சாம்பாரில் மிதந்த பின்னர் அது குப்பைக்கு தான் போகும்.
 | 

அமிலங்கள் தாகம் தணிக்குமா?

அரசியலில் புதிய கட்சி தோன்றுவதும், சிலநாட்கள் கழித்து அது மறைவதும் சாதாரணமான விஷயம் தான். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லை என்றதும் அவர்கள் வெற்றிடத்தை நிரப்ப பல கட்சிகள் தோன்றின. கமல் போன்ற பகுதி நேர அரசியல்வாதிகள், கட்சியை ஏறக்கட்டிய பின்னர் தங்கள் தொழிலை நாடி சென்று விட்டனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வேறு வழியில்லாமல் தோன்றிய அமமுக வெகு வேகமாக சுருங்கி வருகிறது. மூழ்கும் கப்பல் கேப்டனுக்கு உள்ள தைரியத்திற்கு இணையாக தினகரன் பேட்டி அளித்தாலும், தொடர்ந்து பல நிர்வாகிகள் அந்த கட்சியை விட்டு சென்று கொண்டே இருக்கிறார்கள். 

மறைந்த இந்து முன்னணி பொதுச்செயலாளர் கூடங்குளம் ஜெயராஜ், ‛கட்சியை விட்டு வெளியே செல்கிறவன் கூறுவதெல்லாம் உண்மையும் கிடையாது, பொய்யும் கிடையாது ஆனால் ஒரு கட்சியில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் வெளியேறும் போது அது பற்றி சிந்திக்க வேண்டிய கடமை கட்சித் தலைவருக்கு உள்ளது’ என்பார். அது போல தற்போது அமமுகவில் நடப்பது பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம், கடமை தினகரனுக்கு உள்ளது.

அதே நேரத்தில் கட்சியில் இருந்து வெளியேறுபவர்கள் நேராக திமுகவில் தான் போய்சேருகிறார்கள். அவர்களுக்கு அதிமுகவில் தன்னை எதிர்த்தது யார், யார் யார் தனக்கு எதிரான கோஷ்டி என்று நன்றாக தெரிவதால் அவர்கள் இந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால் தமிழக அரசியலில், அதிமுகவில் சேர்ந்தவரோ, அல்லது கூட்டணி வைத்தவரோ கட்சிக்கு எவ்வித சேதாரமும் இன்றி, முழுமையாக வெளியேறிவிட முடியும். ஆனால் திமுக அப்படி இல்லை.  தனக்கு  எதிராக அரசியல் களத்தில் மிக பிரபலமாக செயல்படும் கட்சியை திமுக கூட்டணி வைக்கும். பின்னர் அந்த கட்சி வெளியேறும் போது 2 ஆகத்தான் இருக்கும்.

கடந்த காலத்தில் திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. அந்த கட்சி கூட்டணியை விட்டு வெளியே வந்த போது, பேராசிரியர் தீரன் தனியே கட்சியை தொடங்கினார். அதே போல வேல்முருகன் மற்றொரு காலகட்டத்தில் பாமகவில் இருந்து வெளியேறினார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய போது, தடா பெரியசாமி வெளியேறினார். 

இப்படி திமுக கூட்டணி கட்சிகளின் நிலையை பார்த்தால் கூட்டணியில் இருந்த போதே அதில் ஒரு சிலரை வளர்த்துவிடுவது அந்த கட்சி வெளியேறும் போது திமுகவால் வளர்க்கப்பட்டவர்கள் தனி கட்சி தொடங்கி விடுவார்கள்.

இதே நிலைதான் கட்சியை விட்டு விலகி, திமுகவில் சேர்பவர்கள் கதியும், சேரும் போது புதுப் பொண்டாட்டி கதையாக இருக்கும், பின்னர் அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும். இதற்கு மதிமுகவில் இருந்து வெளியேறிய எல் கணேசன் போன்றவர்கள் உதாரணம். 

மதிமுக தொடங்கிய போது இருந்த பலர், இப்போது திமுகவில் தான் இருக்கிறார்கள். ஆனால் எங்கு இருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். அதிமுகவில் இருந்து மாறிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த செந்தில்பாலாஜி போன்றவர்கள் இன்றும் பிரபலமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அரசியல் தாண்டிய அவர்களின் செல்வாக்கு, கட்சி தங்களை தவிர்க்க இயலாத வகையில் கை கொடுப்பதால் தான்.

பொதுவாக திமுக வலிமையான கட்சி, அங்கு ஒவ்வொரு வார்டுகளிலும் தாங்கள் முன்னுக்கு வரமாட்டோமா என்று பல நிர்வாகிகள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் புதிதாக அந்த கட்சிக்குள் வருபவர்கள், உடலுக்குள் அன்னிய பொருட்கள் நுழைந்தால் வாந்தி, தும்மல் போன்று வெளியேற்றுமே அதைப் போலதான் அவர்களை வெளியேற்றும் முயற்சிகள் பலமாக இருக்கும். 

மதிமுக வீழ்ச்சியை தொடங்கிய காலத்தில் உள்ளூர் நிர்வாகி ஒருவரிடம் மதிமுக, திமுகவை இணைக்கலாமே என்ற போது, வைகோவிற்கு என்ன திமுகவில் நல்ல பதவியை வாங்கிக்கொண்டு விடுவார். மதிமுக இருந்தால் தான் நான் வார்டு செயலாளராக இருக்க முடியும். திமுகவில் சேர்த்தால் என்னை இந்த பதவியில் விட்டு வைப்பார்களாக என்றார். இது போன்ற சூழ்நிலைதான் தமிழகத்தில்.

எனவே இருக்கும் இடத்தை விட்டு மாறுவதற்கு முன்னர், திமுகவில் சேர்ந்தவர்கள் நிலையை உணர்ந்து பார்க்க வேண்டும். காசு கொடுத்து கறிவேப்பிலை வாங்கினாலும் சாம்பாரில் மிதந்த பின்னர் அது குப்பைக்கு தான் போகும்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP