திண்டுக்கல் பூட்டு... திருடனால கூட திறக்க முடியாது

பூட்டு என்பது ஒரு பாதுகாப்புக் கருவி. இது இரும்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தேவைகளுக்கேற்ப பல விதமான வடிவங்களில், செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பூட்டு என்றதும் ஞாபகத்திற்கு வருவது திண்டுக்கல் தாங்க
 | 

திண்டுக்கல் பூட்டு... திருடனால கூட திறக்க முடியாது

பூட்டு என்பது ஒரு பாதுகாப்புக் கருவி. இது இரும்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தேவைகளுக்கேற்ப பல விதமான வடிவங்களில், பல்வேறு வசதிகளுடன் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில்  பூட்டு என்றதும் ஞாபகத்திற்கு வருவது திண்டுக்கல் தாங்க. திண்டுக்கல் மாவட்டம்  பூட்டு தயாரிப்புக்குப் பெயர் பெற்ற ஊராகும். இம்மாவட்டத்தில் நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத் தயாரிப்பது ஒரு குடிசைத் தொழிலாக  உள்ளது. அப்போது எல்லாம் திண்டுக்கல்லில் விவசாயம் இல்லாதபோது அதற்கு மாற்றுத் தொழிலாக உருவெடுத்தது தான் பூட்டு தொழில். நேரம் காலம் பார்க்காமல் மக்கள் இத்தொழில் ஈடுபட்டனர். நவீன உலகத்தில் எந்திரங்களின் உதவியோடு தொழிற்சாலைகளில் பூட்டு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இருந்தாலும் கூட பூட்டு தயாரிக்கும் தொழிலைக் குடிசைத் தொழிலைப் போல பல இடங்களில் செய்து வருகின்றனர். 

திண்டுக்கல் பூட்டு... திருடனால கூட திறக்க முடியாது

பூட்டுத் தயாரிப்பில் அதிக அளவாக ஆறிலிருந்து எட்டு நெம்புகோல்களுடைய தாக இருக்கும். ஆனால்  மாங்காய் பூட்டுகள் சற்று வித்தியாசமாக இருக்கும்.  மாங்காய் பூட்டின் பக்கவாட்டில் ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் தான் திறக்க முடியும். மாங்காய்ப் பூட்டு, கதவுக்கான சதுரப் பூட்டு, அலமாரிப் பூட்டு, இழுப்பான் பூட்டு என்று பல வகையான பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.  1930 ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு செய்யும் ஒரு ஆசாரி ஒரு பூட்டு ஒன்றினை தயார் செய்தாராம். மாங்காய் வடிவத்தில் ஒரு பூட்டும், மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு ஒன்றையும் செய்தாராம். இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த ஆசாரி, அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்திருந்தார்.

திண்டுக்கல் பூட்டு... திருடனால கூட திறக்க முடியாது

பிறகு கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி வந்து பாராட்டியதோடு இல்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் தயார் செய்ய வேளலக்கு  ஆட்களை அதிகம் சேர்த்துக் கொண்டார்.  ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன், வழக்கமான ஒன்றாக இல்லாமல், அழகிய கற்பனைத்திறனோடும், நீண்ட நாட்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் பூட்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்ததும் பூட்டு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

ஆசாரியின் பூட்டுகளுக்கு  நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன. நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக  ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர். பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல்லில் பூட்டு தொழில் வளர்ச்சியடைந்து பிரபலமானது. 

திண்டுக்கல் பூட்டு... திருடனால கூட திறக்க முடியாது

1945 ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட மக்களின் வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது. பூட்டின் விலை உச்சத்தில் இருந்த போது தொழிலை மேம்படுத்துவதர்க்காக 1957 ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் என்றதும்  பூட்டு தொழிற்சாலைகள்  நிறைந்த மாவட்டம் என்று சொல்லும் நிலைக்கு மாறியது திண்டுக்கல். 

உத்திரப்பிரதேசம் அலிகார் எனும் இடத்தில் இருந்து இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பூட்டுகள் இந்தியா முழுவதும் படையெடுத்தன. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பூட்டுக்களை தயாரித்துத் தள்ளும் இந்த இயந்திர தொழில்நுட்பத்தால் அந்த வகை பூட்டுக்களின் விலை மிகவும் குறைவாக  இருந்தது. இயந்திர வடிவமைப்பு என்பதால் பார்க்க அழகாகவும், மெல்லிய தன்மையுடன் இருந்தது. தொழில் நுட்பத்தால் செய்யப்படும் இந்த வகை பூட்டுக்கு பல பெயர்கள் சூட்டப்பட்டது. 

திண்டுக்கல் பூட்டு... திருடனால கூட திறக்க முடியாது 

இயந்திரப்பூட்டு தாக்குதல் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க... இரும்புப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாக திண்டுக்கல் பூட்டு உற்பத்தியாளர்களுக்கு மிக பெரிய சறுக்கு ஏற்ப்பட்டது.  மாங்காய் போன்ற பூட்டுகளையே பயன்படுத்தி வந்த மக்கள், காலப்போக்கில் நவீனமான முறையில், கைகளுக்கு அடக்கமாக  உள்ள  பூட்டுக்களை வாங்க மக்கள் விரும்ப தொடங்கினர்.

காலப்போக்கில் திண்டுக்கல்லை விழுங்கத் துவங்கியது அந்த உத்திரப்பிரதேச இயந்திரம்.  அன்று ஏற்பட்டதுதான் சரிவின் தொடக்கம். இன்று வரை திண்டுக்கல்லின் பூட்டு தொழில் இன்றளவும் மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியவில்லை. 

இன்றைக்கு பல்வேறு கடைகளின் உள்சுவர்களில் அலிகார் பூட்டுகளின் ஆட்சியே பிரதானம். வெற்றியின் உச்சத்தைத் தொட்ட திண்டுக்கல் பூட்டு அவ்வப்போது பல முயற்ச்சிகளை எடுத்து வந்தாலும் அலிகார் பூட்டுக்கு ஈடாக செல்ல  மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. இதனால் திண்டுக்கல்லில் பூட்டு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு சில தொழிளாலர்கள் தன் பயணத்தை மாற்றிக்கொண்டனர். அதனால் திண்டுக்கல் பூட்டில் உள்ள பல அரிய விஷயங்களை தம் முன்னோர்கள் காலத்திலேயே மறைந்து போய் விட்டனர்.  

திண்டுக்கல் பூட்டு... திருடனால கூட திறக்க முடியாது

 ஆனால் இன்றும் வேறுதொழில் தெரியாததால் திண்டுக்கள் பூட்டை செய்துகொண்டுதான் இருகின்றனர்.  ஆனால் இவர்களது காலத்திற்கு பிறகு பிள்ளைகள் ஈடுபட தயாராக இல்லை என தெரிகிறது. தற்போது திண்டுக்கல் பூட்டின் வகைகளும் குறைந்துள்ளன.

திண்டுக்கல் பூட்டு... திருடனால கூட திறக்க முடியாது

திண்டுக்கல்லில் பூட்டுத்தொழில் நசிவை தடுக்க அரசு இங்கு பூட்டுத் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது.  இந்தியாவில் பூட்டுத் தொழிலுக்கு என்று ஒரு கூட்டுறவு சங்கம் இருப்பது இங்கு மட்டுமே. இங்குதான் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பூட்டு கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவு உள்ளது. ஆனால் இந்த உத்தரவை பின்பற்றுவதில்லை.  இதனால் இங்கும் தொழிலாளர்கள் மற்றும் பூட்டு தயாரிப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

தமிழகத்திற்கே பெருமை சேர்த்த இத்தொழிலின் நிலை உணர்ந்து தமிழக அரசு பூட்டு தயாரிப்பதற்கான பொருளை மானியவிலையில் வழங்க வேண்டும் என்பதே தொழிளாலர்களின் கோரிக்கை. முன்னோர்களின் நினைவாக பலரது குடும்பங்களில் இன்னமும் நினைவுச் சின்னமாக உழைத்துக் கொண்டிருக்கும் திண்டுக்கல் பூட்டிற்கு என்றும் இல்லை அழிவு.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP