Logo

மெய்சிலிர்க்க வைக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி!

கர்நாடகா மற்றும் கோவா எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தவழ்ந்து வரும் நீர்வீழ்ச்சி தான் தூத்சாகர் நீர்வீழ்ச்சி. சரியாக சொல்லவேண்டும் என்றால் கர்நாடகாவிற்கும் கோவாவிற்கும் இடையில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
 | 

மெய்சிலிர்க்க வைக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி!

கர்நாடகா மற்றும் கோவா எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தவழ்ந்து வரும் நீர்வீழ்ச்சி தான் தூத்சாகர் நீர்வீழ்ச்சி. சரியாக சொல்லவேண்டும் என்றால் கர்நாடகாவிற்கும் கோவாவிற்கும் இடையில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்தியாவின் உயரிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாக கருதப்படும் மண்டோவி நதியும் இங்கு தான் பாய்ந்தோடுகிறது.  

310 மீட்டர் உயரத்திலிருந்து விழும் இந்த பிரமாண்ட நீர் வீழ்ச்சி, அதிக சத்தத்துடன் கீழே விழுவது பார்க்க பிரமிப்பாக இருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் தென்படுவதால், பார்க்க கடல் போன்று காட்சியளிக்கும். அதனால் இது பாற்கடல் என்றும் அழைக்கப்படுகிறது.  

மெய்சிலிர்க்க வைக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி!

இந்த கம்பீரமான நீர் வீழ்ச்சியானது பகவான் மஹாவீர் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்காவில் காணப்படுகிறது. மேலும், இவ்விடமானது அதீதமான அடர்ந்த காடுகளையும் இயற்கை வளத்தையும் கொண்டு சூழ்ந்துள்ளது. அத்துடன் தூத்சாகர் பயண ஆர்வலர்களுக்கு சிறந்த சாகச இடமாகவும் அமைந்துள்ளது.

மெய்சிலிர்க்க வைக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி!

ரயில் பயணத்தின் போது துத்சாகர் நீர்வீழ்ச்சியை காணலாம்.எனக்கு தெரிந்த ரயில் பயணமாக, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து ஒரு ரயில் மட்டும் செல்கிறது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை மட்டும்.  ரயிலின் பெயர் வாஸ்கோட காமா எக்ஸ்பிரஸ்.  இதில், கேஸில் ராக்கில் ரயில் நிலையத்திற்கும், குலெம் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 26 கி.மீ. தூரம் பயணம், இந்தியாவில் உள்ள ரசனைமிகுந்த ரயில் பாதைகளில் ஒன்று இந்த 26  கி.மீ. பாதை. காரணம் தூத்சாகர்  நீர்வீழ்ச்சி.

மெய்சிலிர்க்க வைக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி!

ஏற்கனவே மலைப்பாதையில் ரயில் போகிறது. அதற்கிடையே  நீர்வீழ்ச்சியின் அழகு  நம்மை அறியாத ஒரு உணர்வை ஏற்ப்படுத்துகிறது. 
ரயில் பயணத்தில் தூத்சாகர்அருவியை சில நொடிகள் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கேஸில் ராக் - குலெம் பாதையில் பதினொரு குகைப்பாதைகளை கடந்த பிறகு காட்சியளிக்கிறது தூத்சாகர் நீர்வீச்சி. 

மெய்சிலிர்க்க வைக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி!

மலையின் மீதிருந்து ஊர்ந்துவரும் வெண்ணிற மேகம் போலவும், சில நிமிடங்களில் ரயில் மலைப்பாதையை சுற்றி வரும்போது வேறொரு கோணத்திலும் இந்த தூத்சாகர் நீர்வீச்சியை காணமுடிகிறது.

தூத்சாகர் நீர்வீழ்ச்சியை காண செல்லும் போது கீழ்கண்ட சுற்றுலா தலங்களையும் காணலாம்.
1.    தும்கூர் ( இங்கு பிரசித்தி பெற்ற இரண்டு மலைகள் உள்ளன, அவை  மதுரகிரி(தேன்மலை), தேவராயனதுர்கா )
2.    சித்திர துர்கா 
3.    தாவனகரே 
4.    ரானே பென்னூர் கலைமான் சரணாலயம்
5.    ஹவேரி ( ஆலய நகரம் )
6.    பனகப்புரா மயில்கள் சரணாலயம் 
7.    சிக்கெளனின் உத்சவ பாறை தோட்டம்
8.    ஹுப்பல்லி மற்றும் தர்வாட் 
9.    டண்டேலி (சாகச பயணம் )
10.    பகவான் மஹாவீர் சரணாலயம்  மற்றும் மொல்லம் தேசிய பூங்கா 

மெய்சிலிர்க்க வைக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி!

உங்கள் வாழ்க்கையில் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் அதுவும் கோவா செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள தூத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு போகாமல் இருந்து விடாதீர்கள். மனித வாழ்வில் அனைவருக்கும் ஒரு இடைவெளியானது கண்டிப்பாக தேவைப்படும். அப்போது இந்த தூத்சாகர் நீர்வீச்சியை நம் கண்கள் கண்டால், அதன் காட்சிகள்  நம் மனதை தூய்மையாகவும், புத்துணர்வுடனும் வைத்து கொள்வதுடன், நம் வாழ்க்கைக்கு புதுமையான ஒன்று கிடைத்த உணர்வு ஏற்படும்.   

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP