ஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...!

எளிதாக கூற வேண்டும் என்றால் மதங்களின் அடிப்படையில் ரம்ஜான், கிறிஸ்மஸ், தீபாவளி பொங்கல் என்று இருந்தால் தான் போனஸ், லீவாவது கிடைக்கும். அவற்றை எல்லாம் நிறுத்தினால் அப்புறம் லீவு, போனஸ் எல்லாவற்றிக்கும் ஆப்புதான்.
 | 

ஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...!

எழுதிவைத்த எந்த சட்டமும் மனிதனை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான் மதங்கள் எழுதாத சட்டங்களை ஏற்படுத்தின. அவை  நம்பிக்கை அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக வழிவந்தவை. அவற்றை அழித்து ஒழித்தால் மனிதர்களை கட்டுப்படுத்த யாராளும் முடியாது. பாலில் தண்ணீர் கலந்தால் குஷ்டம் வந்து விடும் போன்ற நம்பிக்கைகள் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டவை தான். இதற்கும் மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எல்லா மதங்களிலும் இது போன்ற தண்டனைகள் இருக்கின்றன.

சோதோம் நகரில் ஓரினப்புணர்ச்சி உட்பட அனைத்து பாவங்களும் பலுகி பெருகிய காரணத்தால் கர்த்தர் ஆபிரகாம் குடும்பத்தை மட்டும் வெளியேற்றி அந்த நகரை அழித்த வரலாறு பைபிளில் இடம் பெற்றுள்ளது. நோவாவின் பேழை கூட கர்த்தர் தவறு செய்தவர்களின் மீது கொண்ட கோபத்தை தான் வெளிப்படுத்துகிறது. இந்த தவறுகளுக்கு தண்டனை கொடுங்கள். இவற்றை விட்டு விடுங்கள் என்று ஹதீஸ்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன.

ஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...!

அவற்றை இறை நம்பிக்கை கொண்டு அணுகினால் தான் மனித குலம் நல்லபடியாக வாழ முடியும். தனிமனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக மாறிவிட்டால் உலகமே நல்லவர்களைக் மட்டுமே கொண்டதாக மாறிவிடும் அல்லவா. ஆன்மீகத்தின் நோக்கமும் அது தான். எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து கொண்டே போனால் மிருகம் போலவே தான் வாழ்க்கை அமையும். நாம் அனைவரும் தவறு செய்தால் ஏசு நம் நகரையே அழித்து விடுவார். எல்லா பயல்களும் தவறு செய்த நிலையில் நாம் மட்டும் நல்லவராக வாழ்ந்தால் கர்த்தர் நோவாவை வெளியேற்றியது போல ஆபிரகாம் குடும்பத்தை காப்பாற்றியது போல நம்மையும் காப்பாற்றுவார் என்று எண்ணி நல்லவராக வாழ வேண்டும். இதற்கு இறை நம்பிக்கை அவசியம்.  இறை விஷயத்தில் கேள்வி கேட்டுக் கொண்டே சென்றால் அதிமேதாவித் தனம் தான் ஒருவரிடம் மிஞ்சும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூட எனக்கு கேள்வி கேட்பவர்களை விட மூட்டாள்கள் தான் தேவை என்று கூறியது கூட இதன் அடிப்படையில் தான். பணம், காமம் தான் எல்லா குற்றங்களுக்கும் அடிப்படை. இவற்றை கட்டுப்படுத்தும் வகையில் தான் அனைத்து மதங்களின் போதனைகளும் உள்ளன.

இறைவன் பார்த்துக் கொண்டிருப்பான், இந்த உலகத்தில் உன் தவறுக்கு தண்டனை கிடைக்காவிட்டாலும், அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை தவறு செய்வதில் தயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான மக்கள் நல்லவர்களாக வாழ்கிறார்கள். பல ஊர்களில் இன்று போலீஸ் ஸ்டேஷனே இல்லை. கடந்த 2017ம் ஆண்டின் கணக்குப்படி சுமார் 7.25 கோடி பேர் உள்ள தமிழ்நாட்டில் வெறும் 1 லட்சத்து 21 ஆயிரத்து 215 பேர் தான் சட்டம் ஒழுங்கை , போக்குவரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் கையில் தடியைத் தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வளவு எளிதாக அவர்கள் பணியாற்றக் காரணம் எழுதப்படாத சட்டம் தான்.

இவ்வாறு சமூக ஒழுங்கை பாதுகாக்கும் ஆன்மிகத்தை, மக்களின் நம்பிக்கையை பகுத்தறிவு என்ற பெயரில் உடைத்து நொறுக்க கிளம்பி வருறோம்.

ஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...!

சபரிமலைக்கு ஆண் பக்தர்கள் மாலை அணிந்து  பல ஆண்டுகளாக சென்று வருகிறன்றனர். இதற்காக  பல சட்டதிட்டங்களை கடைபித்து வருகின்றனர். உறவினர்கள் இறந்தால் மாலையை கழட்டிவிட்டு பயணத்தை தள்ளி வைக்கிறார்கள்,  இறப்பிற்கு செல்லாமல் தவிர்க்கிறார்கள்.  இறந்தவர் வீட்டிற்கு ரகசியமாகசென்று விட்டு பின்னர் மலைக்கும் சென்றால் வெளியே தெரியவா போகிறது என அவர்கள் நினைப்பது இல்லை. இது ஐயப்பனுக்கு தெரியும் என்ற நம்பிக்கை தான் அவர்கள் இது போல ரகசிய தவறுகளை செய்யாமல் இருக்க காரணம். மேலும் அவர்களை யாரும் தட்டி எழுப்பி மலைக்கு வா மகனே என்று கூப்பிடுவதில்லை. தனிப்பட்ட முறையில் அவனுக்கு கிடைத்த பலன், அல்லது பலன் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அல்லது ஏதோ ஓர் தேடல் ஆகிவற்றை உள்ளடயக்கியது அந்த 48 நாள் ஐயப்ப வழிபாடும், அதையொட்டிய பயணமும்.

திராவிடர் கழகத்தில் மந்திரமா தந்திரமா என்ற பிரபலமான நிகழ்ச்சி மாநாடுகளில் இடம் பெறும். பக்தர்கள் செய்யும் அனைத்தையும் அங்கும் செய்து காட்டுவார்.  வேடிக்கை பார்க்கும் நமக்கு அடச்சை இது தான் பக்தி என்று ஏமாந்து இருக்கிறோமா என்று தோன்றும். அதே நேரத்தில் நாம் வேண்டிக் கொண்டோ, நம் நெருங்கிய நட்பு வட்டத்தின் வேண்டுதல் நிறைவேற்ற செல்லும் போது திக கார்கள் காட்டிய எந்த பொருளையும் எடுத்து செல்ல மாட்டோம். ஆனாலும் நாமும் எவ்வித பயிற்சியும் இல்லாமல் அதனை செய்து இருப்போம். அதுதான் வேறு பாடு.  நம்பிக்கை அடிப்படையில் ஒன்றை செய்வதும், அதற்கு தேவையான பொருட்கள் பயிற்சி என்று நீண்டகாலம் செலவு செய்து அதே விஷயத்தை செய்வதும் தான் ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் வேறுபாடு. திக மேடையில் கூட அவர் செய்வதைக் கூட பார்வையாளர்யாரும் உடனே எழுந்து சென்று செய்து விட முடியாது.

ஓர் வாதத்திற்கே வைத்துக்கொள்வோமே, இயற்கைக்கு விரோதமாகக் கூட பெண்கள்  சபரிமலைக்கும், பொதிகை மலைக்கும் செல்லக் கூடாது என்று ஒரு விதியை ஏற்படுத்தி இருக்கலாம். போனால் ஏதாவது நடந்துவிடும் என்ற அச்சம் பல ஆண்டுகளாக பெண்களை அந்த பக்கமே தலைவைக்காமல் செய்து விட்டது. தற்போது இந்த தடையை உடைத்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கி போராடுகிறோம். உண்மையில் சபரிமலைக்கு சென்று வரும் பெண்களுக்கு எந்த பின்விளைவும் ஏற்படாமல் கூட இருக்கலாம். குறிப்பிட்ட வயதுடையபெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்ற எழுதப்படாத ஒற்றை விதியை உடைக்க, எழுதப்பட்ட தீர்ப்பை அமல்படுத்த எவ்வளவு மக்கள் வரிப் பணம் செலவாகிறது. இன்னும் பத்து ஆண்டுகள், அல்லது 20 ஆண்டுகள் கழித்து அது ஒரு சுற்றுலாத்தலமாக மாறலாம். அப்போது பெண்கள் சர்வசுதந்திரமாக சென்று வரலாம்.அந்த சூழ்நிலையில் யாருக்கும் ஐயப்பன் மீது பயம் இருக்காது. அந்த காலகட்டத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு தேவையில்லாமல் வெட்டி செலவு செய்து கொண்டிருக்க வேண்டும்.

ஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...!

இதை ஏதோ பிதற்றல் என்று கூறுவோர், உணவு கலப்படம், லஞ்சம், ஊழல் என்று அடுக்கடுக்காக அதிகரித்து விட்ட தவறுகளுக்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள். அவ்வப்போது லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்தி விட்டார்களா? அப்படி தவறு செய்பவர்களை தண்டிக்க நாம் என்ன ஏற்பாடு செய்து கொண்டு உள்ளோம். 

ஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...!

கடந்த காலத்தில் பெண்ணை ஒரு ஆண் சந்திப்பது மிகவும் சிரமம். அதைத் தாண்டி  அவரை காதலிப்பது, நெருக்கம் காட்டுவது எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் இதெல்லாம் தப்பு இல்லை இதெல்லாம் தப்பு இல்லை என்று ஒவ்வொன்றாக உடைத்து விட்டோம். இன்று 100க்கு 99 சதவீதம் பெண்கள் மீ டூவால் பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் அவர்கள் வெளியே சொல்வதில்லை. அப்படியே அரசல் புரசலாக தெரிந்தால் கூட அவர்கள் கொடுக்கும் சம்பளம் அனைத்து அநீதிகளையும் அந்த பெண்ணின் வீட்டினரை கண்டு கொள்ளாமல் செய்து விடுகிறது. தண்டிக்க வேண்டிய சட்டமோ புகார், சாட்சியம் விசாரணை என்று திரைக்குள் சென்று மறைந்து விடுகிறது. பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கி இவ்வளவு காலம் கடந்து விட்டது; அங்கு அவர்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூட நாம் இது வரையில் எந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

ஆன்மீகத்தை அழித்தால் அகிலமும் அழியும்...!

கூட்டம் கூட்டமாக மனிதர்கள் விலங்குகளுக்கு இணையாக இருந்த காலத்தில்  அவர்களை பண்படுத்த மதங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் அதையொட்டிய சடங்குகள் நம்பிக்கைகள் ஏற்பட்டன. அவற்றை இன்று நாம் உடைத்து கொண்டே இருக்கிறோம். அதனால் ஏற்படும் பின்விளைகளை தடுக்க எவ்விதமான ஏற்பாடும் இல்லை. இப்படி கண் மூடித்தனமாக செய்து கொண்டே செல்வது, செய்வது நந்தவனத்தி்ல் ஒரு ஆண்டி கதையை போன்றதுதான். மிக எளிதில் ஒரு விஷயத்தை உடைத்து விடலாம் ஆனால் கட்டமைப்பது மிகவும் கடினம். அதிலும் சட்டத்தில் பல ஓட்டைகளை வைத்துக் கொண்டு மனித இனத்தை ஒழுங்காக காப்பாற்றுவோம் என்பது கனவில் கூட நடக்காது.

எளிதாக கூற வேண்டும் என்றால் மதங்களின் அடிப்படையில் ரம்ஜான், கிறிஸ்மஸ், தீபாவளி பொங்கல் என்று இருந்தால் தான் போனஸ், லீவாவது கிடைக்கும். பகுத்தறிவு இவர் அன்று தான் பிறந்தாரா. நரகாசுரன் கற்பனை பாத்திரம் என்றெல்லாம் .பேசி அவற்றை எல்லாம் நிறுத்தினால் அப்புறம் லீவு, போனஸ் எல்லாவற்றிக்கும் ஆப்புதான்.

அரசியல், பொருளாதாரம், வாழ்க்கை முறை என்று அனைத்திலும் ஊடுறுவி தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டு மதம் செல்கிறது. அதை மடைமாற்றம் செய்தால் அது எல்லாவற்றையும் அழித்துவிடும். அதன் பின்னர் அனுபவிக்க ஆட்களே இருக்காது. பல ஆண்டுகளாக பாடுபட்ட வளர்த்த மத நம்பிக்கைகளை எந்தவிதமான யோசனையும் இல்லாமல் நந்தவன ஆண்டிபோல போட்டு உடைக்கிறோம். அது அகிலத்திற்கே நல்லது இல்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP