சீரழிந்த செட்டிநாட்டு கோமான் - பரிதாப ப.சிதம்பரம்

சாதாரண பிக்பாக்கெட் போல ஓடி ஒளியும் நிலை ப.சிக்கு ஏற்பட்டது காலத்தின் கோலம். இந்த இழிநிலையின் வித்து 2007ம் ஆண்டு விதைக்கப்பட்டது.
 | 

சீரழிந்த செட்டிநாட்டு கோமான் - பரிதாப ப.சிதம்பரம்

பாரதி பித்தன்

அரசியல்வாதி என்ற பெயர், பட்டம், பதவி என்று  எதை வேண்டுமானாலும் நீங்கள் பெற்றிருக்கலாம். அவையெல்லாம் நிரந்தரமானாது என்று கூட நீங்கள் நினைத்து செயல்படலாம். ஆனால் அவை தற்காலிகமானதுதான் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்திடும் . இந்த தற்காலிகம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து போன்று நீண்ட தற்காலிகமானது இல்லை. தற்காலிகமான தற்காலிகம் 5 ஆண்டுகள் தான். அதிலும் அமைச்சர் பதவி தற்காலிகத்தில் தற்காலிகம் தான். ஆனால் நம் அரசியல்வாதிகள் இதை தவறாக புறிந்து கொண்டு, அல்லது சரியாக புரிந்து கொண்டு அடிக்கும் கொள்ளை கணக்கில் அடங்காதது. அதில் மூன்றாம் தர அரசியல்வாதிகளை விட முதல்தர அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளைகள்தான்  பலப்பல பலான கோடிகளில் இருக்கும். அதன் பின்விளைவுகளை அவர்கள் சிந்தனை செய்வதே இல்லை. இதனால் பாவம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகைள் வரும் போது அவர்கள் படும் கேவலம் இருக்கிறதே. இதுவரை கஷ்டப்பட்டு சேர்த்த அனைத்து கௌரவத்தையும் இழக்க செய்துவிடும். அப்படி கௌரவத்தை இழந்து நிற்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல மன்மோகன் அரசில் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்த போது அவர் வீட்டில் காத்துக்கிடந்த போலீசார், தற்போது அமைச்சர் பதவியை இழந்த பின்னரும் அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். அவரை கைது செய்ய வேண்டும் என்பது தான் தற்போதுள்ள ஒரே வேறு பாடு.

சாதாரண பிக்பாக்கெட் போல ஓடி ஒளியும் நிலை ப.சிக்கு ஏற்பட்டது காலத்தின் கோலம். இந்த இழிநிலையின் வித்து 2007ம் ஆண்டு விதைக்கப்பட்டது.

ப.சிதம்பரம் 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தார். அவரை பார்க்க முடியாதவர்கள்; தங்களுக்கு தேவையானதை உற்சவரான கார்த்தி சிதம்பரத்தை நாடி நிறைவேற்றிக் கொண்டனர். அவர்களில் இந்திராணி முகர்ஜியும் ஒருவர்.

இந்திராணி முகர்ஜியின் ஐஎன்எஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் அன்னிய நேரடி முதலீடு பெற நிதி அமைச்சகத்தில் விண்ணப்பித்தது. 2007ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி எப்ஐபிபி 4.62 கோடி நிதியை பெற்றுக் கொள்ள அனுமதித்தது.

ஆனால் உற்சவர் கருணையால் 305 கோடி ரூபாய் நிதி திரட்டியது. உற்சவருக்கு கணிசமான தொகை கமிஷனாக கைமாறியது.

ஆட்சி மாறியதும், அமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்தன. இந்நிலையில் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக அருண்ஜெட்லி இருந்தார். அவர் சிதம்பரத்தின் ஆதரவாளர் என்று சுப்பிரமணிய சுவாமி குற்றம் சாட்டி வந்தார். அது உண்மையோ பொயோ, சிதரம்பரத்தின் மீதான இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. அவர் கேட்ட போதெல்லாம் ஜாமீன் கிடைத்து. தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

சிதம்பரத்திற்கு கிடைத்து வந்த ஆதரவு கரம் அகன்று விட்டதால், வழக்கு வேறு திசை நோக்கி திரும்பி விட்டது.

இந்த சர்ச்சை நாயகி இந்திராணி முகர்ஜி இந்த வழக்கிலும், சொந்த மகளை கொலை செய்த வழக்கிலும் சிறையில் இருக்கிறார். இதில் உற்சவ மூர்த்தியான கார்த்திக் சிதம்பரம் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி கைது செய்ப்பட்டு 23 நாட்கள் சிறையில் இருந்தார். ஆனால் பசிக்கு மட்டும் எந்த மார்க்கெட்டிலோ ஜாமீன் விலை மலிவாக கிடைத்துக் கொண்டே இருந்தது.

இப்போது ஜாமீன் வழங்க தடைக்காலம் போல சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கௌர் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

விளைவு உள்துறை அமைச்சர் பசி பிளேடு பக்கிரி அளவிற்கு கிரேட் எஸ்கேப்.

ஜாமீன் கிடைக்காவிட்டால் உடனே அவர் வழக்கில் சரண் அடைந்து சிறையில் இருந்த படியே ஜாமீன் பெறத் தேவையான நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால் பிளேடு பக்கிரியாக மாறியது வேதனைக்குறியது.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம், அல்லது வழக்கில் இருந்து மொத்தமாக  விடுவிக்கப்படலாம். ஆனால் செட்டிநாட்டு அரசர் குடும்பத்தை சேர்ந்தவர், தலைநகரில் தமிழர்களின் பெருமையை கொடிகட்டி பறக்கச் செய்தவர். நாணயத்தின் இலக்கணமாக திகழும் சமுதாயத்திலிருந்து வந்த  பசி ஏற்படுத்திய அவமானம்,  செட்டி நாட்டார் என்ற உன்னத கௌரவத்தை குழிதோண்டி புதைத்த புண்ணியம் காலத்திற்கும் அழியாது.  முன்பெல்லாம் செட்டி நாட்டிலிருந்து வருபவர்கள் முருகன் கோவிலை கட்டினார், முருகனுக்கு கும்பாபிஷேகம் நடத்தினார் என்று பெருமையோடு சொல்வார்கள். ஆனால் தற்போது இந்த செட்டி நாட்டு கோமான் நீதிமன்றம் நீதிமன்றமாக ஏறி இறங்கி முன் ஜாமீன் பெற்று வந்தார் என்ற புதிய கௌரவத்தை உருவாக்கினார். தற்போது பிளேடு பக்கிரி போல் ஓடி ஓளிந்து கொண்டார் என்று மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். சிதரம்பரத்தின் கௌரவம், அவர் பிளேடு பக்கிரியாக மாறிய நிலை ஆகியன மற்ற அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP