பஞ்சபூதங்களால் உருவாக்கப்படும் ”கடம்”

மானாமதுரைக்கு புகழ்பெற்ற தொழில் என்றால் அது கடம் தான். கடம் பார்ப்பதற்க்கு பானை வடிவில் இருக்கும், ஆனால் அதன் இசை பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இதை பெண்களும் இசைகின்றனர், ஆண்களும் இசைகின்றனர்
 | 

பஞ்சபூதங்களால் உருவாக்கப்படும் ”கடம்”

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது களிமண் தான் . இது பலருக்கு தெரியாத ஒன்று. மானாமதுரையில் களிமண், வளம் மிக்க பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள களிமண்ணில் தயாரிக்கப்படும் பொருட்கள் என்னவென்றால்,  பூ தொட்டி, மண் பானை, செங்கல், கூரை ஓடு, கல நயமுள்ள பொம்மைகள். இதில், கடம் என்னும் இசை கருவி ஆகியவை புகழ்பெற்றவை. 

மானாமதுரைக்கு புகழ்பெற்ற தொழில் என்றால் அது கடம் தான். கடம் பார்ப்பதற்க்கு பானை வடிவில் இருக்கும், ஆனால் அதன் இசை பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இதை பெண்களும் இசைகின்றனர், ஆண்களும் இசைகின்றனர். கடம் என்னும் இசைகருவியை மையமாக வைத்து தொழிலை செய்துகொண்டு வந்த ஒரு குடும்பம் 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு சங்கீத அகாடமி தேசிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. பல சிறப்புகளுக்கு சொந்தமான மானாமதுரை கடம் ஒரு முக்கிய இசைக்கருவியாக உள்ளது. இசைக்கருவிகளில் முக்கிய இடம் வகிப்பது கடம். எதற்காக மண் பானையை வைத்துக் கொண்டு கர்நாடக இசைக் கலைஞர்கள் கச்சேரிகளில் தட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரியாதவர்கள் ஆச்சரியப்படலாம். 

மானாமதுரை கடம் ஒரு அருமையான இசைக் கருவி, இந்த கடமானது, மானாமதுரையில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. கடம் தயாரிக்கும் தொழிளாலர்களுக்கு தக்க மறியாதையை மத்திய அரசு கொடுத்திருப்பது தங்களுக்கு மிகவும் மழிச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்கின்றனர் அத்தொழிலை செய்பவர்கள். மேலும் எங்கள் தொழிளுக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரமாக பார்கின்றன் என்கின்றனர். இது இசைத்துறை சார்ந்தது என  பலருக்கும் தெரியாது. பெரும்பாலான கர்நாடக இசைக்கலைஞர்கள் மானாமதுரை கடத்தை தான் தேர்வு செய்து கச்சேரிகளில் பயன்படுத்துவார்கள். மானாமதுரை கடத்தை அதிகம் நேசிப்பவர்கள் இந்தியாவில் பல இடங்களில் பயன்படுத்துகின்றனர். இசை கருவிகளில் பல இசை கருவிகளை பல விதங்களில் பயன்படுத்தி இசைக்கலாம், ஆனால் கர்நாடக இசைக் கருவிகளை மடியில் வைத்து அணைத்தபடியே தான் வாசிக்க முடியும். மற்ற கருவிகளை போல தரையில் வைத்தோ, கழுத்தில் மாட்டிக் கொண்டோ வாசிக்க முடியாது. 

பஞ்சபூதங்களால் உருவாக்கப்படும் ”கடம்”

கடம் தயாரிக்கும் முறையை பார்த்தால் சற்று வித்தியாசமாக இருக்குகிறது. ஏன்னென்றால் கடம் தயாரிக்க களிமண்னை பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து பயன்படுத்துகின்றனர். 5 அல்லது 6 குளங்களில் இருந்து களிமண் எடுக்கின்றனர். ஒருநாள் முழுவதும் காய வைக்கப்படும் களிமண்னை வைகை ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட சன்னமான மணலுடன் சேர்த்து கலக்கப்படுகிறது. பின்னர் சுடு வெயிலில் 4 மணிநேரம் காய வைக்கப்படுகிறது. அதனுடன் ஈயம் மற்றும் கிராஃபைட் கலக்கப்பட்டு 6 மணிநேரம் நன்றாக மிதிக்கப்பட்டு பண்படுத்தப்படுகிறது. 2 நாட்களுக்குப் பிறகு நன்றாக காய்ந்து உறுதியான மண் தயார்படுத்தபடுகிறது. 

பிறகுஒரு பெரிய மண்கட்டிகளை மின்சக்கரத்தின் நடுவில் வைத்து அதை சுழலச் செய்கிறார்கள். தொழிளாலர்கள் தங்கள் கைகளை பயன்படுத்தி அதனை பானை வடிவில் வலைத்து முடிக்கின்றன. அடுத்த கட்டமாக தட்டித் தட்டி தொனியை சரி செய்வது. தொடர்ந்து இரு வாரங்களுக்கு பானை நிழலில் காயவைக்கப்பட்டு, 4 மணிநேரம் வெயிலில் சூடேற்றப்படுகிறது. பின் காவி நிற சாயம் பூசப்பட்டு வழவழப்பு தன்மையுடன் மாறுகிறது. பின்னர் 12 மணிநேரம் சூளையில் இடப்பட்டு அதன் பாதி எடையை இழக்க செய்கிறார்கள். இனிய இசை தரும் 8 கிலோ எடை கொண்ட மானாமதுரை கடம் தயார் செய்யப்படுகிறது. மானாமதுரை கடம் இன்றளவும் கனமானதாகவே செய்யப்பட்டு வருகிறது. 

பஞ்சபூதங்களால் உருவாக்கப்படும் ”கடம்”

சமையலுக்குப் பயன்படுத்தி வரும் மண்பாண்டகளை விட 3 மடங்கு அதிக எடையும் 2 மடங்கு அதிக தடிமனும் கொண்டது.  ஆனால் மற்ற இடங்களில் தயாரிக்கப்படும் கடங்களில், இசை கலைஞருக்கு ஏற்றார் போல் பல இடங்களுக்கு எடுத்துச் செல்ல சிறியதாக, எடை குறைவாக, நேர்த்தியாக தயாரிக்கப்படுகிறது. ஒரு கடம் 600 ரூபாய்க்கும் மேல் தான்  விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஆடம்பரமாகக் கருதப்படும் சீனக்களிமண் பாத்திரங்கள் சில ஆயிரம் கணக்கில் விற்க்கப்படுகிறது. 

இந்த பாரம்பரிய கலை காலத்தோடு அழியாத வண்ணம் இன்றும் மானாமதுரையில் ஒரு சில இடங்களில் தயாரிக்கப்படுகிறது. மானாமதுரை போன்ற இடங்களில் தயாரிக்கப்படும் கடம் முழுமையும் விற்ப்பனைக்கு வருவதில்லை, ஏன்னென்றால் ஒலி மற்றும் தொனி பரிசோதனையில் தோல்வி அடைகின்றன. கடம் செய்பவர்கள் அனைவரும் முரையாக சங்கீதம் பயின்றவர்கள் அல்ல. ஆனால் நேர்த்தியாக கடம் செய்கின்றனர்.. கிடைக்கும் பலன்கள் குறைவாக இருந்தாலும் இசைக்கு ஆற்றும் சேவையாகவே இன்றும் ஒரு சிலர் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். 

பஞ்சபூதங்களால் உருவாக்கப்படும் ”கடம்”

பெரும்பாலான இசைக்கருவிகள் விலங்குகளின் தோலில் இருந்தே உருவாக்கப்படுகின்றன. ஆனால் கடம் மட்டுமே பஞ்சபூதங்களால் உருவாகிறது. பூமியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை காற்றும், ஆகாயத்தின் சூரியனும் உலர்த்தி, நீர் அதற்கு வடிவம் கொடுக்க, நெருப்பு அதனை முழுமை செய்கிறது. ஆனால் இத்தொழிலை செய்ய பெரும்பாலான இளைய தலைமுறையினர் முன்வருவதில்லை என்கின்றனர் இத்தொழிலை செய்பவர்கள். ஆனால் மானாமதுரை கடத்திற்கு இசை அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றால் இத்தொழிலை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற நோகத்தோடு தான். ஆகையால் இளைய தலைமுறையினர் இத்தொழிலை காப்பாற்ற முன்வருவார்களா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.    

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP