தமிழ் ராக்கர்ஸுடன் தொடர்பா..விஷாலுக்கு நெருக்கடி; பின்னணியில் யார்? -  பூதாகரமானது தயாரிப்பாளர்கள் சங்க சர்ச்சை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷாலுக்கு எதிராக கே.ராஜன், பாரதிராஜா உள்ளிட்டோர் அடங்கிய பிரிவு தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் இன்று விஷால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

தமிழ் ராக்கர்ஸுடன் தொடர்பா..விஷாலுக்கு நெருக்கடி; பின்னணியில் யார்? -  பூதாகரமானது தயாரிப்பாளர்கள் சங்க சர்ச்சை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷாலுக்கு எதிராக கே.ராஜன், பாரதிராஜா உள்ளிட்டோர் அடங்கிய பிரிவு தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். 

இதனையடுத்து நேற்று இந்த பிரிவினர் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். பொதுக்குழுவில் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையான முடிவை விஷால் எடுப்பதாகவும், 7 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். மேலும் அவர் பல மாதங்களாக சங்கத்திற்கு வரவே இல்லை என்றும் விஷாலின் மீது குற்றம் சாட்டி இருந்தனர். 

தமிழ் ராக்கர்ஸுடன் தொடர்பா..விஷாலுக்கு நெருக்கடி; பின்னணியில் யார்? -  பூதாகரமானது தயாரிப்பாளர்கள் சங்க சர்ச்சை

இதோடு அண்ணா சாலையில் இருக்கக் கூடிய அலுவலகத்திற்கும் பூட்டு போடப்பட்டது. இந்நிலையில் இன்று சங்கத்தின் தலைவர் விஷால், அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைப்பதற்கு சென்றார். ஆனால் அவருக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் விஷாலோடு பேச்சுவார்தை நடத்தினார். அப்போது சங்க நிர்வாகிகள் இருந்தனர். 

தொடர்ந்து விஷால் கோரிக்கை வைத்த போதும் போலீசார் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. திருட்டு பூட்டுக்கு காவல் துறை ஏன் பாதுகாப்பு அளிக்கிறது என்று விஷால் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து போலீசார் விஷால் மற்றும் மன்சூர் அலிகானை கைது செய்தனர்.

பின்னர் விஷாலுக்கு எதிரான பிரிவினர் இன்று முதல்வரை சந்தித்தனர். அப்போது அவர்கள் குற்றச்சாட்டுகளை கூறி விரைவில் தேர்தல் நடத்தவும், ஒரு குழு அமைத்து சங்கத்தை நிர்வகிக்கவும் கோரிக்கை வைத்தனர். 

இதனிடையே விஷாலின் ஆதரவாளரான தயாரிப்பாளர் பிரவீன் முன்னிலையில் சங்க அலுவலகம் போலீசாரால் திறக்கப்பட்டது. 

பின்னர் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது, "பிரச்னைகள் குறித்து நாங்கள் கூறிய போது செயலாளர் கதிரேசன், உங்கள் விருப்பப்படி பூட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள் என்றார். அதனால் தான் நாங்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டோம். இன்று ரிஜிஸ்தார் ஆஃப் சொசைட்டியிடம் மனு கொடுத்துள்ளோம். தற்போது முதல்வரை பாரதிராஜா தலைமையில் 25 அங்கத்தினர் சந்தித்தோம். முதல்வர் எங்கள் குறையை கேட்டார். அதிகாரிகளுடன் கலந்து பேசி ஒரு நல்ல முடிவெடுக்கிறேன் என்று கூறினார். 7  கோடியே 80 லட்சத்தில் தற்போது 50 லட்சம் தான் உள்ளது. இதற்கான விளக்கம் வேண்டும். மேலும் 2 ஆண்டுகளாக பொதுக்குழு கூட்டப்படவில்லை தமிழகத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் எங்கள் சங்கம் தான் குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் நிதி தரும். ஆனால் கஜா புயல் வந்து இத்தனை நாட்கள் ஆகி உள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சமாவது கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. நேற்று முன்தினம் செயற்குழுவை கூட்ட சொன்ன விஷால் அலுவலகத்திற்கு 8 மணி வரை வரவில்லை. இப்படி சட்டவிரோதமாக செயல்படும் விஷால் விரைவில் சங்கத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும். தேர்தலை அறிவிக்க வேண்டும். 

தமிழ் ராக்கர்ஸுடன் தொடர்பா..விஷாலுக்கு நெருக்கடி; பின்னணியில் யார்? -  பூதாகரமானது தயாரிப்பாளர்கள் சங்க சர்ச்சை

இதற்கிடையே இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தி அதில் வரும் நிதியில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடுகட்டித்தரப்படும் என்று கூறுகிறார். சென்ற முறை பணம் கொடுத்து தேர்தலில் வெற்றிப்பெற்றது போல இந்த முறை வீடுகொடுத்து வெற்றி பெற நினைக்கிறார். 

அற்புதமாக இருந்த சங்கத்தை தற்போது கேவலமான நிலைக்கு விஷால் தள்ளியிருக்கிறார். 150 உறுப்பினர்களை அவர் நீக்கி உள்ளார். இங்கே ஹிட்லர் ஆட்சி போல நடக்கிறது. 

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் லைகாவோடு சேர்ந்துக்கொண்டு ரூ.33 கோடி வாங்கி இரும்புத்திரை படத்தை வெளியிட்டு இருக்கிறார். தயாரிப்பாளர்களை அழிப்பவர்களோடு கூட்டுச்சேர்ந்து விஷால் இவ்வாறு செய்கிறார்" என்றார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா, "2 வருடங்களாக பொதுக்குழு கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஒரு வருடமாக நிர்வாகிகள் சங்கத்திற்கு வரவில்லை. கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் என்பது தலைமையின் பொறுப்பு. உரிய அலுவலகத்தை தவிர்த்து மற்றொரு அறையில் அனைத்து நிர்வாக பணிகளையும் நடத்துகிறார்கள். அதற்காக தான் பூட்டுப்போட்டோம். இன்னும் இதனை இழுத்துக்கொண்டே செல்ல முடியாது. எனவே தான் அரசிடம் முறையிட்டுள்ளோம்" என்றார். 

இதனிடையே விஷால் கூறும்போது, "நியாயம் என்ன என்று அனைவருக்கும் தெரியும். நான் ஊரில் இல்லாத போது அலுவலகங்களுக்கு பூட்டு போட்டுள்ளனர். தற்போது என்னை கைது செய்துள்ளனர். முறைகேடுகள் நடந்துள்ளது என்று யார் வேண்டும் என்றாலும் கூறலாம். அதுகுறித்து பேசியிருக்க வேண்டும். இளையராஜாவுக்காக பெரிய விழா நடத்த உள்ளோம். அதற்கு பிறகு பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. 

கணக்குகளை கொடுக்காலம் நாங்கள் எங்கும் ஓடிவிடமாட்டோம். யாருக்காக பணம் செலவிடப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க தாயர். இன்னும் 4 மாதங்கள் என்னுடைய பதவிகாலம் இருக்கிறது. நாங்கள் சிறு தயாரிப்பாளர்களுக்கு நிலம் கொடுக்க உள்ளோம் என்பது தான் அவர்களது பிரச்னை" என்றார். 

கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அங்கு விஷால் போட்டியிட இருந்தார். ஆனால் அவரது வேட்பாளர் மனு நிராகிரக்கப்பட்டது. அந்த பின்னணியில் தான் தற்போது நெருக்கடிகள் வருகின்றதா என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷால், "அப்படி இருந்தால் அரசியல்வாதிகளுக்கு வாழ்த்துகள். இல்லை என்றால் மகிழ்ச்சி" என பதில் அளித்துள்ளார். 

தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸை பிடிப்போம் என்று பேசி வருபவர் விஷால். ஆனால் அவரே தமிழ்ராக்கர்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் சில மாதங்களாக எழுந்துள்ளன. குறிப்பாக இரும்புத்திரை படம் வெளியான போது இந்த குற்றச்சாட்டை பலர் கூறினர். இதுகுறித்து ஜே.கே.ரித்திஷ் பேசும் போது, "உறுதியாக தெரியாத விஷயம் பற்றி பேச முடியாது.  விஷால் தான் தமிழ் ராக்கர்ஸை பிடிப்போம் என்று கூறினார். அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு குழு பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் இதுப்பற்றி பேசவே இல்லை" என்று கூறினார். 

தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு மேலும் ஒரு காரணமும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரதிராஜாவுக்கு இடையே மனகசப்பு இருப்பதால் சங்கம் சார்பில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியை தடுக்கவே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். 

தமிழ் ராக்கர்ஸுடன் தொடர்பா..விஷாலுக்கு நெருக்கடி; பின்னணியில் யார்? -  பூதாகரமானது தயாரிப்பாளர்கள் சங்க சர்ச்சை

கிருஸ்துமஸ் விடுமுறை நெருங்கி உள்ள நிலையில் நாளை தனுஷ் நடித்துள்ள மாரி2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா உட்பட பல படங்கள் வெளியாக உள்ளன. மேலும் இன்று விஜய் சேதுபதியின் சீதக்காதி வெளியாகி உள்ளது. 

மேலும் பொங்கல் வரை பல படங்கள் வெளியாக தயாராக உள்ளன. எனவே சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் விஷாலின் நிர்வாகத்தை கேள்வி குறியாக்கி உள்ள நிலையில், தற்போது அவருக்கு மேலும் நெருக்கடி உருவாகி உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP