எண்ணித் துணிக கருமம்!

இது மட்டும் அல்லாமல் இனி வரும் நாட்களில் திமுக சுழற்ற உள்ள வாள் வீச்சும் அட்டைக்கத்தியாகத்தான் இருக்குமே தவிர்த்து எதுவுமே நடக்கப் போவது இல்லை.
 | 

எண்ணித் துணிக கருமம்!

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை வலியுறுத்த போது இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின்  சமீபத்தில் அறிவித்தார். இது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான். சட்டசபைத் தேர்தல் முடிவுகள், அதிமுகவிற்கு பாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில், அமமுக ஆதரவு எம்எல்ஏகள் அறந்தாங்கி ரத்தனசபாபதி, விருதாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் கடந்த 30ம் தேதி புகார் கொடுத்தார். அதன் பேரில் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

இதனை தடுக்கும் விதமாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை, திமுக வழங்கியது. ஆனால் சட்டசபை இடைத்தேர்தல் முடிவு யாருக்கும் லாபம் இல்லாமல் முடிவுக்கு வந்தது. 22 தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் 13 தொகுயில் திமுகவும் 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றது. 

இதனால் ஆளும் கட்சிக்கு 123 எம்எல்ஏகளும், திமுக உட்பட எதிர்கட்சி கூட்டணிக்கு 109 இடங்களும் கிடைத்தன. இதன் காரணமாக அதிமுக ஆட்சி இயல்பாக பெரும்பான்மை பெற்று விட்டதால் 3 எம்எல்ஏகளுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டது. 3 எம்எல்ஏகள் ரோசம் காட்டினால் அவர்கள் பதவிக்கு தான் ஆபத்து என்பதை தவிர்த்து ஆளும் கட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது.

அதையும் மீறி வேகம் காட்டி பதவியை இழந்தால், 18 எம்எல்ஏகள் பாடம் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். அதனால் சம்பந்தப்பட்ட 3 பேரும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் அதிமுக ஆதரவு நிலையே எடுக்க வாய்ப்பு அதிகம்.

திமுகவை பொறுத்தளவில், 109 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு டிடிவி தினகரன் மட்டுமே ஆதரவு தெரிவிப்பார் என்று கூறினார்.இதனால் தீர்மானத்திற்கு ஆதரவாக 110 ஓட்டும், எதிராக சுமார் 122 ஓட்டுகளும் கிடைக்கலாம். எப்படி இருந்தாலும் தோல்விதான்.

இது நிச்சயம் என்ற பிறகு தான் திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து வற்புறுத்த மாட்டோம் என்று பின்வாங்கி உள்ளார். இது ஸ்டாலின் எண்ணக்க கணக்கு அல்ல. எண்ணிக்கை கணக்கு.

ஸ்டாலின் முடிவு இந்த தீர்மானத்தில் வெளிப்பட்டு விட்டால் கூட இனி வரும் தீர்மானங்கள் நிலையும் இதுதான். அதிமுக மீண்டும் பன்னீர் செல்வம், பழனிசாமி என்று உடையாத வரையில் திமுகவால் இந்த ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. 

ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்னை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தினார் என்று  தர்ம யுத்தம் தொடங்கும் போது வெளிப்படையாக அறிவித்த பன்னீர்செல்வம் இன்று வரை அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் அதாவது அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவர் மீதுள்ள குட்கா வழங்கால் அதிமுகவிற்கு கலங்கம் ஏற்பட்டு விட்டது என்பது போன்றவைகளை பன்னீர் செல்வம் கூற வில்லை.

 இதானால் அவர் பழனிசாமிக்கு எதிராக எந்த யுத்தமும் தொடங்க மாட்டார். இப்படியே ஆட்சி சட்டசபைத் தேர்தல் வரை தொடரும். இந்த சூழ்நிலையால் தான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கருவிலேயே கலைந்ததற்கான காரணம். 

இது மட்டும் அல்லாமல் இனி வரும் நாட்களில் திமுக சுழற்ற உள்ள வாள் வீச்சும் அட்டைக்கத்தியாகத்தான் இருக்குமே தவிர்த்து எதுவுமே நடக்கப் போவது இல்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP