எண்ணித் துணிக கருமம்!

மாநிலம் முழுவதும் 989 பேர் தேர்வு எழுதியிருந்தாலும் கன்யாகுமரியில் வசிப்பவர் மதுரைக்கும், நாகை மாவட்டத்தில் வசிப்பவர் திருச்சிக்கும், சேலத்துக்காரர் சென்னை அல்லது கோவைக்கும் சென்று தான் தேர்வு எழுதியிருப்பார் என்றால் இதற்காக அவர் செய்த செலவு, பட்ட சிரமங்களை உணர முடியும்.
 | 

எண்ணித் துணிக கருமம்!

திமுகவிற்கு வலிமை ஊட்டுவதற்காக எடுத்தது போல, மத்திய அரசின் பல முடிவுகள் உள்ளன. இது, தபால்துறை தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் வெளிப்படுகிறது. ஆமை தலை நீட்டிய பின்னர்,  அபாயத்தை உணர்ந்தால் அதை உள்ளே இழுத்துக் கொள்வது போலத்தான், மத்திய அரசு எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவுளை அறிவித்துவிட்டு திமுக உட்பட தமிழக அரசியல் கட்சிகள் கூச்சல் இட்டால், தன் முடிவை மத்திய அரசு வாபஸ் பெறுகிறது.

தபால் துறை தேர்வு, 15 மொழிகளில் எழுதலாம் என இருந்தது. இதில், பிராந்திய மொழி மட்டும் தெரிந்தவர்கள் தேர்ச்சி பெறுவதால், ஒரு பகுதியில் தேவையான அளவிற்கும், இன்னொருபகுதியில் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு இருந்தது. மேலும் மாநிலம், மாநிலம் விடைத்தாள்கள் திருத்த முடியவில்லை.

நாடு முழுவதும் இந்தி, ஆங்கிலத்தில் தேர்வு நடத்தினால் 2 மொழி அறிந்தவர்கள் தேர்வு பெற வாய்ப்பு உள்ளது. மேலும் தென் மாநில விடைத்தாள்களை வட மாநிலங்களில் கூட திருத்த வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் தேர்வில் நடந்த மோசடிகளையும் தடுக்க முடியும். இதனால் தான் தேர்வை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் எழுத வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்த போதே திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. வேறு வழியில்லாமல் மத்திய அரசின், தமிழக கூட்டணிகள் கூட இந்த எதிர்ப்பில் களம் இறங்கின. ஆனால் மத்திய அரசு தன் முடிவில் உறுதியாக இருப்பது போல காட்டிக் கொண்டது. இதனால் லோக்சபா, ராஜ்யசபா ஆகிவற்றை முடக்கும் அளவிற்கு எதிர்ப்பு வலுத்தது. இந்த சூழ்நிலையில் ஐகோர்ட் மதுரைக்கிளை தேர்வுக்கு அனுமதியளித்து,முடிவுக்கு தடைவிதித்தது.

அதே நேரத்தில் கடந்த 14ம் தேதி  தபால் துறை தேர்வு நடந்து முடிந்துவிட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை,மதுரை திருச்சி ஆகிய ஊர்களில் 989 பேர் தேர்வு எழுதி உள்ளார்கள். தமிழகத்தில் காலி இடங்கள் 1039 இடங்கள். இதைவிட தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் வேலை நிச்சயம்.

மாநிலம் முழுவதும் 989 பேர் தேர்வு எழுதியிருந்தாலும் கன்யாகுமரியில் வசிப்பவர் மதுரைக்கும், நாகை மாவட்டத்தில் வசிப்பவர் திருச்சிக்கும், சேலத்துக்காரர் சென்னை அல்லது கோவைக்கும் சென்று தான் தேர்வு எழுதியிருப்பார் என்றால் இதற்காக அவர் செய்த செலவு, பட்ட சிரமங்களை உணர முடியும்.

இது போன்ற நிலையில் மத்திய அரசு இந்த தேர்வை ரத்து செய்துள்ளது.  தமிழில் தான் தேர்வு எழுத வேண்டும் என்று வற்புறுத்திய கட்சிகளும்,மத்திய அரசும் தேர்வு எழுதியவர்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக தேர்வு எழுதியவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

இந்த முறை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவித்ததால் பலர் விண்ணப்பிக்கவே இல்லை. மத்திய அரசு மீண்டும் தேர்வு நடத்தும் போது, ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தவிர மற்றவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு தருவார்களா? அப்படி தராவிட்டால் எழுதிய தேர்வை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு போக்குவரத்து உட்பட பல விதமான காரணங்களால் ஏற்பட்ட செலவுகளை அரசே ஏற்குமா என்பது போன்ற பல கேள்விகளை எழுப்ப கூட ஆட்களே இல்லை.

தற்போது வெளியாகியுள்ள உத்தரவு, திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் பட்டியலில் மேலும் ஒரு சாதனையாக இடம் பெறலாமே தவிர்த்து மக்களுக்கு எவ்வகையிலும் பயன் அளிக்க போவதில்லை. இனி வரும் காலங்களில் எடுக்கும் முடிவுகளில் அனைத்து பிராந்திய மொழிகள் அல்லது ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்ற. மொழிகளையாவது கணக்கி்ல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் இந்திய ஒற்றுமையை அனைவரும் ஏற்க உதவி செய்யும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP