தொடரும் பாலியல் புகார்கள்.... என்ன தீர்வு காணப் போகிறோம்...?

பாசமழை பொழியும் ஜோடிகள் விவாக ரத்து செய்து பிறந்த பின்னர் மீண்டும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவர் மீது எந்த விதமான உறுத்தலும் இல்லாமல் பாசமழை பொழியும் காலம் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.
 | 

தொடரும் பாலியல் புகார்கள்.... என்ன தீர்வு காணப் போகிறோம்...?

இல்லறத்தின் இலக்கணம் சொல்லும் காமசூத்ராவில் யார் யாரை பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாக்குவார்கள் என்று ஒரு மிகப் பெரிய பட்டியலே உள்ளது. சித்தாள் தொடங்கி பாடகி சின்பயி வரை விசாரி்த்தால் மிகப் பெரிய பட்டியலேயே கிடைக்கும். கடந்த காலத்தில் ஆண்கள் மட்டும் எல்லாதுறையிலும் வேலை செய்த போது பாலியல் துன்புறுத்தல் வெகு சொற்பமாக இருந்தது. அதுவே எல்லாதுறையிலும் ஆண்களுக்கு பெண் இணையாக களம் இறங்கியதும் அங்கு இங்கு இல்லாதபடி எங்கும் நிறைந்ததாக பாலியல் சீண்டல்கள் அதிகமாகிவிட்டது. இதில் வெளிப்படுவது குறைவுதான். எல்லா சட்டங்களையும் தவறாக பயன்படுத்துவதைப் போலவே பாலியல் குற்றச்சாட்டு கூறுவதும் ஒரு வழக்கமாகிவிட்டது. 

என்னிடம் புகார் கொடுக்க வரும் போது கூடவே ஒரு காவலர் அவருக்கு உதவியாக வந்து நிற்கிறாரே அது எதற்காக தெரியுமா? என் அறையில் நானும் புகார் கொடுக்க வந்தவர் மட்டும் இருந்தால், அவர் புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் நாளை அவர் அந்த அதிகாரி என்னிடம் தவறாக நடக்க முயன்றார் நான் அதற்கு நான் உடன் படவில்லை இதனால் என் புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்று என்மீதே குற்றம் சாட்ட வாய்ப்பு உள்ளது. அதற்கு வழியில்லாமல் இருக்கவும், ஒரு சாட்சியாகவும் தான் அவர் வந்து செல்கிறார். இவ்வாறு கூறியவர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர். 

இதனால் தான் பெரும்பாலான அலுவலகங்கள் உள்ளே 4 புறமும் கண்ணாடி சூழ்ந்த அறை அதிகாரிக்கு ஒதுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து கிளை அலுவலகத்தில் மேலாளர் அறையில் டிரைவருக்கும் மேலாளருக்கும் வாய் தகராறு முற்றி டிரைவர் மேலாளரை அறைந்துவிட்டு, ஆத்திரத்துடன் வெளியேறே கதவை திறக்கிறார். அந்த நேரம் மேலாளர் அறைவாங்கிய அதிர்சியில் அந்த ....பயலைப் பிடியுங்கள் என்று கத்துகிறார். கதவு திறக்கப்பட்டதால் அது அந்த அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்கிறது. விளைவு டிரைவரை கேவலமாக திட்டிய மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள். அறைவாங்கிய மேலாளர் அம்போதான். 

சென்னையை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் உறவினர் புதுக்கோட்டையில் வசிக்கிறார். அவர் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்று தகவல் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவபரிசோதனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவமனைவாசலில் ஒரு கார் நிற்கிறது . அதில் இருந்த சிலர் செய்தி சேகரிக்க சென்ற நிருபரிடம் பாவம் சார் அந்த பெண்ணு, இந்த ஆளைவிட்டுடாதீங்க என்று துாபம் போடுகிறார். நீங்கள் யார் அந்த பெண்ணுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று விசாரித்த போது முரண்பட்ட தகவல்கள் கிடைக்கிறது. பின்னர் அந்த பெண்ணிடம் நீ எப்ப வேலைக்கு சேர்ந்தாய் என்று விசாரித்த போது சம்பவம் நடந்த அன்று காலை தான் அவர் வேலைக்கு  சேர்ந்தார் என்று தெரியவருகிறது. காலையில் வேலைக்கு சேர்ந்த பெண்ணை மாலையில் கற்பழிக்க மனநிலை சரியில்லாதவன் கூட முயலமாட்டான். அப்படி இருக்கும் போது இவர் எப்படி என்று யோசித்த போதுதான் போலீஸ் உயர் அதிகாரியை பழிவாங்க நடத்தப்பட்ட நாடகம் வெளிப்பட்டது. 

இப்படி பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் பழிவாங்கும் நிலையில் மாறிவிட்ட காரணத்தால் இதற்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது வரை சாதாரண மக்கள் மீது மட்டுமே வந்த இந்த குற்றச்சாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது வந்து விழுந்துள்ளது. ராமாயணகாலத்தில் தன் கற்புத்திறத்தை நிரூபிக்க சீதை தீக்குளித்தால், இன்று ராமன்கள் தான் தீக்குளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. 

தங்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நினைத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வராதது போலவே , போலி புகாரில் சிக்கி உள்ள ஆண்கள் தங்களின் அவமானத்தை கருதி அவர்களிடம் பண பேரம் நடத்தி இன்னும் இன்னும் சுழலில் சிக்கி கொள்கிறார்கள். 

வைரமுத்து ரஞ்சன்கோகய் போன்றவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க பலர் உள்ளனர். ஆனால் அப்படி இல்லாதவர்கள் நிலையை எண்ணி பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

பாலியல் குற்றச்சாட்டு என்பது இருபுறமும் வெட்டும் கத்தி போன்றது. பரபரப்பு காரணமாக பெண்களுக்கு ஆதரவாக திருப்பி திருப்பி செய்தி வெளியிட்டு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகங்கள்,குற்றச்சாட்டின் இன்னொரு புறத்தையும் வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட ஆண் கூட  தன்நிலையை வெளிப்படுத்த வேண்டும். 

சமுதாயத்தில் பல நல்ல விஷயங்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட வன்கொடுமை சட்டம், வரதட்சணை கொடுமை சட்டம்,பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்டம் போன்றவை பழிவாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்ற சூழ்நிலையில் அதனை அமல்படுத்த வரை முறை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற புகார்களை விசாரித்து அது போலி என்று தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வெளிப்படையாக அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட ஆண் தவறு செய்ய வில்லை என்று செய்தி தாளில் விளம்பரமாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதில் பொய்புகார் கூறியவர்  மீது என்ன தண்டனை வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டால் தான் மற்றவர்கள் அதைப் போல நடக்க மாட்டார்கள். ஒரு பெண் இழிவுகளை பார்க்காமல் இந்த குற்றச்சாட்டை கூறுவாளா என்று பத்தாம் பசலி தனமாக யோசிப்பது நிறுத்தப்பட வேண்டும். இப்போது பாசமழை பொழியும் ஜோடிகள் விவாக ரத்து செய்து பிறந்த பின்னர் மீண்டும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவர் மீது எந்த விதமான உறுத்தலும் இல்லாமல் பாசமழை பொழியும் காலம் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது. 

ரஞ்சன் கோகய் விவகாரம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP