சென்னை: நான் தனி ஆளு இல்ல...என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு! #MadrasDay

சென்னைக்கு இது 379வது பிறந்தநாள். பல முக்கிய நகரங்கள் எந்தெந்த ஆண்டுகளில் சென்னையுடன் இணைந்தன தெரியுமா...வாருங்கள் தெரிந்துகொள்ளலாம். 17ம் நூற்றாண்டுக்கு முன்னரே மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்கள் இருந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
 | 

சென்னை: நான் தனி ஆளு இல்ல...என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு! #MadrasDay

சென்னைக்கு இது 379வது பிறந்தநாள். கடந்த 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'மெட்ராஸ் டே' கொண்டாட்டங்கள் இந்த ஆண்டும் முன்னதாகவே ஆரம்பித்து விட்டன. வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய நகரங்கள் எந்தெந்த ஆண்டுகளில் சென்னையுடன் இணைந்தன தெரியுமா...? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம். 

►  17ம் நூற்றாண்டுக்கு முன்னரே மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட்(பரங்கிமலை) ஆகிய இடங்கள் இருந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம். 

►  1646ம் ஆண்டு மெட்ராஸின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 19,000 மட்டுமே. 

►  1668ல் திருவல்லிக்கேணி பகுதி இணைக்கப்பட்ட பிறகு, 1669ல் மக்கள் தொகை 40,000 ஆனது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நகரங்களாக இணைக்கப்பட்டன. 

சென்னை: நான் தனி ஆளு இல்ல...என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு! #MadrasDay

►  1693ம் ஆண்டு எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை நகரங்களும், 

►  1708ம் ஆண்டு திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கொட்டிவாக்கம், சாத்தங்காடு ஆகிய 5 பகுதிகளும் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 

►  1735ல் சிந்தாதிரிபேட்டை என பெயரிடப்பட்டு சென்னையுடன் ஐக்கியமாகியது. 

►  1742ல் வேப்பேரி,  பெரியமேடு, பெரம்பூர், புதுப்பாக்கம்

சென்னை: நான் தனி ஆளு இல்ல...என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு! #MadrasDay

►  1749 வரை மயிலாப்பூர் தனி நகராக இருந்த நிலையில், சென்னையுடன் சேர்க்கப்பட்டது. சாந்தோம் பகுதியும் இந்தாண்டில் தான் சென்னையுடன் இணைந்தது. 

►  1841ல் ஐஸ் ஹவுஸ், 1928ல் தாம்பரம் சானடோரியம், 1952ல் ஐ.சி.எப் என உருவாகி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. 

►  1946ல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, மாம்பலம், சைதாபேட்டை, கோடம்பாக்கம், சாலிகிராமம், அடையார், ஆலந்தூர், அயனாவரம், அமைந்தகரை, மடுவாங்கரை, வேளச்சேரி ஆகிய முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டன. 

►  1977ம் ஆண்டு தரமணி, திருவான்மியூர், விருகம்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம், வில்லிவாக்கம், எருக்கஞ்சேரி, கொளத்தூர், கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்கள் இணைக்கப்பட்டன. 

►  முன்னதாக ஜார்ஜ் டவுனில் இயக்கிக்கொண்டிருந்த சென்னை பேருந்து நிலையம், 2002ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாகி ஆசியாவிலே இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. 

►  சென்னை மாவட்டத்திற்குட்பட்ட, 55 வருவாய் கிராமங்களுடன், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 67 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, தற்போது 122 வருவாய் கிராமங்களுடன், 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

►  காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் பகுதிகளை சென்னை பெருநகரத்துடன் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP