சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பேட்டை தாலுக்கா சாத்தனூர் என்னும் ஊரில் உள்ள அணைதான் சாத்தனூர் அணை. தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் சாத்தனூர் அணை மிக முக்கியமானது. பேட்டரி கார் மூலம் பயணம் செய்யலாம்.
 | 

சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பேட்டை தாலுக்கா சாத்தனூர் என்னும் ஊரில் உள்ள அணைதான் சாத்தனூர் அணை. தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் சாத்தனூர் அணை மிக முக்கியமானது. 

சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

இந்த அணை தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள சென்ன கேசவ மலையில் கட்டப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை கட்டும் திட்டத்தை ஆங்கிலேயர் ஆராய்ந்து அதற்கான திட்டத்தை 1903-ம் ஆண்டில் வகுத்தார்கள். ஆனால் இந்த அணை 1958 ஆம் ஆண்டில் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டு, 1959-ம் ஆண்டு அணை தொடங்கிவைக்கப்பட்டது. 

சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

இயற்கை சூழல் நிறைந்த மரங்கள், மலைகளோடு ஒரு அணை என்றால் அதுதான் சாத்தனூர் அணை. கல்வராயன் மலைக்கும், தென் மலைக்கும் இடையில் செங்கம் கணவாயை ஒட்டி இந்த அணை கட்டப்பட்டுள்ளது. சாத்தனூர் என்னும் ஊருக்கு நான்கு மைல் தூரத்தில், பூண்டி மலைக் கணவாயின் இடையில் ஒரு நீர்த்தேக்கம் உண்டு.  இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலை தொடர்ச்சியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது சாத்தனூர் அணை. அந்த காலத்தில் திருவண்ணாமலையில் மிக சிறந்த சுற்றுலா தலங்கள் என்றால் அது சாத்தனூர் அணைதான். அந்தக் காலத்து சினிமாவில் டூயட் பாட்டு என்றால் சாத்தனூர் அணையைதான் சிறந்த படப்பிடிப்பு தலமாக தேர்ந்தெடுப்பர். இங்கு 400க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. 

சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

119 அடி உயரமும், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும் கொண்ட பிரமாண்டமான அணையாகும்.  700 கோடி கன அடி தண்ணீர் தேக்கி நிற்கவைக்க முடியும். அணையைச் சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் மலைப்பிரதேசங்கள். அணையில் தண்ணீரை சேமிக்க நாலரை மைல் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டு, அணையில் நீரைச் சேமிப்பதற்கான வழிமுறையோடு சாத்தனூர் அணை கட்டப்பட்டுள்ளது.  இங்கிருந்து, பாசனத்துக்கான தண்ணீர் கால்வாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது. 22 மைல் தூரத்துக்கு ஒரு கால்வாய் பிரிந்துசென்று செங்கம், திருவண்ணாமலை பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் விளை நிலங்கள் பயனடைகின்றன. 

சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

இதைப்போலவே, அணையிலிருந்து திருக்கோயிலூர் அணைக்கும் நீர் பங்கிட்டு அனுப்பப்படுகிறது. இதனால் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெருகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரங்களில் ஒன்று அம்மணி அம்மாள் கோபுரம். சாத்தனூர் அணை உருவாகுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார் அம்மணி அம்மாள். தென்பெண்ணை நீரால் வாழும் சாத்தனூர் அருகே அமையபெற்றுள்ளது அம்மணி அம்மா. இவர் திருவண்ணாமலையில் ஒரு கோபுரத்தை கட்டினார். அந்த கோபுரத்திற்க்கு அம்மணி அம்மாள் என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும்மல்லாமல் இவங்க பேரில் ஒரு சித்தர் பீடமும் திருவண்ணாமலையில் உள்ளது. அம்மணி அம்மாள் கோபுரத்தை இன்றும் பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

தற்போது அணை இருக்கும் இடத்திற்கு முன்பு அடந்த காடு போல் இருக்கிறதாம்.  இங்கு வசித்த புலி, கரடி, சிறுத்தை மாதிரியான மிருகங்கள் கோடைக்காலத்தில் தண்ணீருக்கு சிரமபடாத வகையில் இங்கு குளம் ஒன்றை வெட்டி, அவைகளின் தாகத்தை தணித்திருக்கிறார்கள். அங்கு அம்மணி அம்மாள் வெட்டிய குளமும், தியானம் செய்த பாறையும் இன்றும் உள்ளது. 

சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

தென் பெண்ணை ஆறு பாயும் பகுதிகளில் நெல் மிகுந்து விளையும் வளமிக்க பூமியாக இருக்கும். அதனால்  தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தை வகிக்கிறது.  தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள சாத்தனூர் அணையும், அது உருவாக காரணமான அம்மணி அம்மாவையும் மக்கள் போற்றி வருகின்றனர்.  அணையின் மேல் மட்டம் வரை நம்ம வாகனங்களில் செல்லலாம். போகும் வழியின் இரு புறமும் சாப்பாடு, மீன் வருவல், ஐஸ், பாப்கார்ன், சிப்ஸ், பழம்முன்னு எல்லாமே கிடைக்குது. கடலோ என வியக்கும்படி பரந்து விரிந்து உள்ளது சாத்தனூர் அணையில், 50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பூங்காவும் உள்ளது. 

சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

அணைகளில் குளிக்க அனுமதி இல்லை என்றாலும் அருகிலேயே நீச்சல் குளம். பலவகை முதலைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய முதலைப் பண்ணையும் இங்கு அமைந்துள்ளது. சுமார் 300 முதலைகள் பண்ணையில் உள்ளன. அணையை சுற்றிப் பார்க்கவும், முதலைப்பண்ணைக்கும் கட்டணம் உண்டு. இங்கு சுடச்சுட வறுத்து விற்கப்படும் மீனுக்கு ஏக கிராக்கி. 

சாத்தனூர் அணையும், முதலைப்பண்ணையும்...! 

சைவ, அசைவ உணவகங்கள், தங்குவதற்கு குறைவான கட்டணத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதி உள்ளது. அணையின் மேலிருந்து பார்க்கும் போது பசுமையாக இருக்கும் அழகை ரசிக்க ஏராளமாண சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  இங்கு ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய முதலை பண்ணை இங்கு உண்டு. சுற்றுலா பயணிகள் பேட்டரி கார் மூலம் பயணம் செய்து அணையை சுற்றிப் பார்க்கலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP