Logo

குண்டத்தில்  பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்கும் வினோத விழா !

இந்த பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா சத்தியமங்கலம் காட்டில் நடக்கும் போது காட்டுபகுதியில் மிருகங்கள் எதுவும் பக்தர்களின் கண்களில் தென்படாது.
 | 

குண்டத்தில்  பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்கும் வினோத விழா !

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் செல்லும் வழியில் பண்ணாரி என்னும் ஊரில் அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். தற்போது, பன்னாரி மாரியம்மன் இருக்கும் இடம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தன நாயக்கன் காடு என்று அழைக்கப்பட்டது.

அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். பண்ணாரி காட்டில் மாரியம்மன் என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள். காட்டுக்குள்ளேயே இவளுக்கு விழா நடக்கிறது. நவராத்திரியையொட்டி அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். அம்பாள் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்பாளை வணங்குகின்றனர். இங்கு அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லாமல், சைவ படையல் மட்டுமே செய்யப்படுகிறது. கால்நடை வழிபாடுகள் குறித்து நீண்ட வரலாறுகள் சொல்லப்படுகிறது.

பண்ணாரியம்மன் பகுதில் சிறுவர்கள் வழக்கமாக பசுக்களை மேயவிட்டு வந்தார்கள். இதில் ஒரு குறிப்பிட்ட பசு மட்டும் கன்றையும் நெருங்கவிடவில்லை, பாலும் கறக்க அனுமதிக்கவில்லை. மேய்ப்பவன் அந்த பசுவை தொடர்ந்து கண்காணித்து வந்தான். அந்த பசு ஒரு குறிப்பிட்ட வேங்கை மரத்தின் அடியில் போய் நின்ற உடன் தானகவே மடுவில் இருந்து பால் சுரக்க ஆரம்பித்தது. இதை மாடு மேய்க்கும் சிறுவன் தெரிவித்த உடன் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்துக்கு வந்து வேங்கை மரத்தின் அடி பாகத்தை தோண்டி பார்த்தான். அப்போது அங்கு ஒரு சுயம்பு சிவ லிங்கம் இருந்தது. அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு இறை அருள் வந்து அருள் வாக்கு சொல்லி இருக்கிறார். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வணிகர்கள் சுமைகளை மாடுகள் மேல் சுமந்து மைசூருக்கு இந்த பாதை வழியாக தான் சென்று வந்துள்ளார்கள். அவ்வாறு செல்லும் வணிகர்களின் காவல் தெய்வமாக விலங்கியதாகவும், இங்கு ஒரு ஆலயம் அமைத்து பன்னாரி அம்மன் என்ற பெயரில் வழிபடவும் என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. 

அன்று முதல் பன்னாரி அம்மனை அந்த பகுதி மக்கள் அங்கு வழிபட்டு வந்திருக்கிறார்கள். இத்தலத்தில்  திருநீறுக்கு பதிலாக காட்டிலிருந்து வெட்டி எடுக்கப் படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால் கால் நடைகளுக்கு நோய் வராது என்பது மக்களின் நம்பிக்கை.  இந்த கோவிலில் இருக்கும் அம்மன் தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது.

குண்டத்தில்  பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்கும் வினோத விழா !

காட்டு இலாகா அதிகாரியாக பணியாற்றிய மற்றொரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோயில் சுவற்றில் சுட்டதால் பிறகு   அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும் கண்வியாதி உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக மக்களால் நம்பப்படுகிறது. பூச்சாற்று சிறப்புபங்குனி மாதம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூச்சாற்று நடக்கிறது.  அப்போது கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அக்கினிக் கரகம் ஏந்தியும், வேல், சூலம் தாங்கியும் மேளதாளங்கள் முழங்க அம்மனை வழிபடுகின்றனர்.

குண்டம் திருவிழா : 

இங்கு நடக்கும் குண்டம் திருவிழாவில் குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்கும் வினோத விழா இங்கு நடக்கிறது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்த திருவிழா நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்கள் குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு கரும்பு வெட்டுதல் என்று பெயர்.  இந்த திருவிழா பங்குனி மாதத்தில் நடக்கிறது. இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர். இங்கு நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. 

இந்த  பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா  சத்தியமங்கலம் காட்டில் நடக்கும் போது  காட்டுபகுதியில் மிருகங்கள் எதுவும் பக்தர்களின் கண்களில் தென்படாது. இங்கு ஆதரவற்ற சிறுவர்களை பராமரிப்பதற்கான கருணை இல்லம் ஒன்றும் கோயில் சார்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP