தனியார் நிறுவனங்களில் ஜாதி ஒதுக்கீடு முறையா? நியாயமா? அவசியமா?

நாடார் கடைகளில் பெரும்பாலும் நாடார்களை மட்டுமே வேலைக்கு வைப்பார்கள். செட்டியார் வட்டிக்கடைகளில் செட்டியார்களுக்கே பொறுப்பான பதவி. ஆசாரி தொழில் செய்பவர்களிடம் போய் வேறு நபர்கள் தொழில் கற்றுக் கொள்ள முடியாது.
 | 

தனியார் நிறுவனங்களில் ஜாதி ஒதுக்கீடு முறையா? நியாயமா? அவசியமா?

அதெப்படி எனக்கு இந்த ஜாதியிலிருந்து தான் வேலைக்கு ஆள் வேணும்னு கேட்கலாம் ? தப்பாச்சே. மீண்டும் கற்காலத்திற்குப் போயிட்டிருக்கோமா? போராளிகளுக்கு வாயிலேயே வந்து தானே விழுந்த அவல். 

தனியார் நிறுவனங்களில் ஜாதி ஒதுக்கீடு முறையா? நியாயமா? அவசியமா?

அந்த நிறுவனம் அப்படி என்ன கேட்டிருச்சு? வேலைக்கு ஆட்கள் வேணும். பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இதில் என்ன தப்பு? அவன் கம்பெனியில் அவன் யாரை வேலைக்கு வைக்கணும்னு அவன் தானே முடிவு பண்ணுவான்? அதில் தலையிட நமக்கு என்ன உரிமை இருக்கு? இதென்ன தமிழ் நாட்டில் நடக்காத விஷயமா? 

நாடார் கடைகளில் பெரும்பாலும் நாடார்களை மட்டுமே வேலைக்கு வைப்பார்கள். செட்டியார் வட்டிக்கடைகளில் செட்டியார்களுக்கே பொறுப்பான பதவி. ஆசாரி தொழில் செய்பவர்களிடம் போய் வேறு நபர்கள் தொழில் கற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம்கள் கடைகளில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்கள் கடைகளில் கிறிஸ்தவர்களுக்குமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஜாதி, மதம் பார்த்து வேலை கொடுப்பது சென்னை போன்ற பெருநகரங்களில் தான் இல்லை. காரணம், வேலைக்கு ஆள் பற்றாமல் போனதால் தான். ஒரு நிறுவனத்தின் மேனேஜர் வேலைக்கு இறுதியாக இருவர் தேர்வாகியிருக்கிறார். இருவரில் ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்கணும் என்றால், தேர்ந்தெடுக்கும் இடத்திலிருப்பவரின் ஜாதியைச் சேர்ந்தவர் இருந்தால் அவருக்கு தான் முன்னுரிமை. எல்லா நிறுவனங்களிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பரபரப்புக்குக் காரணம், அந்த நிறுவனம் வெளிப்படையா விளம்பரம் பண்ணிடுச்சு அவ்வளவு தான். 

தனியார் நிறுவனங்களில் ஜாதி ஒதுக்கீடு முறையா? நியாயமா? அவசியமா?

அரசாங்கம் இன்ன ஜாதி ஆள் தான் வேலைக்கு வேண்டும் என்று  அழைப்பு விடுக்கும் போது தனியார் நிறுவனம் அப்படி விளம்பரம் செய்யக் கூடாதா? 

“என் தட்டில் என்ன இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்” என்று கமல்ஹாசன் புரட்சிப் பேசிய போது கைத்தட்டிய கும்பல் தான் இப்ப முஷ்டியைத் தூக்குகிறது. சில நாட்களுக்கு முன், அவன் காசு போட்டு அவன் சிந்தனையை வெளிப்படுத்த சினிமா எடுக்கிறான். அதற்கு சென்ஸார் போர்டு எதற்கு? விருப்பம் இருந்தால் காசு கொடுத்துப் பாரு. இல்லாட்டி போ. எதற்கு என் உரிமையில் தலையிடுகிறாய்? “ என்று சமூகவலைதளங்களில் தொடை தட்டிய அதே கூட்டம் தான் இப்ப அவனவன் தொழிலில் எப்படி ஆட்களைத் தேர்வு செய்யணும் என்று பொங்குகிறது. 

தனியார் நிறுவனங்களில் ஜாதி ஒதுக்கீடு முறையா? நியாயமா? அவசியமா?

ஜாதிரீதியாக ஏற்றத்தாழ்வினை ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு, நிலைப்பாட்டிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மனிதனுக்குள் ஏற்றத்தாழ்வு பார்ப்பது மனித குல அவமானம் தான். ஆனால், தனக்குத் தோதான ஆளைத் தன் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்துவதில் என்ன சமூகச் சீர்கேடு வந்துடுடப் போகுது? இப்படி ஜாதியரீதியில் வெளிப்படையாக அழைப்பு விட்டதற்குக் காரணம் என்ன தெரியுமா? 

சைவம் மட்டும் சாப்பிடுபவன் அருகில் போய் மாட்டுக்கறியிலிருந்து நாய்க்கறி வரை சாப்பிட்டுப் புரட்சி செய்தவர்கள் தான். மனிதன் உழைப்பதே நிம்மதியாக அமர்ந்து உண்பதற்குத் தான். அங்கேயும் போய் அவனுக்கு ஒவ்வாததை வைத்துச் சாப்பிட்டால் யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்? பார்த்தான், அசைவம் சாப்பிடாதவன் தான் வேலைக்கு வேண்டும். அடாவடி பண்ணாதவன் தான் வேலைக்கு வேண்டும்.  இறை பக்தி இருப்பவன் தான் வேலைக்கு வேண்டும் என்று தேடினான், கூப்பிடுடா அந்த பிராமணர்களைனு கூப்பிட்டுட்டான். 

தனியார் நிறுவனங்களில் ஜாதி ஒதுக்கீடு முறையா? நியாயமா? அவசியமா?

இந்த சமூக மரியாதை எப்படி வந்தது? சமூகத்தின் உயர்ந்தபட்ச ஒழுக்கம் என்று இந்த சமுதாயம் நினைக்கும்  விசயத்தை செய்யும் ஒரு ஜாதியாக பிராமணர்கள் பார்க்கப்படுகிறார்கள். அரை நூற்றாண்டாக பார்ப்பண, பார்ப்பனீயம் என்று திட்டித் தீர்த்துக் கொண்டேயிருந்தாலும் அவர்களுக்கான மரியாதையை அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் வாழ்ந்து காட்டி நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் என்ன செய்கிறோம்? அந்தச் சாதிக்காரன் மகளைக் கட்டு. இந்தச் சாதிக்காரன் கருவில் விதை. பாம்பை விட்டுட்டு அவனை அடி என்று ஜாதி துவேசம் மட்டும் காட்டிக் கொண்டிருக்கிறோம்.  இந்த அரை நூற்றாண்டில், இப்படி எதிர்மறை சிந்தனைகளை விதைக்காமல் அவரவர் ஜாதியிலிருக்கும் அடித்தட்டு மக்களை அந்த ஜாதியைச் சொல்லி அரசியல் செய்பவர்கள் கல்வி பொருளாதாரத்தில் மேம்படுத்தியிருந்தால் இன்றைக்கு நாமும் மதிக்கத் தக்க சாதியாக இருந்திருப்போம்.

 தலைவனை / தலைமையை சரியாகத் தேர்ந்தெடுங்கள். எல்லாம் சரியாயிடும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP