பிரம்பு - அடிக்க மட்டுமல்ல; அரவணைக்கவும் தான்...

பிரம்பு என்றால் நினைவுக்கு வருவது நம் ஆசிரியர்களும், பெற்றோரும் நம்மை பிண்ணி எடுப்பது தான். ஆனால் பிரம்பினால் நாம் எத்தனை நன்மைகளை பெற்றிருக்கிறோம் தெரியுமா? அதிலும் சீர்காழியில் இருந்த வரும் பிரம்புகளுக்க ஒரு தனி மவுசு !
 | 

பிரம்பு - அடிக்க மட்டுமல்ல; அரவணைக்கவும் தான்...

பிரம்பு என்றால் நினைவுக்கு வருவது நம் ஆசிரியர்களும், பெற்றோரும் நம்மை பிண்ணி எடுப்பது தான். ஆனால் பிரம்பினால் நாம் எத்தனை நன்மைகளை பெற்றிருக்கிறோம் தெரியுமா?

வீடு முழுக்க என்ன தான் அலங்காரப் பொருட்களை வாங்கி அடுக்கினாலும், ஒரு பிரம்பு சோஃபா இருந்தாலேப் போதும், உங்கள் வீடு மாடர்னாக மாறிவிடும். இன்றைக்கு பிரம்புக்கூடை எல்லா நகரங்களிலும் விற்பனை ஆகிறது என்றாலும், அதை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்திலேயே பெஸ்ட் இடம், சீர்காழிதான்.

பிரம்பு - அடிக்க மட்டுமல்ல; அரவணைக்கவும் தான்...

சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராம மக்கள் பிரம்பு பொருட்கள் செய்வதையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். இந்த ஊர் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியில் சீர்காழிக்கு முன்பே கொள்ளிடம் கரையில் இருக்கிறது இந்த ஊர். இங்கு வார்னிஷ் அடிக்கப்பட்டு விதவிதமான பிரம்பு பொருட்களை கடைகளில் வரிசைக்கட்டி வைத்திருக்கின்றனர்.

முதலில் அந்த ஊரையும், எப்படி பிரம்பு செய்கிறார்கள் என்று பார்ப்பதற்கு முன் இந்த பிரம்பை பற்றி சிறிது தெரிந்து கொள்வோமே !

பிரம்பு - அடிக்க மட்டுமல்ல; அரவணைக்கவும் தான்...

பிரம்பு உலகெங்கும் வளரும் போவேசியே குடும்பத்தைச் சேர்ந்த நெகிழ்ச்சித்தன்மையான வன்தண்டைக் கொண்ட பல்லாண்டுத் தாவரமாகும். இது இரண்டு பேரினங்களைக் கொண்டது. ஒன்று பேரினம் அருண்டோ மற்றொன்று பேரினம் அருண்டினாரியா . போவேசியே செடி வகைகளில்  ஒன்றுதான் பிரம்பு . பிரம்பு ஒரு பெரிய தாவர வகை காவிரி கரையில் ஆள் உயரத்திற்கு வளர்ந்து இருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

பிரம்பு - அடிக்க மட்டுமல்ல; அரவணைக்கவும் தான்...

பல வடிவங்களில் வளரும் பிரம்புகளை கோரை என்றும் பிரம்பு என்றும் நாம் சொல்கின்றோம்.  கொள்ளிடக்கரையில் இருப்பதால் இந்த பகுதியில் விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து வீட்டிலேயே தொழிலைத் தொடங்கினர். ஆனால்  இன்று காவிரி பொய்த்து போனதால் பிரம்புகள் பீகாரில் இருந்தும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும்  தைக்கால் கிராமத்திற்கு வருகிறது. இவை மிகவும் தடினமாக இருந்தால் வளையாது.  பிரம்புகளில் பாதி கழிவில் சென்று விடும் அளவிற்க்கு  முத்தல், உடைந்தது, பூச்சி அரித்தது ,போன்று எல்லம் இருக்கும். ஆனாலும் இதை குப்பையில் போடாமல் அதையும் ஒரு கலை வடிவமாக்குகின்றனர்.  இந்த பிரம்புகள் நீள நீளமாக சுமார் ஆறு அடி உயரம் வரை இருக்கும், பார்க்கும்போது குச்சிதானே என்று தோன்றினாலும் அது ஒரு கலைஞனின் கலைவண்ணத்தில் இந்த தைக்கால் கிராமத்தில் பிரம்பை பல அலங்காரப்பொருட்களாக பயன்படுத்துகின்றனர்.  பஞ்சு மெத்தைகள் சுகமாக இருந்தாலும் கை வேலைபாடுகொண்ட பிரம்புக்கு நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.  பிரம்பு பொருட்களின் குளுமை, உடம்பு சூடு தணியும் என்பதாலும் வருடம் முழுவதும் நல்ல விற்பனைதான். வேலூர், சென்னை, திருச்சி போன்ற வெளியூர்களில் பிரம்பு பொருட்களை விற்பனை செய்வதற்காக இங்கிருந்து தான் வாங்கிச் செல்கின்றனர் .

பிரம்பு - அடிக்க மட்டுமல்ல; அரவணைக்கவும் தான்...

சீர்காழியில் விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து  அதிக வளைவு கொடுக்காது என்பதால் எடை தாங்கும் அளவிற்க்கு ஜாடி, கூடை, முறம், அர்ச்சனைத் தட்டு, அலங்கார கூடைகள் செய்யப்படுகிறது.  அதனால் கடினமான, குவாலிட்டியான பிரம்புகளை பீகாரில் இருந்து இறக்குமதி செய்து பொருட்களை செய்கிறார்கள். பிரம்புகளை  வைத்து பல பொருட்களை செய்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். கலை நுணுக்கமான வேலை என்பதால் ஒரு நாளில் எட்டு பேர் சேர்ந்து ஒரு சோபாதான் செய்ய முடியுமாம். கடினமான  பிரம்புகளால் பெரிய பிரம்பு சோஃபா, நாற்காலி, டீபாய்,  போன்றவற்றை செய்கிறார்கள்.  சில சமயங்களில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுள்ளா பயணிகளுக்கு பிடித்த பொருட்களை செய்து குடுக்க வேண்டும் என்று சொன்னாலும் அதையும் நன்கு செய்தும் கொடுக்கின்றனர். 

பிரம்பு - அடிக்க மட்டுமல்ல; அரவணைக்கவும் தான்...

பிரம்பு பொருள் எப்படி உருவாகிறது என்று பார்க்கும் போது அங்கு ஒரு சின்ன விளக்கு, நிறைய வகையான ஆணிகள், பிரம்பை அறுக்கும் பொருட்கள், சுத்தியும் பயன்படுத்துகின்றனர். ஒரு பிரம்பை எடுத்து தீயில் காட்ட அது சற்று நெகிழ்ந்து கொடுக்கிறது, அதை சிறிது வளைத்து கொஞ்ச நேரம் பிடிக்க பிரம்பு அந்த வடிவத்தில் அப்படியே இருக்கிறது, பின்னர் மீண்டும் தீயில் காட்டி வளைக்கின்றனர். இப்படியே தேவைக்கு ஏற்ப வளைத்து, நெளித்து ஆணியை கொண்டு அடித்து, கயிறை கொண்டு கற்றி ஒரு சேர உருவாக்குகின்றனர். வெளியூரில்  இருந்து வரும்   பிரம்புவின் விலை மற்றும் தரத்தை விட,  அதிக தரமுள்ள விலை குறைவான பிரம்பு பொருட்களை சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமத்திலேயே  வாங்கிக் கொள்ளலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP