அட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா?

பாவம் தலைவனைத் தேடி அலையும் பட்டியலின மக்களுக்கு போரார்களத்தில் பா ரஞ்சித் போன்ற அட்டைக் கத்திகள் தான் கிடைக்கின்றன. அவை அழகாக இருக்கலாம். ஆனால் எதற்கும் உதவாது என்பதை பட்டியலின மக்கள் புரிந்து கொண்டால் மட்டுமே பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
 | 

அட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா?

எழுத்தாளர் கி.ராஜநாராயணம் கிராமிய மணம் கமழ கரிசல் காட்டு கதைகள் எழுதியவர். அவரை வெவ்வேறு ஜாதி சங்கங்கள் தொடர்பு கொண்டு எங்கள் ஜாதி பற்றிய கதை இருக்கிறதா? நாங்கள் எங்கள் சங்கத்தின் மலரில் வெளியிட வேண்டும் என்று கேட்டார்களாம். 

அதற்கு அவர், இருக்கிறது; ஆனால் எந்த ஜாதியை பற்றியும் நல்லவிதமாக இல்லை. ஒரு ஜாதியை மற்ற ஜாதிக்காரன் திட்டித்தான் கதை இருக்கிறது என்றாராம். இவ்வாறு அவரின் நுால் ஒன்றின் முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தார்.

வாழ்மொழியாக இருந்த இந்த கதைகளே இப்படி என்றால், சுமார் இயேசு பிறந்து 200 ஆண்டுகள் கழித்து ( 2ம் நுாற்றாண்டை இப்படிக் கூட  சொல்லாம்) நடந்தவற்றை அப்படியே அச்சு பிசகாமல் எழுதி இருப்பார்கள் என்பதை எந்த மடையனும் நம்ப மாட்டான். வரலாற்றை ஆய்வு செய்பவர் எப்படிப்பட்டவரோ அதற்கு ஏற்பதான் அவர் எழுவதும் இருக்கும்.

புதுக்கோட்டையில் உள்ள பிரகாதாம்பாள் கோயிலில் உள்ள சிலைகள் அனைத்தும் சிதிலமடைந்து இருந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடந்த போது அவற்றை தற்காலிகமாக சரி செய்து விட்டார்கள். இதற்கு மாலிகாபூர் படைஎடுப்பு காரணம் என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர் புதுக்கோட்டை பக்கமே வரவில்லை  என்று சாதிக்கும் வரலாற்று ஆசிரியர்களும் உள்ளனர். இருவரும் அனைவரும் ஏற்கும் வகையில் மாலிகாபூர் படை சென்ற பாதையை குறிப்பிட்டு காட்டுவார்கள்.

இந்தியாவின் வரலாற்றை இந்தியர்கள் எழுதியதை விட கிறிஸ்தவர்கள் எழுதியது தான் அதிகம். அவர்கள் நம்மை அடக்கி ஆண்டவர்கள். அப்படி இருக்கும் போது நம்மை பாராட்டியா எழுதியிருப்பான்.  இன்றைக்கு கூட நமக்கு அட்லியும், கார்னிங்கும் பிரபுக்கள் தான். அடக்கி ஆண்ட அடிமைப்படுத்திய அரசர்கள் பிரபுகள் என்று எழுதியிருக்கும் வரலாறு தான் நமக்கு கற்பிக்கப்படுகிறது. இவர்கள் எழுதிய வரலாற்றை நம்பி நாம் அந்தக்காலத்தை புரிந்து கொள்வது மிகவும் தவறான வழக்கமாக தான் இருக்கும்.

தொல்பொருள் சான்றுகள், கல்வெட்டுக்கள், வாய்மொழி இலக்கியம் போன்ற அனைத்தையும் ஆய்வு செய்து தான் வரலாறு எழுப்பட வேண்டும். அந்த வரலாறு இந்த காலத்திற்கு உதவி செய்யும் என்றால் அதை எடுத்துக் கூறி, அந்த வழி நடக்க வற்புறுத்தலாம். ஆனால் கி.ரா., சொன்னது போல தனக்கு வேண்டியபட்ட விதத்தில் வரலாற்றை எழுதிக்கொண்டு அதை விவரித்து அதன் மூலம் தற்காலத்தில் மோதல்களை துாண்டுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்லது.

இயக்குனர் பா ரஞ்சித், ராஜராஜ சோழன் பற்றி பேசியது தேவையற்றது. நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் டிஎஸ் மணி தொடர்பான விழாவில் அவர் எழுதிய நுால் அடிப்படையில் ரஞ்சித் பேசியது தான் சர்சையாகி இருக்கிறது. இந்த அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றை அவர்கள் இழப்பை வெளிப்படுத்தும் வகையில் சர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

அதற்கு வழக்கு தொடுத்த உடன் முன்ஜாமீன் கேட்டதன் மூலம், அவர் கருத்தில் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இப்படிப்படவர் கருத்தைக் கேட்டு யாரேனும் களம் இறங்கி போராடி இருந்தாலோ, பொது சொத்துக்கு சேதம் விளைவித்து சிறை சென்று இருந்தாலோ அவர்கள் கதி அவ்வளவு தான். 

எந்த விதத்திலும் தன் தொண்டன் பாதிக்கப்பட கூடாது என்று நினைப்பது ஒரு தலைவனுக்கு அழகு. அதற்கு பதிலாக வாய்க்கு வந்தபடி பேசி, அவர்களை நடுத்தெருவில் நிறுத்துபவன் கட்டாயம் தலைவனாக மாட்டான். ஆனால் பாவம் தலைவனைத் தேடி அலையும் பட்டியலின மக்களுக்கு போரார்களத்தில் பா ரஞ்சித் போன்ற அட்டைக் கத்திகள் தான் கிடைக்கின்றன. அவை அழகாக இருக்கலாம். ஆனால் எதற்கும் உதவாது என்பதை பட்டியலின மக்கள் புரிந்து கொண்டால் மட்டுமே பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP