கூடா நட்பு கேடாய் முடியும்; தெய்வம் நின்று கொல்லும்!

அதிலும் 2014ம் ஆண்டு தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணமான, 2 ஜி வழக்கில் தொடர்பு கொண்டவர் பற்றிய வழக்கு இது . தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் போது, இந்த வழக்கு விசாரணை தீவிரமாகும். மாநிலம் முழுவதும் இது விவாதிக்கபடும். இது கட்டாயம் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அப்போது தெய்வம் நின்று கொல்லும் என்பதை அக்கட்சியினர் உணர்வார்கள்.
 | 

கூடா நட்பு கேடாய் முடியும்; தெய்வம் நின்று கொல்லும்!

பெளர்ணமி அன்று வானில் முழுநிலவு பிரகாசிக்கிறது. மொட்டை மாடியில் கணவன், மனைவி அதை ரசித்துக் கொண்டு இருக்கின்றனர். இருவர் இடையே பேச்சுவார்த்தை தொடங்கி, வாக்குவாதமாக மாறுகிறது. 

கணவன், ‛இப்போது யாரும் இல்லை உன்னை கொல்வேன்’ என்கிறார். ‛யாரும் சாட்சிக்கு இல்லாவிட்டால் என்ன, அந்த நிலா இருக்கிறது’ என்று கூறுகிறார். ஆவேசம் அடைந்த கணவர், ‛நிலா வந்து சாட்சி சொல்லட்டும் பார்க்கலாம்’ என மனைவியை கொலை செய்கிறான். 

சாட்சிகள் இல்லாததால், மனைவி சாதாரணமாக இறந்துவிட்டதாக சடங்குகள் நடந்து முடிகிறது.காலப் போக்கில் கணவர், 2வது திருமணம் செய்கிறார். மீண்டும் கணவன்,மனைவி மற்றொரு பெளர்ணமியில் நிலாவை ரசிக்கின்றனர். கணவன் படுத்துக் கொண்டு நிலவை ரசிக்கும் போது, அவனுக்கு சிரிப்பு வருகிறது. 

விடாமல் சிரிக்கிறான்; புரியாத மனைவி காரணம் கேட்கிறாள். உஷாரான கணவர், ஏதோதோ காரணம் கூறுகிறார். அதை ஏற்காத மனைவி, உண்மை காரணத்தை கூற வற்புறுத்துகிறார். வேறு வழியில்லாத கணவன், முதல் மனைவியை கொன்றதும், அப்போது அவள் நிலவை சாட்சிக்கு அழைத்ததையும் கூறி, அந்த நினைவில் சிரித்தேன் என்கிறான்.

அதிர்ச்சியடைந்த, 2வது மனைவி, அக்கா (முதல் மனைவி) ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டதாக தானே நினைத்தேன். நீயா கொலை செய்தாய், உன்னை சும்மாவிடமாட்டேன் என்று கணவர் மீது வழக்கு தொடுத்து, அவனுக்கு தண்டனை வாங்கி தருகிறாள்.

இதே போன்ற சமபவம் சமீபத்தில் நடந்தது. தேர்தல் நேரத்தில் அது தி.மு.க.,விற்கு குறிப்பாக, நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

கூடா நட்பு கேடாய் முடியும்; தெய்வம் நின்று கொல்லும்!

கரூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில், 1980களில் சர்ட், பேன்ட், புடவைகளை சைக்கிளில் வீடு வீடாக சென்று விற்பனை செய்தார் ஒரு இளைஞர்.  பின்னர் அந்த இளைஞர் சீட்டு பிடிக்க தொடங்கினார், அதுவும் சிறப்பாக இல்லை. 
இதனால், வீடு நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் துறையில் காலடி வைத்தார். 

பெரம்பலுார் மாவட்டம் பிரிக்கப்பட்டதும், ரியல் எஸ்டேட் துறை கொடி கட்டி பறந்தது. அதில் இந்த வாலிபரும் மேலே மேலே பறந்தார். 1990களில் தி.மு.க.,வை சேர்ந்த ஆ.ராஜாவின் நடப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, சாதாரண இளைஞர், கீரின் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனர் சாதிக் பாஷாவாக உருவாகிறார். 

இதில், அவர் மனைவி ரெஹானா பானு மற்றும் ராஜாவின் நெருங்கிய உறவினர்கள் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர். 
சில ஆண்டுகள் கழித்ததும், 2 ஜி வழக்கு விசாரணை  உச்சத்தில் இருக்கிறது. சிபிஐ சாதிக்பாஷாவின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் ரெய்டு நடத்தியது. சிபிஐ பிடி இருகும் என்ற நிலையில், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி சாதிக் பாஷா தற்கொலை செய்துகொள்கிறார். 

2 ஜி வழக்கு, அரசியல் நெருக்கடி, சிபிஐ விசாரணை தந்த அச்சம் என்று பல காரணங்கள் பொது வெளியில் கூறப்பட்டாலும், சாதிக்பாஷாவின் மனைவி உட்பட அனைவரும், இது தற்கொலை என்றே அறிவித்தனர். 

யாரும் இந்த மரணம் குறித்த சந்தேகம் எழுப்பவில்லை. இதன் காரணமாக இந்த வழக்கு இன்று வரை உண்மை தெரியாமலே உறங்க வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 16ம் தேதி சாதிக்பாஷாவின் 8ம் ஆண்டு நினைவு நாள். அவர் குடும்பத்தினர் அனைத்து நாளிதழ்களிலும் அஞ்சலி விளம்பரம் கொடுக்கிறார்கள். அதில், ‛கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கூட்டணியை பற்றி கூறிய வாசகமும் இடம் பெற்றது. 

இது வேறு சில எண்ணங்களையும், வாழ வேண்டிய வயதில் மரித்துப் போனவர் பற்றி வாழ்பவர்கள் மனதில் உள்ள சோகங்களையும் வெளிப்படுத்தியது. 
இதை அப்படியே விட்டு இருந்தால் எந்த பிரச்னையும் வராது. ஆனால் விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியது. கடந்த 19ம் தேதி இரவு, ரெஹானா பானு குடுத்தினருடன் காரில் சென்ற போது, மர்ம நபர்கள் அவரது காரை கத்தி, சுத்தி , கற்களைக் கொண்டு தாக்கினர். 

இதில் கார் சேதம் அடைந்தது. காரை ஓட்டிய ரெஹானாவின் தம்பி ஆஷிக் காரை நிறுத்தாமல் ஓட்டியதால் அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து கடந்த 20ம் தேதி ரெஹானாபானு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அது தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. 


 அதிலும் 2014ம் ஆண்டு தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணமான, 2 ஜி வழக்கில் தொடர்பு கொண்டவர் பற்றிய வழக்கு இது . தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் போது, இந்த வழக்கு விசாரணை தீவிரமாகும். மாநிலம் முழுவதும் இது விவாதிக்கபடும். இது கட்டாயம் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அப்போது தெய்வம் நின்று கொல்லும் என்பதை  அக்கட்சியினர் உணர்வார்கள். 

newstm.in


இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே!
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP