வீரத் தமிழனின் காங்கேயம் காளைகள்...!

நம் ஊரில் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி, மறைபவை துள்ளி ஓடும் காளைகள்தான். அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, ஜல்லிக் கட்டுபோட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் நாம் பார்க்கலாம்.
 | 

வீரத் தமிழனின் காங்கேயம் காளைகள்...!

நம் ஊரில் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி, மறைபவை துள்ளி ஓடும் காளைகள்தான். அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள். 
உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது. உலகின் தொன்மை விளையாட்டான ஏறு தழுவதல் என்று சொல்லக் கூடிய ஜல்லிக் கட்டுபோட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் நாம் பார்க்கலாம்.
வீரத் தமிழனின் காங்கேயம் காளைகள்...!
காங்கேயம் காளை என்பது திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயப் பணிக்காக வளர்க்கப்படும் ஒரு வகை நாட்டு மாட்டு இனம் ஆகும். தமிழர்களின் வீரத்தின் அடையாள சின்னமாக காங்கேயம் காளைகள் போற்றப்படுகின்றன. காங்கேயம் காளைகள் சாதாரணமாக 4 முதல் 5 டன் எடை உள்ள வண்டிப் பாரத்தை இழுக்கும் திறனையும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வாழக்கூடிய ஆற்றலையும் கொண்டுள்ளன. கடுமையான வெயில் மற்றும் பஞ்சக் காலங்களிலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதை உண்டு உயிர் வாழக்கூடியவை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட காங்கேயம் மாடுகள், அந்தந்த பகுதிக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டதால் தனித்தனி மாட்டினங்களாகப் பரிணமித்துள்ளன.
வீரத் தமிழனின் காங்கேயம் காளைகள்...!
கலப்பு செய்யப்பட்ட காங்கேயம் காளைகள் முழுக்க வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த மாடுகள் விவசாயத்தில் ஈடுபடாவிட்டாலும், மாட்டுப் பொங்கலன்று அவை கௌரவிக்கப்படுகின்றன. காங்கேயம் மாடுகள் பிறக்கும் போது சிவப்பு நிறத்தில் இருக்கின்றன, ஆறு மாத காலத்திற்குப் பிறகு சாம்பல் நிறத்திலும் திமில், முன்பகுதி, பின்கால் பகுதிகள் அடர்ந்த நிறத்தில் மாற்றம் பெறுகின்றன.  காங்கேயம் காளைகள் கன்றாக இருக்கும்போது சிவப்பு நிறத்திலிருக்கும். வளர வளர, நிறம் மாறி முழுக்க வெள்ளை நிறமாகிவிடும். வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே கருப்பு நிறத்தில் தென்படும் காளைகள், கலப்பு செய்யப்படாதவை என பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். கலப்பு செய்யப்பட்ட காங்கேயம் காளைகள் முழுக்க வெள்ளை நிறத்தில் இருக்கும். விவசாயத்தில் மாடுகள் ஈடுபடாவிட்டாலும், மாட்டுப் பொங்கலன்று அவை கௌரவிக்கப்படுகின்றன. மாடுகளின் கொம்புகள் வர்ணம் தீட்டப்பட்டு, நன்கு குளிப்பாட்டியபின், சந்தனம் மற்றும் குங்குமம் வைக்கப்பட்டு, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடப்படுகின்றன.
வீரத் தமிழனின் காங்கேயம் காளைகள்...!
காங்கேயம் பசுக்களின் பாலில் உயர்தரமான சத்துக்கள் காணப்படுகின்றது. பொதுவாகப் பால் உற்பத்தி நேரங்களில் காங்கேயம் இனங்கள் ஒரு நாளைக்கு 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை பால் கொடுக்கும் தன்மை கொண்டது. பல இன பசுக்களின் வருகையாலும் விவசாயத்திற்கு மாடுகளின் தேவை குறைந்து போனதாலும், இந்த இனங்கள் குறைந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. காங்கேயம் காளைகள் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு விவசாய பணிகளுக்காக விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன.
.வீரத் தமிழனின் காங்கேயம் காளைகள்...!
மாட்டு சந்தையில் ஒரு காளையின் குறைந்தபட்ச விலை 35 ஆயிரம் ரூபாய். மயில காளை இனத்தை சேர்ந்த ஒன்றரை வயது கன்றுக்குட்டி, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. காங்கேயம் காளைகள் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மட்டும் இல்லாமல் இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் பிரேசில் நாட்டில் இந்த வகை காளைகள் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு, மரபு வள மையம் சார்பாக சிறப்புக்கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் காங்கேயம் இனம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காகவே பலரும் காங்கேயம் காளைகளை வளர்த்து வருகின்றனர். இந்த அரிய வகை காங்கேயம் காளைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP