பறிபோனதோ பரோபகாரம்

பரோபகாரம் தான் இந்து வாழ்க்கையின் அடிநாதம். கடந்த நாட்களில் திண்ணை வைத்த வீடுகள் பரோபகாரத்தின் எடுத்துக்காட்டு. திருக்குறள் உள்ளிட்ட அனைத்து தர்மசாஸ்த்திரங்கள் கூறுவது மற்றவர்களுக்கு உதவி செய்வதைதான் வாழ்க்கையின் உயிர் நாடியாக உறைக்கின்றன.
 | 

பறிபோனதோ பரோபகாரம்

பரோபகாரம் தான் இந்து வாழ்க்கையின் அடிநாதம். கடந்த நாட்களில் திண்ணை வைத்த வீடுகள் பரோபகாரத்தின்  எடுத்துக்காட்டு. திருக்குறள் உள்ளிட்ட அனைத்து தர்மசாஸ்த்திரங்கள் கூறுவது மற்றவர்களுக்கு உதவி செய்வதைதான் வாழ்க்கையின் உயிர் நாடியாக உறைக்கின்றன. 

திருவள்ளுவர் ஒரு படி மேலே சென்று மோப்பக் குழைம் அனிச்சம், அதைப் போல முகம் மாறுபட்டாலே விருந்தினர்கள் மனம் வருந்துவார்கள் என்று கூறுகிறார்கள். 

கேட்டு கொடுப்பது தானம், கேட்காமல் கொடுப்பது தர்மம் என்பது பெரியர்கள் வாக்கு. இப்படி தர்மத்தின் உருவாக மனிதனை மாற்றிக் காட்டிய இந்து மதத்தில் வாழ்பவர்கள் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டார்களோ என்று எண்ணிப்பதறும் அளவிற்கு ஒரு சம்பவம் கடந்த 12-ஆம் நடைபெற்றது. 

பறிபோனதோ பரோபகாரம்

தூத்துக்குடி தனசேகரன் நகரில் மாநகராட்சி குப்பை தொட்டி உள்ளது. அதில் கழிவுகளை சேகரிக்க சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு அதன் உள்ளே 55 வயது மதிக்க தக்க பெண் உடல் மெலிந்து இறந்து கிடந்தது தெரிந்தது. உயிருடன் குழந்தைகள் கிடப்பதை மட்டுமே பார்த்து பழகிய அந்த ஊழியர்களுக்கு பெண் உடல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் சொல்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். அதில் அதே பகுதியை சேர்ந்த வசந்தி (50) இறந்து கிடந்தது தெரியவந்து. 

வசந்தியின் கணவர் நாராயணசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆஸ்ரமத்தில் சென்று வசிக்க தொடங்கி விட்டார். வசந்தி தன் மகன் முத்துலட்சுமணனுடன் வசிக்கிறார். மகனே திராவிட இயக்கங்கள், ஜாதி வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வரும் பூசாரி வேலை செய்கிறார். தட்டில் விழும் காசு அன்றாட செலவுக்கே பற்றாக்குறை. 

இந்நிலையில் உடல் நலிவுற்ற வசந்தியை  சிகிச்சைக்கு அழைத்து செல்ல வசதி இல்லை. கடந்த 11-ஆம் தேதி இறந்து போகிறார். அடக்கம் செய்ய பணம் இல்லாத காரணத்தால் வசந்தியின் உடலை அவரது மகன் தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் இதை அவர் மறுத்திருந்தாலும், அது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வந்தது. எது எப்படியோ, மாநகராட்சி ஊழியர்கள் வசந்தியின் உடலை அடக்கம் செய்து விடுவார்கள் என்பது அவரின் எண்ணமாக கூட இருந்திருக்கலாம்.

ஒவ்வொருவரின் முகத்தையும் நன்கு அறிந்து கொள்ள முடிந்த அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் நாள்தோறும் பூஜை செய்யும் ஒரு குடும்பம் (நீங்கள் அவரை அர்ச்சகர் என்றாலும் சரி, பூசாரி என்றாலும் சரி) ஊருக்காக உழைத்த குடும்பம் நடுத் தெருவில் நின்று உள்ளது. கோயிலுக்கு திருவிழா எடுக்கும் பக்தர்கள் பூசாரி சாப்பிட்டானா என்று நினைக்க மறந்துவிட்டது. ஊரின் முக்கிய பிரமுகர் என்று மார்தட்டிக் கொள்பவர்களில் 2 பேர் அந்த குடும்பத்திற்கு உதவி செய்திருந்தால் கூட அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. 

அந்த குடும்பத்தினர் சிறிது தன்மானத்தை விட்டு உதவி கேட்டு இருக்கலாம். அவர்கள் அதை செய்ய வில்லை. ஆனால் அக்கம் பக்கத்தவர்கள் எந்த அளவிற்கு ஒரு குடும்பத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று எண்ணும் போது வேதனையுடன் பயமும் ஏற்படுகிறது. 

இந்த சம்பவம் வாழ்க்கையின் உச்ச பட்சமான சோகம் தான். இதே போல மேலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. உடல் நிலை சரியில்லாத மகனுக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லை. மகன் மறித்து போகிறான். தாய் அவன் உடலை தானம் செய்கிறாள். இது மிச்சிறப்பான விஷயம் என்றால் கூட அதற்கு அடிப்படைக்காரணம் வறுமை என்பது தான் வேதனையின் உச்சம்

இதைப் படிப்பவர்கள் எந்த கருத்து வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் இந்த சம்பவத்தின் அடிநாதமாக இருக்கும் வறுமையை எப்படி நீக்கப் போகிறோம் என்பதே இது போன்ற சம்பங்கள் எதிர்காலத்தில் எழாமல் இருக்க உதவி செய்யும். 

பெற்றோரையே ஆஸ்ரமங்களில் விடும் பிள்ளைகள் மலிந்துவிட்ட காலத்தில் ஒரு குடும்பத்தை காலம் முழுவதும் காப்பாற்ற முடியாது தான். மரணம் போன்ற அசம்பாவிதங்கள் தோன்றும் அடையாளம் தெரிந்தால் கூட உதவியை தொடங்கி விடலாம். அதிலும் இறுதிநாள் அன்று பணம் இல்லை என்ற பரிதாபநிலை ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும் உதவியை தொடரலாம். ஒரு சில மாவட்டங்களில் கட்டமொய் என்ற வழக்கத்தை வைத்துள்ளனர். 

காஞ்சி பெரியவர் கூட அநாதை பிணங்களை அடக்கம் செய்வதை அவ்வளவு பாராட்டி உள்ளார். புண்ணியம் தரும் காரியங்களில் இதனை முக்கித்துவும் கொண்டதாகவும் கூறி உள்ளாளர். ஒரு சிலர் இதையே தங்கள் தொண்டாக செய்து வருகிறன்றனர். 
மரணம் குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரிய காரணமாக இருந்தாலும், பல மதங்களில் பக்தர்களை இணைக்க அதுவே காரணமாகிவிட்டது. குறிப்பிட்ட மதத்தில் பிறந்துவிட்டதாலேயே அதை விரும்பாவிட்டாலும் தொடர்வதற்கான முக்கிய காரணம். அவ்வாறு செய்யாவிட்டால் பிணத்தை புதைக்க இடம் கிடைக்காது என்பது தான்.

பறிபோனதோ பரோபகாரம்

ஒரே இறைவனை வணங்கினாலும், அனைவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய முடியாது. அதற்கு வழிபாட்டு தலம், ஜாதி என்று பல பிரிவுகள் உண்டு. இதற்காக பலர் அந்த அந்த மதங்களில் தொடர்கிறார்கள்.

இது போன்று வாழும் போது நிம்மதியாக வாழாவிட்டாலும் நிர்கதியாக செத்த பின்னால் நிம்மதியாக இருக்க வேண்டும். அதற்கு சமுதாயம் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் அரசு கை கொடுக்கலாம். அவரச சிகிச்சைக்கு 108 என்று இருப்பது போல கட்டணம் இல்லாத தொலை பேசி எண் ஒன்றை அறிமுகம் செய்து அதில் தொடர்பு கொண்டால் போதும், மாநகராட்சி ஊழியர்கள் வந்து அடக்கம் செய்வார்கள் என்ற ஏற்பாடு செய்யலாம். 

உதாரணத்திற்கு “விலையில்லா நல்லடக்கம்” என்ற திட்டத்தின் பெயரை வைத்துக் கொள்ளலாம். காஸ், மின்சார தகனம் போன்ற ஏற்பாடுகளில் பணியாற்றுவோர் மாநகராட்சி ஊழியர்கள் என்பது போல கிராமங்களில் உள்ள மயானங்களில் பணியாற்றும் ஊழியர்களையும் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி ஊழியர்களாக மாற்றலாம்.

மாநிலம் முழுவதும் சுமார் 2000 குடும்பத்தினர் தான் இருப்பார்கள். இவர்களுக்கு நிரந்தர சம்பளம் கொடுப்பதன் மூலம்  பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்ய முடியும். ஒட்டு மொத்தமாக கூறினால் நிம்மதியாக வாழ முடியாதவரை கவுரவமான மரணத்தை தருவது அனைவரின் கடமை, செய்வோமா? 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP