நீதிபதியிடம் மண்டியிட்டு மன்றாடிய பாரதிராஜா!

இப்பொழுது தண்டனை உறுதி எனும் நிலையை எட்டியதும், கோர்ட்டில், நான் இனி எந்த மதத்திற்கு எதிராகவும் பேச மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று நீதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் மன்றாடியிருக்கிறார்.
 | 

நீதிபதியிடம் மண்டியிட்டு மன்றாடிய பாரதிராஜா!

புல்வாமா, பாலகோட், அபிநந்தன் என்ற பரபரப்பில், சமீபத்தில் நம் பார்வையிலிருந்து தப்பிய செய்தி இது. 

சின்னச்சாமி என்ற பாரதிராஜா, சினிமாவில் ஜெயித்த மோகத்தில், தான் சொல்வதெல்லாம் கருத்து என்று சில மாதங்கள் முன்பு வரை பிதற்றிக் கொண்டு திரிந்தார்.

 நாட்டு மக்களுக்குக் இவர் கருத்து சொல்லி தான் விடியப் போகிறது என்று, தானே நம்பிக் கொண்டு காவிரியிலிருந்து, அடுத்தவன் கனவு வரை, இவர் கருத்தினை வலிய வந்து திணித்துக் கொண்டு திரிந்தார்.

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. தொழில்ரீதியான மெனோபாஸ். தண்டை சீண்டக் கூட ஆளில்லை எனும் நிலைமையை அவர் உணரத் தொடங்கியதும்,  அடித்தொண்டையில், அவரே அவருக்கு ட்ரான்ஸ்லேஷன் பண்ணிக் கொண்டு உளறிக் கொண்டிருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பு, வைரமுத்து என்ற சினிமா பாடலாசிரியர், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பற்றிய முட்டாள்த்தனமான பேச்சுக்கு, தமிழகம் எங்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதை எதிர்பாராத வைரமுத்து, சில நாட்கள் தலைமறைவாக இருந்து கொண்டு, பல பிரபலங்களைத் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருந்தார். 

அதற்காக சிலருக்கு பணம் மற்றும் சில கைமாறுகளை செய்தும், வேறு சிலருக்கு பழைய நன்றிக் கடனைத் தீர்க்கும்படியும், நிர்பந்தப்படுத்தியும் ஆதரவு திரட்ட முயன்றார்.

நீதிபதியிடம் மண்டியிட்டு மன்றாடிய பாரதிராஜா!

 இந்தச் சூழலில், ஏற்கனவே கவனிப்பாரற்றுக் கிடந்த பாரதிராஜா, வைரமுத்துவிடம் சில கைமாறுகளை எதிர்நோக்கியும், வெளி உலகில் மீண்டும் பிரபலம் அடைந்து விடலாம் என எண்ணியும், வைரமுத்துவைக் கிண்டல் செய்பவர்களின் தலையை எடுத்துவிடும் அளவிற்கு இறங்குவோம் என்று, தன் ஜாதி ஆதரவை இழுத்தும், ஸ்ரீஆண்டாள் நாச்சியார் மற்றும், முதற்கடவுளான விநாயகரையும் குறித்து உளறினார். 

அப்பொழுதே அதனைக் கண்டித்து, பல இந்து அமைப்புகள் அறிக்கை விட்ட போதிலும், இந்து மக்கள் கட்சி சார்பில் இவர் மீது ஒரு வழக்குத் தொடுக்கப்படது. தன்னை அறிக்கை விட நிர்பந்தித்து வந்த பிரிவினைவாதக் குழு, காரியம் முடிந்ததும், செட்டில்மெண்ட் பண்ணிவிட்டு கை கழுவி விட்டது. 

முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட பாரதிராஜா, வழக்கின் போக்கும் அது போட்ட கிடுக்கிப்பிடியையும் கண்டு நடுங்கத் தொடங்கினார். பிரிவினைவாத குழு செட்டில் பண்ணி கை கழுவிய போதே, இனி, தான் அரசியல் மற்றும் பொது விசயங்கள் பேசப் போவதில்லை என்று அறிக்கை கொடுத்திருந்தது நமக்கு நினைவிருக்கும். 

இப்பொழுது தண்டனை உறுதி எனும் நிலையை எட்டியதும், கோர்ட்டில், நான் இனி எந்த மதத்திற்கு எதிராகவும் பேச மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று நீதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் மன்றாடியிருக்கிறார். 

ஆனால் நீதிபதி, உங்கள் வீட்டுப் பெண்களை மானக்கேடாகப் பொதுவெளியில் பேசினால் நீங்கள் மன்னித்து விடுவீர்களா? என்று பாரதி ராஜாவிடம் திரும்பக் கேட்டிருக்கிறார். (வேதம் புதிது படத்தில், அந்த சிறுவன், சத்தியராஜிடம் ஒரு கேள்வி கேட்ட போது, அவரை அறைந்தது போன்ற ஒரு சீன் வரும். அது போல், நீதிபதியின் கேள்வி, பாரதிராஜாவுக்கு இருந்திருக்கும் போல) மேலும் வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என்று வழக்கை மூன்று மாதத்திற்குத் தள்ளி வைத்திருக்கிறார்.

சமீபத்தில், அரசுக்கு எதிராக சினிமாக்காரர்களில் ஒரு பிரிவினரின் சத்தம், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பின்புலத்தில் யாரோ, எந்த அமைப்போ மிகப் பெரிய அளவில் பணம் வீசிக் கொண்டிருக்கிறது. 

விரைவில் யாராவது ஒருவருக்கு மனசாட்சி வேலை செய்து, உண்மையை வெளியே சொல்லப் போகிறார். ஒட்டு மொத்த கூட்டமும் சிக்கப் போகிறது. 

இன்றைக்கு தேசத்திற்கு எதிராக அறிக்கைகள் விடும் ஆட்கள், விரைவில் அதற்கான பலனை அடைவார்கள் என்பது மட்டும் உறுதி!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP