ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -2)

விசா,கார்டு மாஸ்டர் கார்டு வைத்திருப்பர்கள் ரூபே கார்டு பெற விண்ணப்பித்தால் வங்கிகள் அதை அனுமதிப்பதில்லை. நாம் புதிய கார்டுக்கு விண்ணப்பித்து அதில் ரூபே கார்டு என்று குறிப்பிட்டிருந்தாலும் உங்களுக்கு அது வழங்கப்படுவதில்லை
 | 

ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -2)

விசா கார்டு, மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர்கள் ரூபே கார்டு பெற விண்ணப்பித்தால் வங்கிகள் அதை அனுமதிப்பதில்லை. முந்தைய  விசா  மற்றும் மாஸ்டர் கார்டுகளின் காலம் முடிவடைந்த பின் நீங்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தாலும் வங்கிக் கிளைகள் உங்களுக்கு பழைய கார்டுகளான விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளையே வழங்குகின்றன. காரணம் கேட்டால் பழைய கார்டு எந்த நிறுவனத்தைச் சேர்ந்ததோ, அந்த நிறுவன கார்டுதான் புதிதாக வழங்கப்படும் என்று பதில் வருகிறது.

நாம் புதிய கார்டுக்கு விண்ணப்பித்து அதில் ரூபே கார்டு என்று குறிப்பிட்டிருந்தாலும் உங்களுக்கு அது வழங்கப்படுவதில்லை. மேலும் விசா அல்லது மாஸ்டர் கார்டுகளே திணிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நாம் மேலும் கேள்வி எழுப்பினால் வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து இந்த கார்டுகள்தான் வருகின்றன. ரூபே கார்டு கேட்டால் அதற்கு தான் கடிதம் எழுதி பெற வேண்டும், அதற்கு ஓர் மாதம் வரை ஆகும் என்று பதில் தருகிறார்கள்.

மேலும் ரூபே கார்டு பெறுவதற்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகத் தயாரிக்கும்போது பத்து ரூபாய்கூட வராத அந்த பிளாஸ்டிக் அட்டைக்கு 250 ரூபாய் கட்டணம் என்பது வங்கிகள் நிகழ்த்தும் பகல் கொள்ளை மட்டுமல்ல, இலவச கார்டுகளாகத் தரப்படும் விசா மற்றும் மாஸ்டர் கார்டு பக்கம் வாடிக்கையாளரை மறைமுகமாக அழைத்துச் செல்லும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விற்பனையகங்களில் மாதாமாதம் குறைந்தபட்சம் இவ்வளவு ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியிருக்க வேண்டும் என்று விசா, மாஸ்டர் காடுகளில் கட்டாயப்படுத்துவதில்லை. பொருட்கள் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அந்த நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் ரூபே கார்டில் குறிப்பிட்ட அளவிற்கு கட்டாயம் பொருட்கள் வாங்க வேண்டும். அவ்வாறு வாங்காவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது.

ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -2)

அதாவது வாடிக்கையாளர்களே ரூபே கார்டு வேண்டாம் என்று ஓடிவிட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் அருமையான நோக்கம். ரூபே கார்டு வழங்குதில் ஏற்படும் கால தாமதமும் இதற்கு ஒரு காரணம். சில தனியார் வங்கிகள் மாஸ்டர் மற்றம் விசா கார்டுகளை ஒரு சில தினங்களில் வழங்கி வரும் போது, ரூபே கார்டுகளுக்கு மட்டும் ஏற்படும் கால தாமதம் வேண்டுமென்றே செய்வது போல் இருக்கிறது. இதற்கு வங்கித் தலைவர்கள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஆகியோரை விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் கவனிக்கப்பட வேண்டிய விதத்தில் கவனித்து விடுவதாலேயே தேசிய வங்கிகள் இவ்வாறு செயல்படுவதையும், கண்காணிக்க வேண்டிய மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் செயல்படாமல் இருப்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது. 

நம் வங்கி மேலாளர்களின் நேர்மையை பணமதிப்பு இழப்பு நடவடிக்கையிலேயே நாட்டு மக்கள் நேரில் கண்டு காரித்துப்பியதும் நாம் அறிந்ததே. வெறும் 10 நோட்டு மாற்றியவனிடம் சட்டம், சவடால் பேசிய வங்கியாளர்கள், டன் டன் ஆக பழைய ரூபாய் நோட்டுக்களை செல்வந்தர்களுக்கு, அவர்கள் சிரமமடையாமல் மாற்றிக் கொடுத்தனர். புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும், செல்வந்தர்களுக்கு மடை மாற்றம் செய்யப்பட்டன. இதை  ஒட்டுமொத்த மக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

வங்கி அதிகாரிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நேர்மையின் சிகரமாக செயல்பட்டார்கள் என்று நீங்கள் கூறினால் பைத்தியக்காரன்கூட உங்களை இகழ்வாகவே பார்ப்பான். தவறு செய்யும் அதிகாரிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வந்திருந்தால், சங்கம், சிண்டிகேட் என்று சேர்ந்து கொண்டு மத்திய அரசின் முயற்சியையே முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தோல்வியுறச் செய்து இருப்பார்கள். இதன் காரணமாக மத்திய அரசு இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

சுதந்திரத்திற்கு முன்பு கப்பலோட்டிய தமிழன் வஉசி, சுதேசி கப்பல் ஓட்டியதைப் போல, பிரதமர் மோடி ரூபே கார்டு போன்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் நாம் வஉசி காலத்தில் அவருக்கு உதவி செய்யாமல் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு, தற்போது அவர் தியாகத்தை பூப்போட்டு கொண்டாடுகிறோம் அல்லவா. அதற்கு சற்றும் குறையாமலே தற்போதும் வாழ்ந்து வருகிறோம்.

இந்த காலத்தில் ரூபே கார்டு போன்ற திட்டங்களை வெற்றி அடைய செய்யாமல், யாரோ சிலர் லஞ்சம் பெற்று தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து உண்மை வெளி வரும் போது நாம் உச்சு கொட்டுவோம். அப்போது நாம் உதவி செய்ய நினைத்தாலும் அதற்கான தேவை இருக்காது.

இந்தக் கட்டுரை வெறுமனே அறைக்குள் அமர்ந்து கருத்து கண்ணாயிரமாக எழுதப்பட்டதில்லை. நாம் நேரடியாக வங்கியுடன் பெற்ற அனுவத்திற்குப் பிறகும், நமக்குத் தெரிந்தவர்களிடம் அவர்களது அனுபவம் குறித்து கேட்டறிந்த பிறகே இதை எழுதியுள்ளோம். 

நாம் நேரடியாக சோதித்து அறிந்த வங்கி, சிண்டிகேட் வங்கி, வளசரவாக்கம் கிளை, சென்னை. இதற்கு முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதே வங்கியில் ரூபே கார்டு கேட்டபோதும், சம்பந்தப்பட்ட அதிகாரி விசா கார்டையே திணித்தார். ரூபே கார்டு வந்து சேர ஓராண்டு ஆகும் என்று அவர் வழங்கிய கார்டு ஒன்றே சிறந்த நிவாரணமாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.

மத்திய அரசின் நல்ல திட்டங்கள் தோல்வியடைவத்ற்கு, எவ்வித பொறுப்புமின்றி எவரிடமாவது கையூட்டு பெற்றுக்கொண்டு மக்கள் விரோதமாக செயல்படுவது குறித்து பிரக்ஞையே இன்றி செயல்படும் அதிகாரிகளே காரணம் என்பது முழு உண்மை என்றாலும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கி அதிகாரிகளின் நேர்மை குறித்து சமுதாயத்தில் இருந்த பிம்பம் சிதைந்தது.

அவர்கள் அதுவரை வெளியில் தெரியாமல் செய்து வந்த அயோக்கியத்தனங்கள் பொதுவெளிக்கு வந்தது. ரூபே கார்டை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் முகம் மட்டும் வழக்கம்போல வெளியில் தெரிய வராது. ஆனால் அந்நிய நிறுவனங்களைச் சார்ந்திராமல் சுயசார்புடன் செயல்படுவதன் ஓர் அங்கமாக மத்திய அரசு எடுத்துள்ள முயற்சியை, மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும், வங்கித்தலைமைகளும் கேன்சர் நோயைப்போல், சத்தமின்றி ஒழித்து வருகிறார்கள் என்பதே உண்மை. 

ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -1)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP