ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -1)

ரூபே கார்டின் வளர்ச்சியும் வெளியே பார்க்க சிறப்பாக தோன்றினாலும், வங்கி தலைவர்களும், நிதித்துறை அமைச்சகத்தினரும் ரூபே கார்டு வளர்ச்சியை முடக்கவே திட்டமிட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது நம்மில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கும். இது குறித்த ஒரு சிறப்புக் கட்டுரை...
 | 

ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -1)

சேத்த பணத்த சிக்கனமா; செலவு பண்ண பக்குவமா; அம்மா கையிலேயே கொடுத்து போடு; சின்னக் கண்ணு; உங்க அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு; அவங்க ஆற நுாறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு... என்று மக்களை பெற்ற மகராசி படத்தில் ஒரு பாடல் வரும். இது தான் இந்தியர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துக்காட்டும் வரிகள்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்கள் சம்பளம் வாங்கி அதை செலவு செய்து பாக்கி தொகை இருப்பதை வங்கியில் செலுத்தினார்கள். இதனால் வங்கியின் வருமானம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது சம்பளம் முழுவதும் வங்கியில் இருக்கும், செலவுக்கு போய் பணம் எடுத்துக் கொள்ளும் வாழ்க்கை முறை. இதனால் வங்கிகள் வளமான வாழ்க்கை வாழ்கின்றன.

பணத்தை முழுவதும் வங்கியில் இருப்பு வைத்து அதை தேவையானபோது எடுத்து செலவு செய்யும் வழக்கம் மக்களிடையே செல்வதில் பெரு முயற்சி நடைபெற்றன. ஆனால் அது முழுவதும் இரண்டு பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களது அசுரத்தனமான சந்தைப்படுத்தும் முயற்சியின் ஒர் முகமாக செயல்பட்டதின் விளைவே நாம் இன்று முழுக்க முழுக்க நம் பணத்தை வங்கியில் நேரடியாக வரவு வைத்து, செலவு செய்வதற்கு முதற்காரணம். அதன் ஓர் அம்சம்தான் இன்று வீதிகள்தோறும் உள்ள ஏடிஎம் மையங்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இடத்தில் ஏடிஎம் மையம் அமைக்க சுமார் 2 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடக்க வேண்டும் என்று தேசிய வங்கிகள் நிபந்தனை விதித்து வந்ததையும் நாம் இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.

ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -1)

அந்த காலகட்டத்தில் "சார் கிரெடிட் கார்டு வாங்கி கொள்ளுங்கள்.." என்று கூவி கூவி விற்பனை செய்தார்கள். இன்று அவ்வாறு இல்லை. தனிநபர்களின் நிதிப்புழக்கத்தில் இந்த அளவிற்கு மாற்றம் வர 2 நிறுவனங்கள் தான் காரணம். அமெரிக்காவின் மாஸ்டர் கார்டு, விசா கார்டு ஆகியவையே அவை.  அமெரிக்காவை சேர்ந்த யுனைட்டெட் கலிஃபோர்னியா பேங்க், வேல்ஸ்  பேர்கோ, கல்போர்னியா வங்கி ஆகியவை இணைந்து மாஸ்டர் கார்டை தொடங்கின. அமெரிக்க வங்கி ஏற்படுத்தியது விசா கார்டு.

உலகம் முழுவதும் இந்த இரண்டு கார்டுகள் தான் டிஜிட்டல்  பணபரிவர்த்தனை முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 

இந்தியாவில் நாம் செய்யும் பரிவர்த்தனைக்கு வங்கிகள் அந்த நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தி வருகின்றன. உண்மையில் அது வாடிக்கையாளர்கள் பையில் கையை விட்டு எடுத்து அந்த பன்னாட்டு கார்டு நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்து வருகின்றன. இதனால் நம் கண்ணுக்கு தெரிந்தே அமெரிக்க நிறுவனங்கள் வளம் பெற நாம் இது வரையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தோம், வேறு வழியில்லாத காரணம் என்று முழுக்க சொல்ல முடியாது.

அந்தத் திசை நோக்கி மத்திய அரசும் சரி, தேசிய வங்கிகளும் சரி, எவ்வித முயற்சியையுமே எடுக்க சிந்தித்தது கூட இல்லை. அதற்கான தொழில் நுட்பத்தை நம்மால் உருவாக்க முடிந்திருக்காதா என்ன? திட்டமிட்டே அத்தகைய முயற்சிகளை வங்கி மற்றும் நிதித்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை என்றே நாம் நம்பத் தோன்றுகிறது. ஏனெனில் ரூபே கார்டு திட்டம்  பெற்று வந்த வெற்றியை வைத்தே நாம் இதைக்கூற முடிகிறது.

மோடி சர்க்கார் நம் தேசத்தின் பிரமாண்டத்தை உணர்ந்து அது இத்தகைய நிறுவனங்களுக்கு எவ்வாறு காமதேனுவாக உள்ளது என்பதை உணர்ந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. ஏற்கெனவே மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்திலேயே தொடங்கப்பட்டு, தேசிய வங்கிகளால் நத்தை வேகத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூபே கார்டு திட்டத்தை விரைந்து பரவச் செய்தார் மோடி. அதுவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு அசுர வேகத்தில் வளர்ச்சியடைச் செய்தார் மோடி.

 அமெரிக்காவின் சிலிகான் வேலியில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள் மத்தியில் பேசிய மோடி, உங்கள் தகுதியும் திறமையும் இந்தியர்களுக்கு பயன்படும் வகையில் இந்தியாவிற்கு திரும்ப வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அதை ஏற்றவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அவர்கள் உழைப்பில் உருவானது தான் ரூபே கார்டு மற்றும் யூபிஐ கார்டு.

டிஜிட்டல் இந்தியாவின் உயிர் நாடியாக இந்த அட்டைகள் திகழ்ந்து வருகின்றன. இவற்றில் செய்யப்படும் பரிமாற்ற கட்டணத்தில் கிடைக்கும் தொகை இந்தியாவிலேயே இருப்பில் வைக்கப்படுகிறது. ஆன்லைன் பண மோசடியில் வெளிநாட்டினர் ஈடுபடுவதும் மிக மிக குறைவு. இது போன்ற காரணங்களால் மத்திய அரசு ரூபே, யூபிஐ கார்டுகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் வேகமாக ரூபே கார்டு வளர்ச்சி பெற்று வருகிறது. இந்திய மக்கள் தொகையில் 50 கோடி பேர் தற்போது ரூபே கார்டு பயன்படுத்துகிறார்கள். ரூபே கார்டின் வளர்ச்சி 2013ம் ஆண்டு 0.6 சதவீதம், தொடர்ந்து 2015ல் 14சதவீதம், 2018ம் ஆண்டு 50 சதவீத வளர்ச்சியை ரூபே கார்டு பெற்றுள்ளது. இந்திய தேசிய கட்டண நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் இந்த வளர்ச்சி போதுமானதா?. உண்மையில் இந்த கார்டின் வளர்ச்சி இவ்வளவுதானா என்ற கேள்வி எழுகிறது.

ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -1)

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு பாதிப்பு வரும் போது அதில் இருந்து மீண்டு எழுவதற்கு பலவித நடவடிக்கைகைளை மேற்கொள்ளும். அது குளிர்பான நிறுவனமாக இருந்தாலும் சரி, ராக்கெட் விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்தாலும் சரி. எந்த மட்டத்திலும் இறங்கி தனக்கு தேவையானதை சாதிக்கும்.

அந்த வகையில் தான் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சகத்திடம் மாஸ்டர் கார்டு நிறுவனம் புகார் கொடுத்துள்ளது. அதில் மோடியின் முயற்சியால் ரூபே கார்டு பிரபலமடைவதாகவும், தங்கள் நிறுவனம் நஷ்டம் அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் மாஸ்டர் கார்டு துணை அதிபர் ஸாரா இங்கிலீஷ் இந்த விவகாரம் தொடர்பாக ட்ரம்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -1)

இதன் காரணமாக அமெரிக்க அரசு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இன்னொருபுறம் மாஸ்டர் கார்டு நிறுவன அதிபர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியான அஜய் பாங்கா இந்தியாவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர்கள் மூலமும் மாஸ்டர் கார்டை இந்தியாவில் பிரபலப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இதே போன்ற முயற்சிகளில் விசா கார்டும் ஈடுபட்டுள்ளது .

இந்த புகார், மோடியின் ராஜதந்திரம் என்றும், ரூபே கார்டின் வளர்ச்சி அபாரம் என்றும் இந்தியர்களுக்கு மமதையை தந்தாலும், உண்மையில் ரூபே கார்டு புற்றுநோய் தாக்கிய நோயாளியைப் போலவே உள்ளது.

புற்றுநோய் தாக்கிய நோயாளி பார்க்க நன்றாகத்தான் இருப்பார். நோய் முற்றி வெடிக்கும் போதுதான், அவருக்கு புற்றுநோய் இருந்ததா என்றே தெரியவரும்.

அதே போலதான் ரூபே கார்டின் வளர்ச்சியும் வெளியே பார்க்க சிறப்பாக தோன்றினாலும், வங்கி தலைவர்களும், நிதித்துறை அமைச்சகத்தினரும் ரூபே கார்டு வளர்ச்சியில் புற்றுநோய் கிருமியை உட்செலுத்தி உள்ளனர். 

சரி இந்த ரூபே கார்டு வழங்குவதற்கு எதிராக வங்கிகள் செயல்படுவது ஏன்? - அடுத்த தொடரில் பார்க்கலாம். 

 

ரூபே கார்டை ஒழித்துக் கட்ட வங்கிகள் சதி...! (பகுதி -2)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP