”கோவை” டாப் ஸ்லிப் போய் இருக்கீங்களா...?

கோவை ஆனைமலையில் உள்ள இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம் தான் ”டாப் ஸ்லிப் என அழைக்கப்படுகிறது. அமைதியாய் இயற்கையோடு ஒன்றியிருக்கும் சுகம் டாப் ஸ்லிப்பில் கிடைப்பதாக அனுபவித்து கூறுகின்றனர், சுற்றுலா பயணிகள்.
 | 

”கோவை” டாப் ஸ்லிப் போய் இருக்கீங்களா...?

கோவை மாநகரத்தில் அமைந்துள்ளது ஆனைமலை வனவிலங்கு சரணாலயம். ஆனைமலையில் அடர்ந்த காட்டுப் பகுதியான, இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம் தான் ”டாப் ஸ்லிப் என அழைக்கப்படுகிறது. 

ஆனைமலையில் அமைந்துள்ள, இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். முன்னால் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரின் வருகையால், 1961ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இந்திரா காந்தி அம்மையார் நினைவையொட்டி இப்பெயர் இடப்பட்டுள்ளது. பூங்காவும் உய்வகமும் யுனெஸ்கோவினால் மேற்குத் தொடர்ச்சிமலை உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க ஆய்வில் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகள் முகாம் பிரசித்தி பெற்றதாகும். மலையில் ஏறும்போதே இருபுறமும் அடர்ந்த மூங்கில்கள் சாலைக்குக் குடை பிடிக்கும். காற்றில் மூங்கில்கள் உராயும் சத்தம், சட்டென்று அடர்ந்த கானகத்தில் புகுந்த அனுவத்தை நமக்கு உண்டாக்கும்.  இப்பூங்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள டாப் ஸ்லிப் என்ற கிராமத்தின் பெயராலேயே இது பரவலாக அறியப்படுகிறது. 

”கோவை” டாப் ஸ்லிப் போய் இருக்கீங்களா...?

டாப் ஸ்லிப்புக்கு செல்ல ஒரே சாலைதான் இருக்கிறது. அதுவும் கேரள எல்லைக்குள் அமைந்திருக்கும் பரம்பிக்குளம் அணை வரை செல்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியையும், இயற்கையான சூழலையும் கண்கள் சலிக்கும் அளவுக்கு இங்கு கண்டு ரசிக்கலாம். டாப் ஸ்லிப் வனப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை போன்ற விலங்குகளும், அபூர்வமான பறவை இனங்களும் இருக்கின்றன. 

”கோவை” டாப் ஸ்லிப் போய் இருக்கீங்களா...?

இயற்கை ஆர்வலர்களுக்கும் இயற்கைச் சூழலை விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடம் இது . முழுக்க முழுக்க தமிழக வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் டாப் ஸ்லிப்பில், தனியாருக்குச் சொந்தமான நிலம் என்று எதுவும் இல்லை. அதனால், இங்கு தனியார் விடுதிகளோ, கடைகளோ கிடையாது. ஒரே ஒரு உணவு விடுதி, ஆரம்பச் சுகாதார நிலையம், வன விலங்கு அருங்காட்சியகம் மற்றும் வனத்துறை பணியாளர்கள் தங்கும் குடியிருப்புகளை மட்டுமே நாம் காண முடியும். 

”கோவை” டாப் ஸ்லிப் போய் இருக்கீங்களா...?

மிகவும் இதமான தட்பவெப்ப நிலை கொண்ட இப்பகுதி, கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். குறிப்பாக யானைகள் மீது சவாரி செய்தபடி அடர்ந்த வனப்பகுதிகளையும், அங்கு உலவும் மான்கள், காட்டெருமைகள் போன்ற விலங்கினங்களையும், பறவைகளையும் கண்டுகளிப்பதை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.  இங்கு வன விலங்குகளைக் காணவும், இயற்கைக் காட்சிகளை கண்டு களிக்கவும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 

”கோவை” டாப் ஸ்லிப் போய் இருக்கீங்களா...?

சேத்துமடையில் இருந்து டாப்சிலிப் செல்லும் ரோடு, 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டுள்ளதால் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுகின்றனர்.  டாப் ஸ்லிப்பில் சுற்றுலாப் பயணிகள் செல்லத்தக்க மாதங்கள் மே முதல் ஜனவரி வரையாகும். டாப் ஸ்லிப்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பல சிறுகுடில்கள், அறைகள் மற்றும் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

தேசியப் பூங்காவினை கால் நடையாக நடந்தோ அல்லது சவாரி வண்டிகளிலோ சுற்றிப் பார்க்கலாம். நகர வாழ்வின் பரபரப்பில் இருந்து விலகி, சுற்றிலும் மலைகள் சூழ, சுத்தமான காற்றை சுவாசித்து, சிறு பயத்தோடு வனவிலங்குகளை ரசித்து, அமைதியாய் இயற்கையோடு ஒன்றியிருக்கும் சுகம் டாப் ஸ்லிப்பில் கிடைப்பதாக அனுபவித்து கூறுகின்றனர், இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP