ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு

2500 ரூபாயில் வாஷிங் மெசின் தண்ணீரையும் சேமிக்கும் விதமாக உருவாக்கம்
 | 

ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு

கோவையில் 8ஆம் வகுப்பு படித்த முதியவர் ஒருவர் குறைந்த செலவில் தண்ணீர் மிச்சப்படுத்தும் வகையில் வாஷிங் மெஷின் கண்டுபிடித்து ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் விற்பனை செய்து வருகிறார். 

கோவை கணபதி, சங்கனூர் சாலை, ரூட்ஸ் கம்பெனி, அருகே உள்ள பழைய பத்திர அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வருவது தேவி லட்சுமி எண்டர்பிரைசஸ் நிறுவனம். அதன் உரிமையாளர் முருகேசன் வயது (65), இவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர்.

இவரிடம் குறைந்த விலை வாஷிங் மெஷின் கண்டுபிடிப்பு குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:- "எனது சொந்த ஊர் திண்டுக்கல் சிறுவயதில் கோவை வந்துவிட்டேன். கோவையில் 50-வருடங்களாக வசித்து வருகிறேன். கிரைண்டர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தோம். தமிழக அரசின் இலவச கிரைண்டர், மிக்சி திட்டத்திற்கு முழுமையாக செய்து கொடுத்தோம். அனைத்து மக்களுக்கும் இலவச கிரைண்டர், மிக்ஸி சென்றடைந்ததால் கடைகளில் கிரைண்டர் மிக்ஸி விற்பனை குறையத் தொடங்கியது.

ஆதலால் மக்களின் பயன்பாட்டிற்கு குறைந்த விலையில் வாஷிங் கண்டுபிடிப்பது என முடிவு செய்து 2 வருட ஆராய்ச்சிக்குப் பின் ரூ.2500 மதிப்பிலான வாஷிங் மெஷினை உருவாக்கியுள்ளேன். கடைகளில் 15 ஆயிரத்திற்கும் மேலே வாஷிங் மெஷின் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இது முழுக்க முழுக்க ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்கு உதவுகிறது. மக்கள் விருப்பத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தமிழகம் முழுவதும் டீலர் போட்டு விற்பனை செய்யப்படுகிறது.

முறையான அரசு அனுமதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட கர்நாடகா, கேரளா, ஆந்திரா என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு வருட கேரண்டியும் உண்டு 6 கிலோ 8 கிலோ என இரண்டு அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் செலவு மிக மிக குறைவு, மின்சாரச் செலவு அதை விட குறைவு, 7 முதல் 8 நிமிடத்தில் துணிக்கு நல்ல தூய்மை கிடைக்கிறது.பேட்டன் ரைட்ஸ் முறையாக விண்ணப்பிக்கபட்டு செயல்படுத்தப்படுகிறது. வெளி மாவட்டங்களுக்கு பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பயன்படுத்திய மக்கள் அனைவரும் சிறந்த முறையில் பாராட்டு தெரிவித்துள்ளனர்".

இதுபோன்று ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி உதவி வருவது, உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட அந்த பெரியவரை நாமும் பாராட்டுவோமே..

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP