1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வரர் கோவில்...!

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ளது திருக்கடையூர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற தளங்களில் ஒன்று அமிர்தகடேஸ்வரர் கோவில். சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூரும் ஒன்றாகும்.
 | 

 1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வரர் கோவில்...!

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ளது திருக்கடையூர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற தளங்களில் ஒன்று அமிர்தகடேஸ்வரர் கோவில். சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூரும் ஒன்றாகும். இங்குள்ள அம்பாளின் அழகில் தன்னை மறந்து அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்திற்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிராம பட்டர் அவதரித்த தலம் இதுவாகும். 

 1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வரர் கோவில்...!

இக்கோவிலை தல புராண வரலாற்றில்  பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டாராம். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, இந்த விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார். பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுள்ளார். முதலில் திருக்கடவூரில் அந்த விதை முளை விட்டதை கண்டுள்ளார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில்  எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

 1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வரர் கோவில்...!

அப்போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றார்.  திரும்பி வந்து தான் வைத்த குடத்தை எடுக்கும் போது  குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றியதாகவும் இதனால்  இத்தலம் திருக்கடவூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.  அந்தக் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால் இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

 1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வரர் கோவில்...!

கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் நடராஜர், வில்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன், அகத்தியர், சப்த கன்னியர்கள், 63 நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன. ஆனால் இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி மட்டும் இல்லை. காலசம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காணப்படுகிறார். மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கரத்துடன் நிற்கிறார்.  

 1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வரர் கோவில்...!

பிறகு எமனை மன்னித்த சிவபெருமான் எமனை தன் சந்நிதிக்கு எதிரே வைத்துள்ளான். இத்தலத்தில் எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு சிறு கோவில் உள்ளது. எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகின்றன. ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் வருடாவருடம் சித்திரை மாதம் காலசம்ஹார பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுமட்டுமல்லாது ஆடிப்பூரம் தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு வைபவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். 

 1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வரர் கோவில்...!

கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும்.  

 1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வரர் கோவில்...!

அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவ்வாறு அபிஷேகம் நடைபெறும் போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு களிக்க ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை புரிகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP