1876ல் தொடங்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ் ஆய்வு...!

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பணிகள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகியும், அந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக இன்று வரை முறையாக வெளியிடப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 | 

1876ல் தொடங்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ் ஆய்வு...!

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணியாற்றின் கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். வரலாற்றுச் சிறப்புமிக்கத் தாழிக்காடு தான் ஆதிச்சநல்லூர். சிந்து வெளி நாகரிக காலத்திற்கு முன்னர் இருந்து விளங்கி வரும், இவை தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக விளங்குகிறது இந்த தாழிக்காடு.                              

ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் நூற்றுக்கணக்கில் எலும்புகளோடு கிடைத்திருக்கின்றன. ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற ஒரு சில தாழிகள்  மிக சிறந்த வேலைப்பாடுகளுடன் ஆச்சரியபடவைக்கிறது. பண்டைய தமிழ் மக்களின் அத்தனை கூறுகளையும் உள்ளடக்கியதாக இந்த நாகரிகம் திகழ்கிறது. இதற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சியில் கிடைதுள்ளதாக கூறப்படுகிறது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாடு வகைப்படுத்தப்படுகிறது.

1876ல் தொடங்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ் ஆய்வு...!

1876ஆம் ஆண்டு தொடங்கி பலமுறை அகழ் ஆய்வு நடத்தப்பட்டதில் கிடைத்திருக்கும் பொருட்கள் என்னவென்றால், மண்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் , எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத்தின் தொல்பழங்காலத்தில்  ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். ஆதிச்சநல்லூர் புதிய கற்காலக் காலத்திலிருந்து பெருங்கற்காலம் முடிய மிகச் சிறந்த உள்நாட்டு வணிகத் தலமாகத் திகழ்ந்ததாக கூறப்படுகிறது.  

1876ல் தொடங்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ் ஆய்வு...!

ஆதிச்சநால்லூரில் முதன்முதலில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். பெருங்கற்காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் கல்வியறிவிலும், செப்புத்திருமேனிகள், வெண்கல கலன்கள்,  இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், சுடுமண் அணிகலன்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் வல்லமை படைத்தவர்களாக விளங்கியதாக இங்கு இருக்கும் சான்றுகள் நமக்கு கூறுகின்றன. 

பெருங்கற்காலம் இவையோடு சம்பந்தப்பட்ட இரும்புகாலம் என்று அறியப்படுகிற தொல்லியல் வரலாறு குறித்த ஏராளமான சான்றுகள் இவ்வகழ்வாய்வுகள் மூலம் கிடைத்திருக்கின்றன. இதனை மிகப் பழமையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா,  கிரீஸ் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் ஏராளமாக இரும்பு கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தென் இந்திய வரலாற்றை ஆய்வு செய்த ஆய்வாளர்களில் சிலர் பொதுவாக இங்கு இரும்பு காலம்  கிட்டத்தட்ட கி.மு.5000-ம் ஆண்டுவாக்கில் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். 

1876ல் தொடங்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ் ஆய்வு...!

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த தொல் நாகரிகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் இந்திய தொல்லியல் துறையால் 2004 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இதில் மிகவும் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு பிரிட்டிஷ் தொல்லியலாளர் அலெக்சாண்டர் ரெயா ஆய்வுகள் நடத்தியதும் குறிப்பிடதக்கது. 

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பணிகள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகியும், அந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக இன்று வரை முறையாக வெளியிடப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP