நடிகையர் திலகம் நிர்மலாதேவி?

மனநலம் பாதிக்கப்பட்டவர் முகிலன் போல இருப்பார் என்று கூறினால் நிர்மலாதேவி? அவர் வழக்கு உணர்ச்சிகளால் மட்டுமே உருவானது. மாணவிகள் சிலரை அவர் தடம் மாற அழைத்தார் என்பது தான் வழக்கு. முகிலன் என்னை ஏமாற்றி உடலுறவு கொண்டார் என்பதையும், ஆந்தை மட்டுமே ஒரே இணையுடன் இருக்கும் மனிதர்கள் நாய்கள் போன்றவர்கள் என்று வகுப்பு எடுத்தவர்கள் எல்லாம் போலீசார் பொய் வழக்கு புனைகிறார்கள், அது அவர்கள் தனிப்பட்ட விஷயம் என்றெல்லாம் விமர்சனம் எழும் காலத்தில் நிர்மலாதேவி வேறுவகையில் பார்க்கப்படுகிறார்.
 | 

நடிகையர் திலகம் நிர்மலாதேவி?

பாராசக்தி திரைப்படத்தில் பசிக்கு சிவாஜி கணேசன் திருடுவார். அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தாக்குவார்கள். அதே நேர்த்தில் பைத்தியக்காரன் ஒருவர் பழம் விற்பனை செய்யும் பெண்ணிடம் இருந்து ஒரு சீப்பு வாழைப்பழத்தை துாக்கி செல்வான். அந்த பெண் அலறுவாரே தவிர்த்து அந்த பைத்தியத்தை யாரும் அடிக்க மாட்டார்கள். இதில் இருந்து பாடம் கற்கும் சிவாஜி அதன் பின்னர் தானும் பைத்தியம் பிடித்தவன் போல நடிப்பார்.

இதற்கு இணையாக இந்த வாரம்   முகிலன், நிர்மலாதேவி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். முகிலன் தானே மாயமாகி, மீண்டும் திருப்பதி ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி போலீசாரிடம் சிக்கினார். பல நாள் தாடி அழுக்கு உடை எல்லாம் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காட்டினாலும், முகிலன் எழுப்பிய கோஷங்கள் அவர் சுய நினைவோடு இருப்பதை காட்டுகிறது. 

நீதிமன்றங்களி்ல் குற்றவாளியின் பெயர், தந்தை பெயர், முகவரி ஆகியவற்றை தான் முதலில் கேட்பார்கள். அதற்கு சரியான பதில் சொல்லும் நிலையில் இருந்தால் அந்த குற்றவாளி நல்ல மனநிலையில் இருப்பதாக முடிவுக்கு வருவார்கள். இந்த இலக்கணத்தின் படி முகிலன் நல்ல மனநிலையில் தான் உள்ளார். 

ஆனாலும் சமூக ஊடக போராளிகள் அவர் மன அழுத்தில் இருக்கிறார். அவருக்கு ஊசி போட்டார்கள்,அறைக்குள் பூட்டி நாயை கடிக்கவிட்டார்கள் என்றெல்லாம் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் உண்மையா, பொய்யா என்பது தீர ஆலோசிக்க வேண்டிய விஷயம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ஒப்புக்கொள்ளும் வகையில் உடல் நிலை மற்றும் பேச்சுக்கள் இருக்கின்றனர். முகிலன் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவர் மனைவி ஒப்புக் கொள்கிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் முகிலன் போல இருப்பார் என்று கூறினால் நிர்மலாதேவி? அவர் வழக்கு  உணர்ச்சிகளால் மட்டுமே உருவானது. மாணவிகள் சிலரை அவர் தடம் மாற அழைத்தார் என்பது தான் வழக்கு. முகிலன் என்னை ஏமாற்றி உடலுறவு கொண்டார் என்பதையும், ஆந்தை மட்டுமே ஒரே இணையுடன் இருக்கும் மனிதர்கள் நாய்கள் போன்றவர்கள் என்று வகுப்பு எடுத்தவர்கள் எல்லாம் போலீசார் பொய் வழக்கு புனைகிறார்கள், அது அவர்கள் தனிப்பட்ட விஷயம் என்றெல்லாம் விமர்சனம் எழும் காலத்தில் நிர்மலாதேவி வேறுவகையில் பார்க்கப்படுகிறார். 

நிர்மலா தேவி மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வந்த போது ஊடகங்கள் அவரை சுற்றி நின்று கேள்வி எழுப்பின. தப்பிக்க முடியாதவகையில் சுற்றி சுற்றி வரவே இந்த முறை அவர் போட்ட வேடம் தான் மனநிலை பாதிக்கப்பட்ட வேடம்.

நமக்கு தெரிந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அலங்கோலமாக ஆடை உடுத்தி, பார்க்கவே பயம், பரிதாபம் உண்டாகும் படி இருப்பார்கள். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் ஆஜராக வந்த நிர்மலாதேவி கவர்ந்து இழுக்கும் வகையிலேய உடைகள் உடுத்தி வந்தார். கொஞ்சம் கூட வழக்கின் பாதிப்பு இருப்பது அவரை பார்ப்பவர்களுக்கு தெரியவே தெரியாது. ஆனால் அவர் கோர்ட் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து தியானம் செய்வது போல கண்களை மூடிக் கொண்டு பேசினார். அவரை மாட்டி விட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், தான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் புலம்பினார். அடிக்கடி ஏப்பம் விட்டு தான் இயல்பாக இல்லை என்று காட்டினார்.

அடுத்த நாள் இதே நாடகம் தர்கா ஒன்றில் தொடர்ந்தார். அங்கு அடக்கமாகி உள்ள மகானின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அல்லா வரச் சொன்னதாக அள்ளவிட்டுக் கொண்டிருந்தார். ஒரு வழியாக போலீசார் தலையிட்டு அவரை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டனர்.

இந்த இரண்டு நாடகங்கள் மூலம் நிர்மலாதேவி எல்லா ஊடகங்களும் தன்னை பற்றி பேச வேண்டும்; ஆனால் அது தனது வழக்கு பற்றியதாக இருக்க கூடாது என்ற அவரின் திட்டத்திற்கு நல்ல பலன் கொடுத்தது. நேற்று நிர்மலாதேவியின் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற மாதர் சங்கத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அப்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறி உள்ளது. இதன் காரணமாக நிர்மலாதேவியின் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை உச்சம் அடையலாம். அரைகுறை ஆடைகளுடன் கூட அந்த அம்மையார் வெளியே வரலாம்.

இதன் காரணமாக அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதா என்று பரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவிடும். அந்த சான்றிதழ் கிடைத்து விட்டால் அப்புறம் என்ன அவருக்கு ஆண்டவனே தண்டனை கொடுத்து விட்டான் என்று நீதிமன்றம் விடுதலை செய்து வழக்கிற்கு சுபம் போட்டுவிடும். மக்களும் வேறு பிரச்னைகளை வேடிக்கை பார்க்க போய்விடுவார்கள். இது போல நடந்தால் கட்டாயம் நீதியை எதிர்பார்த்தவர்கள் வேதனைப் பட வேண்டியதுதான். கொஞ்ச காலம் எந்த வழக்கையும் பத்திரிக்கை, ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று சட்டம் இயற்றினால் தான் நீதி வெல்லும். அதன் வெற்றி தான் இங்கு யாருக்கும் பிடிக்காதே.

newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP