கோஷ்டிக்கு ஒரு சீட்டா அழகிரி ஐயா...?

இன்றைய சூழ்நிலையில் பாஜக, அதிமுக கூட்டணியின் போது முதல்வர் பழனிசாமி நாங்கள் தொகுதிகள் தரவில்லை 5 எம்பிக்கள் தருகிறோம் என்று கூறியதைப் போல காங்கிரஸ் கட்சி கட்டாயம் வெற்றி பெறும் தொகுதிகளை பெற்று இருக்கலாம்.
 | 

கோஷ்டிக்கு ஒரு சீட்டா அழகிரி ஐயா...?

குடைக்குள் மழை திரைப்படத்தில் பார்த்திபனுக்கு கறவை மாடு  கடன் வாங்கிக் கொடுக்கும் போது வங்கி அதிகாரியிடம், மடிக்கொரு கையெழுத்தா என்று கேட்பார். அதைப் போல காங்கிரஸ் கட்சி கோஷ்டிக்கு ஒரு சீட்டு வாங்கி சந்தோஷப்பட்டது. 

கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தல் அதற்கு அடுத்த தேர்தல் ஆகியவற்றில் திமுக கூட்டணியே முதலிடம் பிடித்தது. 2004ம் ஆண்டு தேர்தலில் திமுக 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 0 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. 

கடந்த 2009ம் ஆண்டு தேர்தலிலும்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் 0 இடத்தில் வெற்றி பெற்ற அதிமுக, இந்த தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.  8 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு, தகுதிக்கு மீறிய இடங்கள் ஒதுக்கப்பட்டதாக கருதப்பட்டது. 

இதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக,காங்கிரஸ் கட்சியை ஏற்றுக் கொள்ள மறுத்தது. எவ்வளவோ காங்கிரஸ் கட்சி தலையால் தண்ணீர் குடித்து பார்த்தும் கூட திமுக திரும்பி கூட பார்க்கவில்லை. 2004ம் ஆண்டு இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த போது திமுக கூட்டணியை விட்டு விலகுவோம் என்று மிரட்டல் விடுத்தது. ஆனால் அப்போது அவ்வாறு செய்யாத திமுக 2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் சேர்க்காமல் இருக்க இலங்கை பிரச்னையையே  காரணம் காட்டியது.
 
அந்த தேர்தலில் ஒரு இடத்தை கூட காங்கிரஸ் கட்சி பெற முடியவில்லை. அதே நேரத்தில் இது வரையில் கூட்டணியில் இருந்தால் மட்டுமே எம்பி சீட் கிடைக்கும் என்ற நிலையில் இருந்த பாஜக அதிமுக, திமுக கூட்டணி இல்லாமல் 2 இடங்களில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் நடப்பு 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களை பெற்றுள்ளது. கோஷ்டிக்கு ஒரு சீட்டு என்ற அடிப்படையில் பெற்று இருப்பார்கள் போல. இத்தனை சீட்டுகள் பெற்றாலும் கூட அனைத்திலும் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகம் தான். 

அவர்கள் ஜாதகம் அப்படி.  அகில இந்திய அரசியலில் தனக்கு என்று தனி இடம் பிடித்த மணிசங்கரஅய்யர் மயிலாடுதுரை தொகுதியில் தோற்றதும், பிரதமராக வாய்ப்பு உள்ளவர் என்றும், நிதி அமைச்சர் பதவி வகித்தவருமான சிதம்பரம் முதன் முறையாக ஓட்டு எண்ணும் போது சிவகங்கை தொகுதியில் தோற்றதும், அடுத்த முறை எண்ணி வெற்றி பெற்றதும் வரலாறு.
 
காங்கிரஸ் பிரபலங்களே இப்படி தட்டு தடுமாறும் போது மற்றவர்கள் நிலை பற்றி சொல்லவே வேண்டாம்.  திமுக, அதிமுக கட்சிகள் பரஸ்பரம் தோல்வி அடைய செய்வதில் முயற்சி செய்வார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியிலோ ஒரு கோஷ்டி வெற்றிபெறுவதை மற்றொரு கோஷ்டியே விரும்பாது. இந்த காரணத்தால் காங்கிரஸ் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
 
திருமணத்தின் போது மாப்பிள்ளை மாற்றிய கதையாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியை வளர்த்த திருநாவுக்கரசர் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சிதம்பரத்தின் ஆதரவாளர் அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். அழகிரி சிறப்பாக செயல்படுவார் என்றாலும் கூட பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கு பரிச்சையம் இல்லாதது மிகப் பெரிய குறை. அவர் இன்னும் சில காலத்திற்குள் இந்த குறையை எப்படி நிறையாக மாற்றப் போகிறார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இவர் தலைவராக ஏற்றுக் கொண்டவரோ கார்த்தி சிதம்பரம், திமுகவின் அழகிரி முயற்சியால் வெற்றி பெற்றவர். அவர் எப்படி இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எந்த அளவிற்கு உழைப்பார் என்று தெரியவில்லை.
 
இன்றைய சூழ்நிலையில் பாஜக, அதிமுக கூட்டணியின் போது முதல்வர் பழனிசாமி நாங்கள் தொகுதிகள் தரவில்லை 5 எம்பிக்கள் தருகிறோம் என்று கூறியதைப் போல காங்கிரஸ் கட்சி கட்டாயம் வெற்றி பெறும் தொகுதிகளை பெற்று இருக்கலாம். அதற்கு பதிலாக இப்போது 10 தொகுதிகளை பெற்று இருக்கிறார்கள் எத்தனை எம்பிக்கள் பெறுவார்கள் என்பது தேர்தல் முடிவில் தான் தெரியவரும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP