சென்னைக்கு வயது 380!

'மதராசப்பட்டினம்' எனப்படும் 'சென்னபட்டினம்' உருவான தினமே, 'சென்னை டே' என கொண்டாடப்படுகிறது. 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் சென்னை தனி நகரமாக உருவானது. வந்தவாசியை ஆண்ட வேங்கடப்ப நாயக்கரிடம் இருந்து, கிழக்கிந்திய கம்பெனி ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கியது. அதுவே சென்னை நகரமாக உதயமானது.
 | 

வேங்கடப்ப நாயக்கர், அய்யப்ப நாயக்கர் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கரின் பெயரால் அந்த நகரம் அழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் சென்னை என பெயர் மாற்றம் பெற்றது. 

பல நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை நகரம் உருவான தினத்தை சிறப்பாக கொண்டாட சமூக ஆர்வலர்கள் சிலர் முனைப்பு காட்டினர். அதன் பலனாய், பல ஆண்டுகளாக பெரிய ஊடக வெளிச்சமின்றி கொண்டாடப்பட்ட சென்னை தின விழா, 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு சென்னை நகரம் தன் 380வது வயதில் காலடி எடுத்து வைக்கிறது. நாளை சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த வரம் முழுவதுமே ஆங்காங்கே கோலாகலமாக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

இன்று நெரிசல் மிகுந்த பரபரப்பாக காணப்படும் சென்னை நகரின் பல பகுதிகள் தனித்தனி கிராமங்களாகத்தான் இருந்தன. நாளடைவில் அவை ஒருங்கிணைக்கப்பட்டு, இன்றைய அகன்று விரிந்த சென்னை மாநகரம் உருவானது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP