தமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்!

நாட்டின், 17வது மக்களவை தேர்தலில், தமிழகத்தின், 38 தொகுதிகளில் இம்முறை, 4.19 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். இந்நிலையில், 1.72 கோடி பேர் வாக்களிக்காமல் தங்கள் ஜனநாயக கடமையை புறக்கணித்துள்ளனர்.
 | 

தமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்!

நாட்டின், 17வது மக்களவை தேர்தலில், தமிழகத்தின், 38 தொகுதிகளில் இம்முறை, 4.19 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். இந்நிலையில், 1.72 கோடி பேர் வாக்களிக்காமல் தங்கள் ஜனநாயக கடமையை புறக்கணித்துள்ளனர். 

நாட்டின், 17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 18ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம், 5 கோடியே 91 லட்சம் பேர் தகுதியுடைய வாக்காளர்களாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இவர்களில், 2 கோடியே 98 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 2 கோடியே 98 லட்சம் பேர் பெண்கள், 5,472 பேர் மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். 

தமிழகத்தின், 38 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில், 71 சதவீதம் பேர் வாக்களித்ததாக தேர்தல் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 4.19 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 
மீதமுள்ள, 1.72 கோடி பேர் தங்கள் ஜனநாயக கடமையை சரிவர செய்ய தவறியுள்ளனர். இம்முறை, 18 - 19 வயதுடைய 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துள்ளனர். இவர்கள் முதல் முறையாக வாக்களிக்கும் உரிமையை பெற்றனர். 

தமிழகத்தில் கடமை தவறிய 1.70 கோடி வாக்காளர்கள்!

அதே போல், 20 - 29 வயதுடையவர்களில், 1.18 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆக, 30 வயதுக்கு உட்பட்ட, இளம் வாக்காளர்கள், 1.26 கோடி பேர் இம்முறை வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில், 71 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதால், 1.72 கோடி பேர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றாமல் இருந்துள்ளனர். பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர், வயோதிகம் காரணமாக வாக்குச் சாவடிக்கு வர இயலாதோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர், வெளிநாடுகளில் வசிப்போர் என்ற வகையில், 71 லட்சம் பேர் வாக்களிக்க முடியாமல் போனதாக எடுத்துக் கொண்டாலும், ஒரு கோடி பேர், தேர்தலுக்காக அளிக்கப்பட்ட விடுமுறையில் உண்டு, உறங்கி வீணாய் பொழுதை கழித்துள்ளனர். 

ஒவ்வொரு ஓட்டின் முக்கியத்துவம் குறித்து தேர்தல் கமிஷன் சார்பில் எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இன்னும் திருந்தவில்லை என்பதே நிதர்சனம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP