எஸ்.ஐ கொலை.. துப்பாக்கியும் கிடைத்தது.. கத்தியும் கிடைத்தது... பின்புலம் என்ன? அதிரும் போலீசார்

எஸ்.ஐ கொலை.. துப்பாக்கியும் கிடைத்தது.. கத்தியும் கிடைத்தது... பின்புலம் என்ன? அதிரும் போலீசார்
 | 

எஸ்.ஐ கொலை.. துப்பாக்கியும் கிடைத்தது.. கத்தியும் கிடைத்தது... பின்புலம் என்ன? அதிரும் போலீசார்

எஸ்எஸ்ஐ வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு ஆயுதமான கத்தி போலீசார் பிடியில் சிக்கியுள்ளது. தமிழக-கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

எஸ்.ஐ கொலை.. துப்பாக்கியும் கிடைத்தது.. கத்தியும் கிடைத்தது... பின்புலம் என்ன? அதிரும் போலீசார்

இந்த கொலை தொடர்பாக தமிழ்நாடு - கேரளா ஆகிய இருமாநில காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்த திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்த அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவருக்கும் உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.ஐ கொலை.. துப்பாக்கியும் கிடைத்தது.. கத்தியும் கிடைத்தது... பின்புலம் என்ன? அதிரும் போலீசார்

அதன்படி கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் கழிவுநீர் ஓடையில் வீசப்பட்டிருந்த துப்பாக்கியை கொலை செய்த இருவரையும் நேரில் அழைத்துச் சென்று போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து, கொலைக் குற்றவாளிகள் இருவரையும் இரண்டாவது நாளாக கேரளாவில் விசாரணை நடத்தி வரும் நிலையில், வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை கண்டெடுத்தனர்.

எஸ்.ஐ கொலை.. துப்பாக்கியும் கிடைத்தது.. கத்தியும் கிடைத்தது... பின்புலம் என்ன? அதிரும் போலீசார்

தொடர்ந்து நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து நடத்திய விசாரணையில் அங்கு ஜாபர் என்பவருடம் கொடுத்து வைத்திருந்த கைபையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த கை பையை சோதனை செய்ததில், கத்தி மற்றும் மிட்டாய் வாங்கிய ரசிதும், ஒரு துண்டு சீட்டும் இருந்தன. 

எஸ்.ஐ கொலை.. துப்பாக்கியும் கிடைத்தது.. கத்தியும் கிடைத்தது... பின்புலம் என்ன? அதிரும் போலீசார்

அந்த துண்டுச் சீட்டில் "நாங்கள் இஸ்லாமிய போராளிகள்; இஸ்லாம் வளரும் வரை நாங்கள் போராடுவோம்” என்றும் “இஸ்லாம் நாடு இந்தியா” எனவும் மறு புறம் காஜா பாய் என வாசகங்கள் அடங்கிய துண்டு சீட்டும் கிடைத்துள்ளது. இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP