இராமேஸ்வரம் ஆலயத்தில் நடந்த அதிர்ச்சி! தலைமை குருக்கள் நீக்கம்!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தை செல்போன் கேமராவில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் தலைமை குருக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 | 

இராமேஸ்வரம் ஆலயத்தில் நடந்த அதிர்ச்சி! தலைமை குருக்கள் நீக்கம்!

ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. ஆசியாவின் மிக நீண்ட பிரகாரத்தை உடைய ஆலயமாகவும் இது கருதப்படுகிறது. பரிகார பூஜைகளுக்காகவும், முன்னோர்களின் சாபங்கள் நீங்குவதற்காகவும் தினந்தோறும் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்த வண்ணம் இருப்பார்கள். ராமநாதசுவாமி கோயிலில் மூலவா் உள்ள பகுதியில் குறிப்பிட்ட புரோகிதா்கள் மட்டுமே பூஜை செய்ய தினந்தோறும் அனுமதிக்கப்படுவர் . மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்லும் போது செல்போன் கொண்டு செல்ல கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ராமநாதசுவாமி கோயில் மூலவா் சிவலிங்கத்தின் புகைப்படம் ஞாயிற்றுக்கிழமை முதல் சமூக வலைதளங்களில் வெளியானது.

                                                                             இராமேஸ்வரம் ஆலயத்தில் நடந்த அதிர்ச்சி! தலைமை குருக்கள் நீக்கம்!

ஆலயத்தின் மூலவர் புகைப்படம் வெளியானதையடுத்து, இணை ஆணையா் கல்யாணி தலைமையில் நடைபெற்ற விசாரணையில் தலைமை குருக்கள் விஜயகுமாா் போனில் தான் மூலவா் படத்தை புகைப்படம் எடுத்திருந்தார் என்பது  உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆகம விதிகளின் படி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP