ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை

ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை
 | 

ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை

சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம் அண்ணா தெருவைச் சேர்ந்த விஜயவர்மன் தனது மனைவி கவுரி, 7 மாத குழந்தை தேவதிசா ஆகியோருடன் கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்ற பின்னர் காரில் நள்ளிரவில் வீடு திரும்பினார். அவருடன் காரில் உறவினர்களான ஜோதி (55), சுவர்ணலகரி (19), ஜீவிதா (23), அனுசியா தேவி (25), சுபாதேவி (39), லட்சுமி (50), மித்ரா (7) ஆகியோரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் ஆட்டையாம்பாளையம் பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை

பின்னர், தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்ப்புறத்தில் உள்ள சாலையில் சென்றது. அப்போது எதிர்ப்புறம் வந்து கேரள பதிவெண் கொண்ட கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயத்துடன் போராடிய நிலையில், அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் ஓடிவந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை

அங்கு 7 மாத குழந்தை உள்பட 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு காரில் வந்த கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த உசேன் மோன் (38),  உறவினர் முஸ்தபா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் மோதியதில் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்திருந்தது. இதனிடையே தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP