1. Home
  2. தமிழ்நாடு

மலேசியா மீது கடும் கட்டுப்பாடு! உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா!

மலேசியா மீது கடும் கட்டுப்பாடு! உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா!

காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். மலேசிய பிரதமரின் இந்த விமர்சனத்திற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த கட்டுப்பாடுகளால், மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மலேசியா ஒரு வருடத்தில் 19 மில்லியன் டன் பாமாயிலை உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் இந்த கட்டுப்பாடுகள் மலேசியாவை கடுமையாக பாதித்திருக்கின்றன.

இந்தியாவின் இந்த கட்டுப்பாடுகளால் நாங்கள் நிச்சயமாக கவலைப்படுகிறோம் என்று இதுகுறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசிய மலேசிய பிரதமர், நாங்கள் நிறைய பாமாயிலை இந்தியாவுக்கு விற்கிறோம், ஆனால் மறுபுறம், நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஏதாவது தவறு நடந்தால் அதை நாங்கள் உலகுக்கு சொல்ல வேண்டும். உண்மை என்னவென்றால், இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என கூறினார்.

இதைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பாமாயில் மட்டுமின்றி, மேலும் வர்த்தக கட்டுப்பாடுகளையும் கடுமையாக்க இந்தியா முயன்று வருகிறது. தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான தரக் கட்டுப்பாட்டு உத்தரவையும் இந்தியா அமல்படுத்தியுள்ளது. இப்படி அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது மலேசிய அரசு. மலேசிய மீது இந்தியா காட்டியிருக்கும் இந்த போக்கு உலக நாடுகளை இந்தியவை உற்றுநோக்க வைத்துள்ளது. எப்போதும் சமாதானப் போக்கை கடைப்பிடித்து வரும் இந்தியா, மலேசியா மீது இப்படி அதிரடி போக்கை கடைப்பிடித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடையவே செய்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like