சேவைக் கட்டணம் ரத்து! ரிசர்வ் பேங்க் அதிரடி அறிவிப்பு!

பிரதமர் மோடியின் கனவை நினைப்படுத்தும் விதமாக, டிஜிட்டலை மேம்படுத்தும் வகையில் ,விடுமுறை நாட்கள், வங்கி நேரம் முடிவு என்று இல்லாமல் நம் தேவைகளுக்கு ஏற்றாற்போல் விருப்பம் போல பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
 | 

வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் சிஸ்டம் மூலமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். சென்ற ஜூன் மாதம் முதல், ஆர்.டி.ஜி.எஸ். எனப்படும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (RTGS) மற்றும் நெஃப்ட் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் கிடையாது என்று  அறிவித்திருந்தது. இன்று  முதல் நெஃப்ட் மூலம் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சேவைக் கட்டணம் ரத்து! ரிசர்வ் பேங்க் அதிரடி அறிவிப்பு!

ஆர்.டி.ஜி.எஸ், நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ் ஆகியவற்றின் மூலமாக ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மின்னணு முறையில் பணப்பரிமாற்ற செய்ய முடியும். விடுமுறை நாட்களிலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். டிஜிட்டல் ஊக்குவிப்பு சேவையானது விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் நெஃப்ட் சேவை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த சேவை நீட்டிப்பு  பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இணையத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP