நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..! உறவினர்கள் கதறல்

நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..! உறவினர்கள் கதறல்
 | 

நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..! உறவினர்கள் கதறல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளியின் வாகனத்தில் தனது வீட்டிற்கு வந்த சிறுவன் அதே வாகனம் ஏறி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. நெல்லிக்குப்பம் அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் LKG பயிலும் சோழவள்ளி பகுதியை சேர்ந்த பரணி என்பவரது 4 வயது மகன் ஆத்விக்ரம் பள்ளி முடிந்த பிறகு அதே பள்ளியின் வாகனத்தில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். வாகனம் வீட்டுக்கு அருகே வந்தவுடன் ஆத்விக்ரமை இறக்கி விட்ட பள்ளி வாகன ஓட்டுனர் கார்த்திக் சிறுவன் சென்று விட்டதாக நினைத்து வாகனத்தை நகர்த்தியுள்ளார். அப்போது வாகனத்திற்கு முன்னர் சென்ற ஆத்விக்ரம் மீது பள்ளி வாகனம் ஏறியதில் ஆத்விக்ரம் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..! உறவினர்கள் கதறல்

அதைக்கண்ட உறவினர்கள் கூச்சலிட்டு பள்ளி வாகனத்தை நிறுத்தி ஆத்விக்ரமை மீட்டனர். பின்னர் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அங்கு ஆத்விக்ரமை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னதாகவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓட்டுனர் கார்த்திக்கை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் கண் முன்னரே நடைபெற்ற இந்த கோரச் சம்பவம் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP